தேசிய நெடுஞ்சாலைகளில் கடை வச்சிருக்கிறவங்களுக்கு வரப்போது ஆப்பு! அதிகாரிங்க ஒவ்வொரு கடையா வரப்போறாங்க!
நெடுஞ்சாலைகளில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு மற்றும் நில அபகரிப்பு ஆகியவற்றை அகற்ற தற்போது தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்துள்ளது. இதற்காக புதிய உத்தரவுகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிறப்பித்துள்ளது. இதன்படி விரைவில் தேசிய நெடுஞ்சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலை என்பது இந்தியாவின் முதுகெலும்பு என சொல்லலாம். இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு பொருள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு விரைவாக நகர இந்த தேசிய நெடுஞ்சாலை என்பது பயன்பட்டு வருகிறது. பல முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைகள் தற்போது கட்டமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது.

தினமும் கோடிக்கணக்கான வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தி வருகின்றன. இப்படியாக தேசிய நெடுஞ்சாலையை பயன்படுத்தும் வாகனங்களுக்கு ஆங்காங்கே சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டு சுங்க கட்டணங்கள் வசூல் செய்யப்பட்டு வருகிறது. இந்த சுங்க கட்டண வசூல் மூலம் சாலை பராமரிப்பு மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
இப்படியாக தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள தனியார் நிலப் பகுதியில் இருப்பவர்கள் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமாக உள்ள இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர். சிலர் அத்துமீறி தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தை அபகரித்து அவர்கள் சொந்தமாக கட்டுமானங்களை ஏற்படுத்தி பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மாதம் உச்சநீதிமன்றத்தில் இது குறித்த வழக்கு ஒன்று நடந்தது. அந்த வழக்கில் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் அதிகமாக ஆக்கிரமிப்பு இருப்பதாகவும் அதை அகற்ற தேசிய நெடுஞ்சாலை துறை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என விமர்சனம் செய்தது. இந்த விமர்சனத்திற்கு பதில் அளிக்கும் வகையில் தேசிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதன்படி தேசிய நெடுஞ்சாலை துறையில் உள்ள அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள அதிகாரமிக்க அனைத்து அதிகாரிகளுக்கும் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அவர்கள் இணைந்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டறியவும், தேசிய நெடுஞ்சாலை இடத்தை தனியார் அபகரித்து இருந்தால் அதை கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இப்படியாக கண்டறியப்படும் ஆக்கிரமிப்புகள் மற்றும் அபகரிப்புகள் ஆகியவற்றை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதை அப்பகுதியில் உள்ள அதிகாரிகள் முறையாக நோட்டீஸ் அனுப்பி ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கும் அபகரிப்பு செய்தவர்களுக்கும் தங்கள் ஆக்கிரமிப்புகளையும் அபகரிப்புகளையும் அகற்ற கால அவகாசம் வழங்கி அதையும் மீறி தொடர்ந்து ஆக்கிரமிப்பில் இருக்கும் தனியார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இப்படியாக அரசு தரப்பிலிருந்து அக்கிரமிப்புகள் மற்றும் அபகரிப்பு நிலப்பகுதிகளில் உள்ள கட்டுமானங்கள் எல்லாம் அகற்றப்பட்டால் அந்த கட்டுமானங்களை அகற்றுவதற்கான செலவினங்களை குறிப்பிட்ட தனியார் மீது அபராதமாக விதித்து வசூல் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் விரைவில் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்பு அகற்றம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக சுங்கச்சாவடிகளை ஒட்டி உள்ள பகுதிகளில் தனியார்கள் கடை போடுவதன் பேரில் பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த கடைகள் மீதான நடவடிக்கைகள் எடுக்கப்படும் இதுபோக விளம்பர பதாகைகள் வைப்பதற்காக தேசிய நெடுஞ்சாலை துறையின் இடத்தில் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது. இதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியா முழுவதும் தேசிய நெடுஞ்சாலை என்பது மக்களின் போக்குவரத்து வசதிக்காக உருவாக்கப்பட்ட கட்டுமான அமைப்பாகவும் இதை பயன்படுத்தி தனியார்கள் லாபம் பெறுவதற்காகவும், பணம் சம்பாதிப்பதற்காகவும் அதை ஆக்கிரமிப்பு செய்தும் அபகரிப்பு செய்து வைத்திருக்கிறார்கள். இது பொது மக்களுக்கு இடையூறாக இருக்கிறது. அகற்ற எடுக்கப்படும் நடவடிக்கை நிச்சயம் வரவேற்கப்பட வேண்டியது.


Click it and Unblock the Notifications









