2014ல் காணாமல் போன மலேசிய விமானத்தை தேடும் பணியில் புதியதாக வந்திருக்கும் விசேஷ கப்பல்..!!

Written By:

2014ம் ஆண்டி மார்ச் 8ம் தேதி 239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணிகளை மீண்டும் முடுக்கிவிட்டுள்ளது மலேசிய அரசு.

இதற்காக ஓஷன்  இன்ஃபினிட்டி என்ற நிறுவனத்தின் மூலம் விமானத்தை தேடும் பணிகளில் ஈடுபடப்போவதாக மலேசியா தெரிவித்துள்ளது.

Recommended Video - Watch Now!
Watch Now | Indian Navy's MiG-29K Crashed In Goa Airport | Full Details - DriveSpark
மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு 2014ம் ஆண்டில் பயணிகள் ரக விமானமான எம்.ஹெச். 370 புறப்பட்டு சென்றது.

வானில் பறக்க தொடங்கிய சில மணி நேரங்களிலேயே அது மாயமானது. இந்த சம்பவம் இந்தியா உட்பட பல உலக நாடுகளையும் உலுக்கியது.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

எனினும், எம்.ஹெச். 370 பயணிகள் ரக விமானம் கடலில் விழுந்து மூழ்கி மாயமாகி இருக்கலாம் என்று கருதப்பட்டது.

விமானம் பறந்த பகுதிகளை வைத்து, அது இங்கு தான் விழுந்திருக்க வேண்டும் என்று கூறி சில பகுதிகளில் தேடும் பணிகள் தீவிரமடைந்தன.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

இந்த சம்பவம் நடந்த சில நாட்கள் கழித்து தென்-ஆஃப்ரிக்கா அருகே ஒரு விமானத்தின் உதிரிபாகம் மிதந்து வந்தது.

அதை சோதனை செய்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள், காணாமல் போன எம்.ஹெச். 370 விமானத்தின் பாகங்கள் தான் அது என்பதை உறுதி செய்தனர்.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

தென் - ஆஃப்ரிக்கா அருகே விமானத்தின் உதிரிபாகங்கள் கிடைத்ததால், மலேசிய பயணிகள் ரக விமானத்தின் தேடும் பணிகள் மேலும் தீவிரமடைந்தன.

Trending On Drivespark Tamil:

கான்டினென்ட்டல் ஜிடி மோட்டார் சைக்கிளுக்கு விடைக்கொடுத்த ராயல் என்ஃபீல்டு..!!

ஐஎஸ்ஐ முத்திரை இல்லாத ஹெல்மெட்டுகள் பயன்படுத்த வாகன ஓட்டிகளுக்கு தடை : காவல்துறை அதிரடி..!!

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த நிறுவனம் ஒன்று, இந்த விமானத்தை தேடும் பணிகளில் தீவிரமாக இறங்கியது.

விமானத்தின் உதிர்பாகங்களை வைத்தும், காற்றோட்டத்தையும் ஆராய்ந்து அந்த தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்றது.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

இருந்தாலும், அதற்கு பிறகு எந்தவித தகவல்களும் கிடைக்காத நிலையில் யூகங்களின் அடிப்படையில் சில கருத்துகளை முன்வைத்து, அந்த ஆஸ்திரேலிய நிறுவனம் மாயமான எம்.ஹெச். 370 விமானத்தின் தேடும் பணியை நிறுத்துக்கொண்டது.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

அப்போது முதல் இப்போது வரை 239 பயணிகளுடன் பீஜிங் நோக்கி பறந்த மலேசிய விமானம் எம்.ஹெச். 370 மாயமான சம்பவம் மர்மாகவே இருந்து வருகிறது. இதுவரை அந்த விமானம் என்ன ஆனது, எங்கு விழுந்தது என்பது தொடர்பான எந்த தகவல்களும் இல்லை.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

ஆனால் மலேசியா நாட்டின் தொடர்ந்து தீவரத்தால், தற்போது அந்த விமானத்தின் தேடும் பணிக்காக அமெரிக்காவை சேர்ந்த ஓஷன் இன்ஃபினிட்டி என்ற நிறுவனம் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

நார்வே நாட்டில் தயாரிக்கப்பட்ட ஒரு கடற்படை கப்பலை விமானம் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் அறிவித்துள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

ஜனவரி மற்றும் பிப்ரவரியில் நிலவும் காலநிலையை பார்த்து, தென்-கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதிகளில் ஓஷன் இன்ஃபினிட்டியின் கப்பல் தனது தேடுதல் பணியை துவங்கவுள்ளது.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

இந்த கப்பலில், கடலுக்கு அடியில் சென்று தானாகவே இயங்கக்கூடிய 7 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளதாம். ஜெட் ரக வேகத்தில் இயங்கும் இந்த கப்பலின் உதவியால், கடலுக்கு அடியில் விமானம் தேடும் பணிகள் நடைபெறவுள்ளன.

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

தற்போது தென்-ஆஃப்ரிக்காவின் கடற்பரப்பில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல் விரைவில் இந்திய பெருங்கடல் பகுதியை வந்தடையவுள்ளது.

Trending On Drivespark Tamil:

கூடுதல் சொகுசு வசதிகளுடன் வரும் சென்னை- பெங்களூர் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்!

யமஹா ஒய்.இசட்.எஃப்- ஆர் 15 3.0 பைக்கின் அறிமுக தேதி விபரங்கள் வெளிவந்தன

மாயமான மலேசிய விமானத்தை தேடு பணியில் ஒரு விசேஷ கப்பல்..!!

ஜனவரி 2ம் வாரத்தில் வந்தடைந்த பிறகு இந்த கப்பல் காணாமல் போன எம்.ஹெச். 370 விமானத்தை தேடும் பணிகளை தொடங்கும்.

அந்த விமானத்தை தேடும் பணிகளில் இம்முறை நிச்சயம் வெற்றியடைய வேண்டும் என தீவிரம் காட்டி வருகிறது மலேசியா.

Trending DriveSpark YouTube Videos

Subscribe To DriveSpark Tamil YouTube Channel - Click Here

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Read in Tamil: High Tech American Ship en Route To Resume Hunt For Disappeared MH370. Click for Details...
Story first published: Friday, January 5, 2018, 8:30 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark