ரூ14 லட்சத்திற்கு நம்பர் பிளேட் வாங்கி ஸ்கூட்டருக்கு மாட்டிய தொழிலதிபர்! ஏன் தெரியுமா?
இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் ஒரு தனது ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டிக்கு ரூ14 லட்சம் மதிப்பில் நம்பர் பிளேட்டை வாங்கி பொருத்தியுள்ளார். இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவ்வளவு காஸ்ட்லியான நம்பர் பிளேட்டை அவர் ஏன் பொருத்தினார்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
இமாச்சல பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் பகுதியை சேர்ந்தவர் சஞ்ஜீவ் குமார். இவர் அந்த நகரில் ஹார்டுவேர் டிரேடராக இருந்து வருகிறார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் வாகனங்களுக்கான ஃபேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஆன்லைனில் ஏலம் விடப்படும். இப்படியாக ஏலம் விடப்படும் போது அதை அதை அதிக தொகைக்கு ஏலம் எடுப்பவர்களுக்கு எந்த நம்பர் ஒதுக்கப்படும். அவர்கள் ஏலத்தொகையை செலுத்தி சொந்தமாக்கிக்கொள்ளலாம்.

இப்படியாக அந்த நம்பரை சொந்தமாக்கிய பிறகு அவர்கள் வாகனங்களை வாங்கி அந்த வாகனத்திற்கு குறிப்பட்ட நம்பர் பிளேட்டை பதிவு செய்து கெள்ள முடியும். இப்படியாக இமச்சல பிரதேச மாநிலத்தில் HP21C-0001 என்ற நம்பர் பிளேட் ஏலத்திற்கு வந்த போது சஞ்ஜீவ் குமார் இந்த நம்பர் பிளேட்டை ஆன்லைன் மூலம் ஏலம் எடுத்தார். இந்த நம்பருக்கு மற்றொருவரும் ஆசைப்பட்ட நிலையில் ஏல தொகை அதிகமாக போனது.
இருந்தாலும் ரூ14 லட்சம் கொடுத்து இவர் இந்த நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுத்தார். இந்நிலையில் இந்த நம்பரை அவர் ஒரு காஸ்ட்லியான காரை வாங்கி அதில் பொருத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இவர் யாரும் எதிர்பாராத விதமாக ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டரை வாங்கி அதில் இந்த நம்பரை பொருத்தியுள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இவர் ஹோண்டா நிறுவனத்தின் ஆக்டிவா 125 ஸ்மார்ட் ஸ்கூட்டரில் தான் இந்த நம்பர் பிளேட்டை பொருத்தியுள்ளார். கடந்த 16ம் தேதி தான் இந்த ஸ்கூட்டரின் பதிவும் நடந்துள்ளது. இந்த செய்தி தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இது குறித்து பேசி வருகின்றனர்.
இப்படியாக வாகன நம்பர் பிளேட்டை ஆன்லைன் மூலம் ஏலம் விடும் நடைமுறை இமாச்சல பிரதேசத்தில் மட்டுமல்ல பல மாநிலங்களில் இருக்கிறது. இப்படியாக ஏலத்தில் வசூலாகும் தொகை நேரடியாக அரசின் கஜானாவிற்கு செல்கிறது. இந்த பணத்தை செலுத்தியதற்காக அதை பெற்றவருக்கு வேறு எக்ஸ்ட்ரா சலுகை எதுவும் கிடையாது. இவர் வாகனத்தை பதிவு செய்யும் போது மற்ற கட்டணங்கள் அனைத்தும் செலுத்த வேண்டும்.
இந்த தொகை குறிப்பிட்ட நபருக்காக ஒதுக்குவதற்காக மட்டுமே செலுத்தப்படும்தொகையாகும். இப்படியாக பல மாநிலங்கள் போன்ஸி நம்பர் பிளேட்களை விற்பனை செய்தவன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வருகின்றனர். சமீபத்தில் சிம்லா பகுதியில் இப்படியாக ஒரு நம்பர் பிளேட் ரூ1 கோடிக்கு ஏலம் போன நிலையில் அதை ஏலத்தில் எடுத்தவர் போலியான நபர் என தெரியவந்தது. இறுதியாக அரசு அந்த ஏலத்தை ரத்து செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பல மாநிலங்களில் ஃபேன்ஸி நம்பர் பிளேட் மூலம் அரசு அதிகமாக சம்பாதிக்கிறது. தமிழகத்தில் ஆன்லைன் ஏல முறை அமலில் இல்லை. இமாச்சல பிரதேசத்தில் இப்படியாக ஒருவர் ரூ1 லட்சம் ஸ்கூட்டருக்கு ரூ14 லட்சத்தில் நம்பர் பிளேட் வாங்கியது குறித்து நீங்கள் நினைப்பது என்ன? கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









