இந்த வயசுலயும் செம அழகா இருக்காங்க! பிஎம்டபிள்யூ சொகுசு காரை வாங்கியுள்ள இவங்களை யார்னு தெரியுதா?
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1). இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை எஸ்யூவி (Entry-level SUV) ரக கார் ஆகும். இந்த கார் தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) கிடைக்கிறது. அவை X1 sDrive18i M Sport மற்றும் X1 sDrive18d M Sport ஆகியவை ஆகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) முறையே 50.80 லட்ச ரூபாய் மற்றும் 53.80 லட்ச ரூபாயாக உள்ளது.
இதில், X1 sDrive18i M Sport வேரியண்ட்டில் 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனும், X1 sDrive18d M Sport வேரியண்ட்டில் 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்பட்டுள்ளது. இது பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார் என்பதால், அதிநவீன மற்றும் சொகுசு வசதிகளுக்கு துளி கூட பஞ்சம் கிடையாது.

இந்த காரின் வசதிகளை பொறுத்தவரையில், 10.25 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.70 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை எல்லாம் மிகவும் முக்கியமான அம்சங்களாக உள்ளன. அத்துடன் முன் இருக்கைகளில் மெமரி மற்றும் மசாஜ் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பை பொறுத்தவரையில், அடாஸ் பாதுகாப்பு தொகுப்பு (ADAS - Advanced Driver Assistance Systems) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ (Mercedes Benz GLA) மற்றும் ஆடி க்யூ3 (Audi Q3) போன்ற கார்களுக்கு எல்லாம் இது மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக உள்ளது.

இப்படி பல்வேறு சிறப்பம்சங்கள் வாய்ந்த இந்த காரை பிரபல நடிகை ஒருவர் தற்போது வாங்கியுள்ளார். அவர் ஹூனா கான் (Hina Khan) ஆவார். 37 வயதாகும் இவர் ஹிந்தி மற்றும் பஞ்சாபி மொழிகளில், சினிமா மற்றும் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து கொண்டுள்ளார். தற்போதைய நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பாதிக்கும் தொலைக்காட்சி நடிகைகளில் ஒருவர் என ஹூனா கானை குறிப்பிடலாம்.
இவர் தனது புத்தம் புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்1 காரில், மும்பை விமான நிலையத்திற்கு (Mumbai Airport) வந்தபோது எடுக்கப்பட்ட வைரல் வீடியோ (Viral Video) ஒன்று சமூக வலை தளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோ யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டது ஆகும்.
ஹீனா கானிடம் ஏற்கனவே பல்வேறு விலை உயர்ந்த சொகுசு கார்கள் எல்லாம் உள்ளன. இதில், ஆடி ஏ4 (Audi A4) மற்றும் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் (BMW 5 Series) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும். இவற்றுடன் மிகவும் விலை குறைவான ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) கார் ஒன்றையும் ஹூனா கான் வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹூனா கான் வாங்கியுள்ள பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் ஆரம்ப நிலை எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது. எனவே ஓரளவிற்கு குறைவான விலையில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் எஸ்யூவி காரை வாங்க வேண்டும் என விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த ஆப்ஷன் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








