இது நடந்தா விமான டிக்கெட் விற்பனை பெரிய சரிவை காணும்.. பயண நேரத்தை 10மணி நேரம் வரை குறைக்க போகும் புதிய ரயில்!

புதிய அதி-வேக ரயிலை பயன்பாட்டிற்குக் கொண்டு வருவதற்கான வேலையில் அரசு களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த புதிய அதிக வேக ரயில், சென்னை - ஹைதராபாத் இடையேயான பயணத்தை வெறும் 2 மணி நேரங்களிலேயே மேற்கொள்ளும் அளவிற்கு அதிக வேகத்தில் இயங்கக் கூடியது இருக்கும் என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவல் ரயில் பயணிகளை மட்டுமல்லாமல் விமான பயணிகளின் கவனத்தையும் மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது.

என்னதான் ரயில் போக்குவரத்து பாதுகாப்பானது மற்றும் விலை குறைவானதாக இருந்தாலும் ஒரு சிலர் தங்களுடைய உள்ளூர் பயணங்களுக்குகூட விமான சேவையையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சில மணி நேரங்களிலேயே இலக்கைச் சென்றடைய முடியும் என்பதே விமான சேவையைப் பயன்படுத்துவோர் பெரும்பாலானோரின் பதிலாக உள்ளது.

Hyderabad to chennai just over 2 hours by high-speed rail

இந்த மாதிரியான சூழலிலேயே விமானத்தை போல அதிக வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்ட ரயில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படுவதற்கான திட்டம் போடப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு அதிக வேக ரயில் வழிப் பாதைக்கான திட்டத்தையே தற்போது அரசு வகுத்திருக்கின்றது.

ஹைதராபாத் - சென்னை, ஹைதராபாத் - பெங்களூரு இந்த இரண்டு வழித்தடத்தை இணைக்கின்ற வகையில் அந்த அதி-வேக ரயில் பாதையானது அமைய உள்ளது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால் இந்த ரயிலால் ஹைதாராபாத் - சென்னை மற்றும் ஹைதராபாத் - பெங்களூரு இடையிலான பயண நேரம் 10 மணி நேரத்திற்கும் அதிகமாகக் குறையக் கூடும்.

ஆமாங்க, ஏற்கனவே சொன்னதை போல வெறும் 2 மணி நேரங்களிலேயே அந்தந்த இடங்களை அடைந்துவிடலாம். இன்னும் புரியும்படி சொல்ல வேண்டும் என்றால் இருந்து ஹைதராபாத்தில் இருந்து பெங்களூருவை 2 மணி நேரங்களிலும், ஹைதராபாத்தில் இருந்து சென்னையை 2 மணி நேரம் 20 நிமிடங்களிலும் வந்தடைந்துவிட முடியும்.

அதிக வேக ரயில் மணிக்கு 320 கிமீ வேகத்தில் இயக்கப்பட இருக்கின்றது. இதுவே பயண நேரத்தை மிகப் பெரிய அளவில் குறைக்க உள்ளது. இப்போதைய நிலவரப்படி மேலே குறிப்பிட்ட இடங்களுக்கு விமானங்களில் பயணிக்க 1.15 மணி நேரம் முதல் 1.20 மணி நேரங்கள் வரை எடுத்துக் கொள்கின்றன.

ஆனால், விமானம் புறப்படும் நேரத்திற்கு ஓரிரு மணி நேரம் முன்னரே விமான நிலையத்திற்கு வந்துவிட வேண்டும் என்கிற விதி உள்ளது. ஆகையால், பயண நேரத்துடன் சேர்த்து 2 அல்லது 3 மணி நேரங்கள் வரை விமான பயணத்திற்கு தேவைப்படுகின்றது. ஆனால், இந்த மாதிரியான எந்தவொரு சிக்கலும் புதிய ரயில் சேவையில் இருக்காது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த புதிய அதி-வேக ரயில் திட்டம் இப்போது மிகவும் தொடக்க நிலையில் உள்ளது. அடுத்து ஒரு சில ஆண்டுகளில் இந்த திட்டம் இறுதிக் கட்டத்தை எட்டிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை இந்த திட்டம் முழுமடைய எடுத்துக் கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதேவேளையில், இந்த ரயில் பயன்பாட்டிற்கு வரும் விமான போக்குவரத்து சேவையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

More from DriveSpark

Article Published On: Thursday, February 13, 2025, 20:03 [IST]
English summary
High speed rail to connect hyderabad chennai and bengaluru in two hours
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+