அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

ஒப்பக் கூட்டமைப்பு தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தற்போது முடிவு செய்துள்ளது. அதன் படி இனி இந்தியாவில் பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாயப்புகள் இருக்கிறது.

By Balasubramanian

ஒப்பக் கூட்டமைப்பு தற்போது கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க தற்போது முடிவு செய்துள்ளது. அதன் படி இனி இந்தியாவில் பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாயப்புகள் இருக்கிறது. இந்தியாவின் அதிரடி நடவடிக்கையால் தான் ஒப்பக் கச்சா எண்ணெய் உற்பத்தியை அதிகரித்துள்ளது. குறிப்பிடத்தக்கது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் மூலப்பொருளான கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் நாடுகள் ஒருங்கிணைந்து, ஓபெக் என்ற கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. கத்தார், சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் உள்பட 14 நாடுகள் ஓபெக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக உள்ளன.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையை நிர்ணயிப்பதில் சர்வ வல்லமை பொருந்திய கூட்டமைப்பாக ஓபெக் திகழ்கிறது. தங்களிடம் உள்ள எண்ணெய் வயல்களில் வளம் காரணமாக, உலக பொருளாதாரத்தில், ஓபெக் கூட்டமைப்பு மறைமுகமாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

ஓபெக் கூட்டமைப்பு சில சமயங்களில், கச்சா எண்ணெய் உற்பத்தியை திடீரென குறைத்து விடுகிறது. கச்சா எண்ணெய்யின் விலை அதிகரிக்க இது காரணமாகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலையை பொறுத்தே, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

கடந்த 2016ம் ஆண்டு கச்சா எண்ணெனயின் விலை சர்வசேத அளவில் குறைந்தது. 2013-2014ல் 110 டாலருக்கு விற்பனையாகி வந்த கச்சா எண்ணெய் 2016ல் 28 டாலாக குறைந்தது. இந்த விலை குறைவை சமாளிக்க ஓப்பக் நிறுவனம் தங்கள் தயாரிப்பை குறைக்க முடிவு செய்தது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

தற்போது உலக கச்சா எண்ணெய் சந்தையில் 60 சதவீத வளத்தை வைத்துள்ளது இந்நிறுவனம் தயாரிப்பை குறைக்கும் பட்சத்தில் ஏற்படும் தட்டுப்பாடை கணக்கிட்டு விலையை அதிகரித்து விடலாம் என திட்டமிட்டது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

ஒப்பக் கூட்டமைப்பின் இந்த திட்டம் தெரிந்தும் பல நாடுகள் எதுவும் செய்யமுடியாமல் கையறு நிலையில் இருந்தனர். ஆனால் அவ்வப்போது இந்தியா போன்ற சில நாடுகள் இதை எதிர்த்து கேள்விகேட்டு வந்தனர். தற்போது விலை சற்று அதிகரத்துள்ள நிலையில் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என கூறிவந்தது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

ஆனால் ஒப்பக்க கூட்டமைப்பு இதை காதுகொடுத்து கூட கேட்பதாக தெரியவில்லை. இதன் விலைவாக இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பெட்ரோல் விலை ஏற்றமடைய துவங்கியது. வரலாறு காணாத உச்சத்தை பெட்ரோல் விலையை எட்டியததை உணர்ந்த இந்திய அரசு இதற்கு ஒரு முடிவு கெட்ட முடிவு செய்தது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

இதையடுத்து ஒப்பக் குழுமத்திடம் இருந்து அதிகமாக கச்சா எண்ணெய்யை கொள்முதல் செய்யும் பெரிய நாடுகளான இந்தியாவும் சீனாவும் கைகோர்க்க முடிவு செய்தன. இந்தியா சீனாவுடன் மேலும் சில நாடுகள் இணைந்து ஒப்பக்க போன்ற ஒருகூட்டமைப்பை உருவாக்க முடிவு செய்தனர்.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

இந்த கூட்டமைப்பு மூலம் ஒப்பக் குழுமத்தை ஒழித்து கட்ட முடிவு செய்தது. இதற்காக சீனாவும் கடந்த ஏப் மாதமே சம்மதம் தெரிவித்திருந்தது. உலகின் ஒட்டு மொத்த கச்சா எண்ணெய் சந்தையில் 17 சதவீதத்தை இந்த இருநாடுகளும் தான் வாங்குகிறது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

தற்போது இந்தியா மற்றும் சீனாவுடன் ஜப்பான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளை இணைக்கவும் முடிவு செய்யப்பட்டது. உலகில் அமெரிக்கா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் தான் அதிக அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கின்றனர்.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

இந்த கூட்டமைப்பில் முடிந்தால் அமெரிக்காவையும் இணைந்து ஒப்பக்வுடன் பேரம் பேசலாம் எனவும் அவர்கள் ஒத்துவரவில்லை என்றால் அமெரிக்காவில் ஏற்கனவே தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யை வாங்கலாம் எனவும் முடிவு செய்தனர்.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

தற்போது ஒரு நாளுக்கு 6.9 மில்லியன் அதாவது 69 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் தேவைப்படுகிறது. இந்தியாவின் இந்த நடவடிக்கை குறித்து கடந்த சில தினங்களுக்கு முன் செய்தி வெளியானது. இதையடுத்து ஒப்பக் கூட்டமைப்பு சார்பில் நடக்கவுள்ள கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை இந்த கூட்டமைப்பின் கூட்டம் நடந்தது. இதில் தற்போது தயாரிக்கப்படும் கச்சா எண்ணெய்யின் அளவை விட இனி ஒரு நாளைக்கு 1 மில்லியன் அதாவது 10 லட்சம் பேரல் அதிகம் தயாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

தற்போது இந்தியாவிற்கு 4.5 மில்லியன் அதாவது 45 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் நமக்கு தினமும் தேவைப்படுகிறது. தற்போது அதை விட குறைவாக கிடைப்பதால் இதை ஈடுசெய்ய விலை அதிகமாக இருக்கிறது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

தற்போது ஒப்பக் குழுமம் கச்சா எண்ணெய் தயாரிப்பை அதிகரித்துள்ள நிலையில் இனி இந்தியாவில் பெட்ரோல், எல்பிஜி, எல்என்ஜி ஆகிய பொருட்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அரபுகளை அடி பணிய வைத்தது இந்தியா... இனி பெட்ரோல் விலை படிப்படியாக குறைய வாய்ப்பு...

2023ம் ஆண்டில் உலகின் ஒட்டு மொத்த கச்சா எண்ணெய்யின் தேவை 104.7 மில்லியன் பேரலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேவையை எதை கொண்டு ஈடு செய்யப்போகிறோம் என்ற திட்டமே நம்மிடம் இல்லை என்பது பரிதாபத்திற்குரிய விஷயமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்

Most Read Articles
English summary
Higher Opec output may ease fuel prices.Read in Tamil
Story first published: Monday, June 25, 2018, 19:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X