8 வருசத்துக்கு முன்னாடி நடந்த விபத்துக்கு இப்ப வந்த தீர்ப்பு! நடந்தது இது தான்!

இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகளில் காரை நிறுத்தும் போது முறையான எச்சரிக்கை சிக்னல்களை செய்யாவிட்டால் அது கவனக்குறைவாக, சாலை விதிகளை மதிக்காமல் கார் ஓட்டியதாக கருதப்படும் என சுப்ரீம் கோர்ட் தற்போது அறிவுறுத்தியுள்ளது. சாலை விபத்து குறித்து நடந்த ஒரு வழக்கில் இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2017ம் ஆண்ஐ நடந்த சாலை விபத்து குறித்த வழக்கு ஒன்று சூப்ரீம் கோர்ட்டில் 2 பேர் கொண்ட நீதிமன்ற பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இதன்படி கடந்த 2017ம் ஆண்டு முகமது ஹக்கீம் என்ற மாணவர் காரில் செல்லும் போது முன்பு சென்ற வாகனம் திடீரென நின்றால் அந்த வாகனத்தில் சென்று மோதினார். இவர் தீடீரென மோதிய நிலையில் பின்னால் வந்த பஸ் இவரது வாகனத்தின் மீது மோதியது. இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

Highways Supreme Court verdict

இந்த வழக்கு குறித்து நடந்த விசாரணையில் ஒரு வாகனம் திடீரென தேசிய நெடுஞ்சாலையில் எந்த விதமான சிக்னல்களையும் வழங்காமல் வாகனத்தை நிறுத்தியதால் பின்னால் வந்த வாகனங்களுடன் மோதி பெரிய விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது

இதனால் தேசிய நெடுஞ்சாலைகளில் வாகன ஓட்டி எந்த அவசர சூழ்நிலையாக இருந்தாலும், முடிந்தளவிற்கு ரோட்டில் வரும் சக டிரைவர்களுக்கு தான் வாகனத்தை நிறுத்தப்போவதாக சிக்னல் செய்ய வேண்டும். இதை செய்யவில்லை என்றால் அவர் கவனக்குறைவாக வாகன ஓட்டியதாகவும், சாலை விதிகளை மதிக்காமல் வாகன ஓட்டியதாகவுமே கருதப்படுவார் என தெரிவித்ள்ளது.

Highways Supreme Court verdict

சாலைகளில் ஸ்பீடு பிரேக்கர் உள்ளிட்ட தடைகள் குறித்து போதுமான எச்சரிக்கை பலகை இல்லை என்றாலும் வாகன ஒட்டுநர் அதை கவனித்துவிட்டால் முடிந்தளவிற்கு பின்னால் வரும் வாகனத்தை எச்சரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலையில் உள்ள தடை அல்லது எமர்ஜென்ஸி போன்ற காரணங்களுக்காக வாகனத்தை நிறுத்த வேண்டிய சூழ்நிலை வந்தாலும் பின்னால் வரும் வாகன ஓட்டியை எச்சரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பு செல்லும் வாகனத்திற்கு பின்னால் வரும் வாகனத்தை எச்சரித்து அபாயத்தை குறைக்க அல்லது தடுக்க வேண்டிய பொறுப்பு இருப்பதாக நீதி பதிகள் தெரிவித்துள்ளன. பொதுவாக தேசிய நெடுஞ்சாலைகளில் அதிக வேகம் என்பது சாதாரணமா விஷயம் தான். அதில் பயணிக்கும் வாகனத்தை இயக்கும் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்த வேண்டும் என்றால் அவர் உடனியாக சக வாகன ஒட்டிகளுக்கு சிக்னல் தர வேண்டும் என எச்சரித்துள்ளது.

Highways Supreme Court verdict

இந்த வழக்கில் முதலில் நின்ற காரை ஓட்டி சென்ற டிரைவர் தனது மனைவி கர்ப்பமாக இருந்தார். அவரது தீடீரென அவசர உதவி தேவைப்பட்டதால் காரை நிறுத்தியதாக கூறியுள்ளார். இந்நிலையில் கோர்ட் இந்த விபத்திற்கு 50 சதவீதம் முதலில் காரை நிஅத்தியவர் காரணம் எனவும் 30 சதவீதம் போதுமான நேரம் இருந்தும் பஸ்ஸை நிறுத்தான பஸ் டிரைவர் 30 சதவீதம் காரணம் எனவும், முகம்மது ஹக்கீம் 20 சதவீத காரணம் என உத்தரவிட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாகன ஓட்டிகள் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் போது வாகன ஓட்டிகள் கவனமாக இருக்க வேண்டும். முக்கியமாக வாகனத்தை நிறுத்தும் போது இவர்கள் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை இந்த வழக்கு சுட்டி காட்டுகிறது.

More from DriveSpark

Article Published On: Friday, August 1, 2025, 11:40 [IST]
English summary
Highways supreme court verdict driver warning before halting
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X