காரில் இருந்தவங்க இதை வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டாங்க! மண்சரிவில் இருந்து தப்பிக்கும் திகிலூட்டும் வீடியோ
ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் மலைப்பாதையில் திடீரென ஏற்பட்ட மண்சரிவில் இருந்து சுற்றுலா பயணிகள் சென்ற கார் நூலிழையில் எந்த சேதாரமும் இன்றி தப்பித்துள்ளது. இதுகுறித்து இணையத்தில் வெளியாகியுள்ள, பார்ப்போரை பதற வைக்கும் வீடியோவை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
மலைகளுக்கும், இயற்கையான சூழலுக்கும் பெயர் பெற்றது வட இந்திய மாநிலமான ஹிமாச்சல பிரதேசம் ஆகும். இதனாலேயே இந்த மாநிலத்திற்கு எப்போதும் அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் சென்றுவருவது வழக்கம். அதிலிலும் கோடை விடுமுறை நேரங்களில் கூட்டம் அள்ளும். இதன் காரணமாகவே, ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் முக்கிய வருவாய்களுள் ஒன்றாக சுற்றுலா துறை விளங்குகிறது.

ஆனால் எங்கு அழகு உள்ளதோ அங்கு பிரச்சனையும் உள்ளது என்று பலர் கூற கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதற்கேற்றாற் போல், ஹிமாச்சல பிரதேசத்தில் அவ்வப்போது சிறு சிறு நிலச்சரிவுகளும், கனமழையின் காரணமாக வெள்ளப்பெருக்கும் ஏற்படுவது வழக்கம். அவ்வாறு, இந்த மாநிலத்தில் பிரபலமான சிம்லா மாவட்டத்தில் உள்ள சிறிய கிராமமான டட்யாரில் சமீபத்த்தில் மலைப்பாதையில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
டட்யார் கிராமத்தில் மலைகள் வழியாக செல்லும் முக்கிய சாலையில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளது. திடீரென ஏற்பட்ட இந்த மலை மண்சரிவினால் அதிகளவிலான மண் மற்றும் பாறை கற்கள் சாலையில் விழுந்துள்ளன. இந்த மண் & பாறை கற்கள் விழுந்தது ஹிமாச்சல பிரதேசத்தின் ஓர் முக்கிய நெடுஞ்சாலையில் ஆகும். நெடுஞ்சாலையின் ஒருபக்கத்தில் விழுந்ததாலும், விழுந்த வேகத்தில் மண் & பாறைகள் சாலையின் மறுப்பக்கம் வரையில் தெறித்து சென்றுள்ளன.

நல்லவேளையாக மண் சரிவை நேரடியாக சந்தித்த நெடுஞ்சாலையின் ஒருபக்க பாதையில் எந்த வாகனமும் வரவில்லை. ஆனால் மறுபக்க பாதையில் 2, 3 கார்கள் அந்த நேரத்தில் சென்றுள்ளன. இதில் ஹூண்டாய் வெர்னா கார் மண்சரிவை கண்டதும் வேகமாக அந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றுவிட்டது. ஆனால் அதற்கு பின்னால் வந்த மற்றொரு கார் மண் சரிவை நேரடியாக எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது.
அதாவது அந்த காருக்கு முன்பக்கத்திலும் பாறைகள் விழுந்துள்ளன, அதேநேரம் பின்பக்கத்திலும் பாறை கற்கள் விழுந்துள்ளன. குறிப்பாக ஒரு கட்டத்தில், பெரிய அளவிலான பாறை கல் ஒன்று, மலை மேல் இருந்து கீழே விழுந்த வேகத்தில் சாலையின் மத்தியில் இருந்த டிவைடரில் மோதி அந்த குறிப்பிட்ட காருக்கு முன்னால் பறந்து விழுந்துள்ளது. பார்ப்போரை பதற வைக்கும் அந்த வீடியோ இதோ...
Narrow escape of a tourist in a landslide near Parwanoo, Himachal Pradesh. pic.twitter.com/8O8BDMnd0d
— Gagandeep Singh (@Gagan4344) July 7, 2023
வீடியோவை பார்க்கும் நமக்கு ஒரு கட்டத்தில் பாறை கல் கார் மீது மோதிவிடும் என்றே தோன்றுகிறது. ஆனால், சமார்த்தியமாக யோசித்த ஓட்டுனர் காரை வேறுப்பக்கம் திருப்பி மோதலை தவிர்த்துள்ளார். சாலையின் டிவைடரின் மோதியதால், தரையோடு செல்லாமல் அந்த பாறை கல் குறிப்பிட்ட அடி உயரத்திற்கு பறந்து சென்றுள்ளது. அதாவது, அந்த பாறை கல்லை ஓட்டுனரும், காரில் இருந்த மற்ற பயணிகளும் தங்கள் கண்முன் கண்டு இருப்பர்.
உண்மையில், உருண்டு செல்லும் பாறையை கண்முன் பார்த்த பயத்திலேயே டிரைவர் காரை வேறுப்பக்கம் திருப்பி இருக்க வேண்டும். அதுவே தரையோடு உருண்டு சென்று இருந்தால், பாறை கல்லுடன் கார் மோதலுக்கு உள்ளாகி இருக்கலாம். ஏனெனில், அந்த பாறை கல் காருக்கு மிக அருகாமையில் சென்றுள்ளது. ஆதலால், காருடன் மோதியிருப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்த சம்பவம் பார்க்க பயங்கரமாக இருக்கலாம், ஆனால் மலைப்பிரதேசங்களில் இவ்வாறான மணல் சரிவுகள் மழைக்காலங்களில் அவ்வப்போது நடக்கக்கூடியவை. இதையெல்லாம் உறுதி செய்த பின்னரே சாலைகள் போடப்படுவது வழக்கம். ஆனால் இயற்கையின் சக்தியை நம் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது.


Click it and Unblock the Notifications









