ஏப். 1ம் தேதி முதல் கிடுகிடுவென உயரப்போகும் டோல்கேட் கட்டணம்! அதிகமான பணத்தை ரீசார்ஜ் பண்ணி வச்சுக்கோங்க!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மிகவும் முக்கியமான ஒரு விஷயமாகும். மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கத் தேசிய நெடுஞ்சாலை தான் பாதுகாப்பான, விரைவான பயணத்தைச் செய்ய உதவுகிறது. ஆனால் தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்க வேண்டும் என்றால் குறிப்பிட்ட தூரத்திற்கு ஒன்று என அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் எல்லாம் மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வருகிறது. சுங்கச்சாவடிகளையும் அந்த அமைச்சகமே நெடுஞ்சாலைகள் ஆணையங்கள் மூலம் தனியார் நிறுவனங்களுக்கு ஏலம் விட்டு நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தப்போவதாக அறிவித்துள்ளது.

ஏப். 1ம் தேதி முதல் கிடுகிடுவென உயரப்போகும் டோல்கேட் கட்டணம்! அதிகமான பணத்தை ரீசார்ஜ் பண்ணி வச்சுக்கோங்க!

அதன்படி வரும் ஏப் 1ம் தேதி முதல் இந்தியா முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் தற்போது வசூலிக்கப்பட்டு வரும் கட்டணத்தை விட 5 முதல் 10 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. இதற்கான ஆவண பணிகள் எல்லாம் நடந்து வருகிறது. இதை நெடுஞ்சாலை அமைச்சகத்திடம் மார்ச் 25ம் தேதி சமர்ப்பிக்கிறது. அமைச்சகம் அனுமதியளித்ததும் ஏப்1 முதல் இது நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்வைப் பொருத்தவரை இலகு ரக வாகனங்களுக்கு ஒரு ட்ரிப்பிற்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 5 சதவீதம் அதிகமாகவும், கன ரக வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் தொகையிலிருந்து 10 சதவீதம் அதிகமாகவும் ஏப் 1ம் தேதி முதல் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும் எனத் தெரிய வருகிறது. ஃபாஸ்ட்டேக் முறையில் தற்போது கட்டண வசூல் நடப்பதால் கார்டில் கழிக்கப்படும் தொகை அதிகமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் கடந்த 2022ம் தேதி இப்படியாக டோல்கேட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அப்பொழுது 10 முதல் 10 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. இதனால் வாகனங்கள் அப்பொழுது செலுத்தி வந்த கட்டணத்தை விட ரூ10 முதல் ரூ60 வரை கட்டணம் அதிகமாகச் செலுத்த வேண்டியது இருந்தது. தற்போது மத்திய அரசு எக்ஸ்பிரஸ் சாலைகளில் அதிக கட்டணத்தை வசூலிக்கிறது. அதன் படி ஒரு கி.மீ ரூ2.19 கட்டணமாக வசூலிக்கிறது .

மாத பாஸ்

இந்த எக்ஸ்பிரஸ் சாலை கட்டணமும் வரும் ஏப்1ம் தேதி முதல் கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் சுங்கச்சாவடி கட்டணம் குறித்த சட்டம் கடந்த 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. தற்போது வரை அந்த சட்டத்தின்படி பொதுமக்களில் சிலருக்கு மட்டும் சுங்க கட்டணத்திலிருந்து விலக்கு எனச் சட்டம் சொல்லவில்லை.

ஆனால் தற்போது சுங்கச்சாவடியிலிருந்து சுமார் 20 கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களுக்குச் சுங்கச் சாவடியில் மாத பாஸ் ஒன்று வழங்கப்படுகிறது. ரூ315 என்ற விலையில் இந்த பாஸ் வழங்கப்படுகிறது. இதைப் பயன்படுத்திக் குறிப்பிட்ட மாதத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் சுங்கச் சாவடிகளைக் கடந்து செல்ல முடியும். இந்த பாஸ் சர்வீஸ் சாலை அல்லது வேறு வழிகள் இல்லாத சாலைகளைக் கொண்ட சுங்கச்சாவடிகளில் மட்டுமே வழங்கப்படுகிறது.

வசூல் நிலவரம்

இந்தியாவில் கடந்த 2022ம் ஆண்டு தேசிய நெடுஞ்சாலையில் ரூ33,881.22 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலாகியுள்ளது. இது கடந்த 2021ம் ஆண்டு வசூலி ஒப்பிடும் போது 21 சதவீதம் அதிகமாகும். கடந்த 2018-19 நிதியாண்டை ஒப்பிடும் போது சுமார் 32 சதவீதம் வசூல் அதிகமாகியுள்ளது. அந்த நிதியாண்டில் வெறும் ரூ1,48,405.30 கோடி வசூலாகியுள்ளது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி கடந்த 2022ம் ஆண்டு ஒரு நாளுக்குச் சராசரியாக ரூ139.32 கோடி கட்டணமாக வசூலாகியுள்ளது. இதில் பெரும்பாலான பணம் ஃபாஸ்ட்டேக் கருவி மூலம் பரிவர்த்தை செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட்டேக் இல்லாத வாகனங்களுக்கு இரு மடங்க கட்டணம் என்ற கொள்கையை மத்திய அரசு வகுத்துள்ளது.

இந்த கொள்கைக்கு எதிராக டில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை சுங்கச்சாவடி கட்டண உயர்வு குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.

More from DriveSpark

Article Published On: Monday, March 6, 2023, 9:20 [IST]
English summary
Highway toll tax likely to increase from April know full details
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+