சென்னைக்கும் வருகிறது புல்லட் ரயில்.. சென்னையில இருந்து இந்த ஊர்களுக்குதான் போக போகுது!

ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பாகவும் புல்லட் ரயில் (Bullet Train) சேவை இருக்கின்றது. இது முதலில் மும்பை - அஹமதாபாத் இடையிலேயே இயக்கப்பட இருக்கின்றது. ஆமாங்க, இந்தியாவிலேயே முதன் முதலில் புல்லட் ரயில் இந்த வழித் தடங்களிலேயே இயக்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டன. மேலும், அந்த பணிகள் மிக தீவிரமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. அதாவது, அதிக வேகத்தில் இயங்கும் புல்லட் ரயில் சேவைக்கான வழித்தடத்தை உருவாக்கும் பணிகளை இந்தியா அதீத வேகமாக மேற்கொண்டு வருகின்றது.

இந்த மாதிரியான சுழலிலேயே புல்லட் ரயில் சேவையை நாட்டின் வேற சில முக்கிய நகரங்களிலும் அரசு கொண்டு வர திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 8 புதிய நகரங்களை புதிதாக புல்லட் ரயில் சேவையை பெற இருக்கும் நகரங்களின் பட்டியலில் அரசு இணைத்திருக்கின்றது.

Chennai to get bullet trains

அதில் சென்னையும் அடங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த தகவல் சென்னை வாசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கின்றது. சென்னை புல்லட் ரயில் சேவையானது பெங்களூரு மற்றும் மைசூரு ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இன்னும் சில புதிய வழித் தடங்களிலும் புல்லட் ரயில் சேவை இயங்க இருக்கின்றது.

அந்தவகையில், டெல்லி - வாரணாசி, டெல்லி - அஹமதாபாத், டெல்லி - அம்ரித்சர், மும்பை - நாக்பூர், மும்பை - புனே - ஹைதராபாத் மற்றும் வாரணாசி - ஹவுரா ஆகிய வழித்தடங்களிலும் புல்லட் ரயில் சேவை தொடங்கப்பட இருக்கின்றது. ஆகையால், அந்தந்த நகர வாசிகள் தற்போது மகிழ்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

இந்தியாவின் முதல் புல்லட் ரயில் சேவையானது 2026 ஆம் ஆண்டில் தொடங்கிவிடும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே புதிய வழித்தடங்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ராஜ்ய சபா கூட்டத்தில் ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் இடம் ராஜ்ய சபா உறுப்பினர் எழுப்பிய கேள்வியின் வாயிலாக புதிய ரூட்டுகள் பற்றிய விபரங்கள் தெரிய வந்திருக்கின்றது.

மும்பை - அஹமதாபாத், வழித்தடம் சுமார் 508 கிமீ தூரம் இடைவெளியைக் கொண்டதாகும். 12 ஸ்டேஷன்களை இது உள்ளடக்கியிருக்கும். மும்பை, தானே, விரர், பாய்சர், வபி, பில்லிமோரா, சூரத், பரச், வதோதரா, ஆனந்த், அஹமதாபாத் மற்றும் சபர்மதி ஆகியவையே அவை ஆகும்.

இந்த ரூட்டில் புல்லட் ரயில் கடலுக்குள் அடியில் செல்லும் வகையில் சுரங்கம் அமைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே இந்த வழித்தடத்தின் மிக முக்கியமான சிறப்பாகும். 21 கிமீ தூரம் வரை கடலுக்குள் அடியிலேயே ரயில் பயணிக்கும். இதுதவிர, மேம்பாலம், நிலத்தடி மற்றும் நிலத்தின் மேற்பரப்பில் செல்லும் வகையிலும் இந்த வழித்தடம் இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இப்போது வரை பயன்பாட்டில் இருக்கும் அனைத்து ரயில்களைக் காட்டிலும் அதிக வேகத்தில் செல்லக் கூடியதாக புல்லட் ரயில்கள் இருக்கப் போகின்றன. அதன் உச்சபட்ச வேகம் மணிக்கு 350 கிமீ என கூறப்படுகின்றது. ஆனால், இதைவிட சற்று குறைவான வேகத்திலேயே இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மும்பை - அஹமதாபாத்தை 2 மணி நேரம் 10 நிமிடங்களுக்கு உள்ளாக கடக்கும் வகையில் இயக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பு 1.10 லட்சம் கோடி ஆகும். இதில் 88,000 ஆயிரம் கோடி ஜப்பான்ன் இடம் இருந்து கடனாக பெறப்பட்டு இருக்கின்றது. 0.1 சதவீதம் வட்டி விகிதத்திலேயே இந்தியா ஜப்பானிடம் கடன் வாங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விரைவில் புல்லட் ரயில் சேவை பயன்பாட்டிற்கு வர இருக்கின்றது. இது நாட்டின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சியில் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், தொழில்முனைவோரின் தேவையையும் இந்த ரயில் பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, December 12, 2024, 5:00 [IST]
English summary
High speed rail expansion bengaluru pune chennai and other cities on list
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+