3 கோடி ரூபாயில் கார் வாங்கியிருக்கும் இந்த நடிகர் யாரென்று தெரிகிறதா... மொத்த குடும்பமும் சினிமா ஸ்டார்ஸ் தான்

சினிமா ஸ்டார்கள் என்றாலே அவ்வப்போது புதியது, புதியதாக சொகுசு கார்களை வாங்குவார்கள் என்பதை பலமுறை பார்த்துள்ளோம். குறிப்பாக, இந்தி சினிமா துறையினர் மாதத்திற்கு ஒரு கார் என்கிற அளவிற்கு கார்களை வாங்கி குவிக்கின்றனர். அதுவும், அவர்கள் வாங்கும் கார்களை எல்லாம் பார்த்தால், பல கோடி ரூபாய் விலை கொண்டவையாக உள்ளன. அந்த வகையில் தற்போது ஒரு பிரபல இந்தி நடிகர் சுமார் ரூ.3 கோடியில் ஒரு சொகுசு காரை வாங்கியுள்ளார். யார் அந்த நடிகர் என்பதையும், அவர் வாங்கியுள்ள லக்சரி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ் கார்களுக்கு இந்தியா உள்பட உலகளவில் நல்ல வரவேற்பு உள்ளது. இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மெர்சிடிஸ் விளங்குகிறது. மெர்சிடிஸ் கார்களுள் மிகவும் விலையுயர்ந்தவை மெர்சிடிஸ்-மேபக் கார்கள் ஆகும். அதாவது, மெர்சிடிஸ்-பென்ஸ் கார்களை காட்டிலும் மேபக் கார்கள் உயர் தரத்தில் உருவாக்கப்படுகின்றன.

farhan akhtar buys mercedes-maybach

அத்தகைய கார்களுள் ஒன்றை தான் நாம் இந்த தொகுப்பில் பார்க்க போகும் இந்தி நடிகர் வாங்கியுள்ளார். இவர் வேறு யாரும் இல்லை, பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹன் அக்தர் (Farhan Akhtar) ஆவார். 50 வயதான ஃபர்ஹன் அக்தர் நடிகர் மட்டுமில்லை, திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரும் கூட. பிரபலமான சோலே திரைப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்களுள் ஒருவரான ஜாவித் அக்தரின் மகன் தான் இந்த ஃபர்ஹன் அக்தர் ஆவார்.

ஃபர்ஹனின் சகோதரி சோயா அக்தர் திரைப்பட இயக்குனர் மற்றும் கதையாசிரியர் ஆவார். 2008ஆம் ஆண்டில் இருந்து திரைப்படங்களில் நடித்துவரும் நடிகர் ஃபர்ஹன் அக்தரை நடிகராக பிரபலப்படுத்திய திரைப்படம் ஜிந்தாகி நா மிலேகி தோபாரா. இந்த படத்திற்காக சிறந்த துணை நடிகர் விருதை பெற்ற ஃபர்ஹன் அக்தரின் திரைப்பட வாழ்க்கையை புரட்டிப் போட்ட திரைப்படம் 2013ஆம் ஆண்டில் வெளிவந்த பாக் மில்கா பாக் ஆகும்.

farhan akhtar buys mercedes-maybach

இந்திய தடகள வீரராக ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மில்கா சிங்கின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமான பாக் மில்கா பாக்கில் மில்கா சிங் ஆக நடிகர் ஃபர்ஹன் அக்தர் நடித்திருந்தார். இந்த திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃப்லிம்ஃபேர் விருதை வென்ற ஃபர்ஹன் அக்தரின் நடிப்பில் அடுத்ததாக '120 பகதூர்' என்கிற திரைப்படம் திரைக்குவர உள்ளது.

இந்த நிலையில், நடிகர் ஃபர்ஹன் அக்தர் புதியதாக மெர்சிடிஸ்-மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 (Mercedes-Maybach S-Class S580) காரை வாங்கியுள்ளார். இந்த காரின் விலை ஏறக்குறைய ரூ.3 கோடியாகும். மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 கார் மும்பையில் உள்ள ஃபர்ஹன் அக்தரின் வீட்டிற்கு டெலிவிரி செய்வதற்காக லாரியில் கொண்டு செல்லப்பட்ட போது எடுக்கப்பட்ட போட்டோ ஒன்று இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.

farhan akhtar buys mercedes-maybach

நாடிக் ப்ளூ, ஆனிக்ஸ் பிளாக், எமிரால்ட் க்ரீன் மற்றும் டிசைனோ டைமண்ட் வெள்ளை என மொத்தம் 4 விதமான கலர் ஆப்ஷன்களில் மெர்சிடிஸ்-மேபக் எஸ்580 கார் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஆனிக்ஸ் கருப்பு நிறத்தில் இந்த காரை நடிகர் ஃபர்ஹன் அக்தர் வாங்கியுள்ளார். இது ஹைப்ரீட் கார் ஆகும். அதாவது, 4.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 பெட்ரோல் என்ஜின் மற்றும் 48 வோல்ட் எலக்ட்ரிக் மோட்டார் என இரண்டும் இந்த காரில் உள்ளது.

என்ஜின் உடன் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இந்த காரில் இணைக்கப்படுகிறது. 0-இல் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த காரின் டாப்-ஸ்பீடு 250kmph ஆகும். பயணிகளின் பாதுகாப்பிற்கு எமர்ஜென்சி பிரேக் லைட், பஞ்சர் ரிப்பேர் கிட், கார் முன்பக்கமாக மோதலுக்கு உள்ளாகுவதை எச்சரிக்கும் வசதி, ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் உள்பட ஏகப்பட்டவை வழங்கப்படுகின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த காரின் என்ஜின் & பாதுகாப்பு அம்சங்களை பற்றி மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். மேபக் எஸ்-கிளாஸ் எஸ்580 காரில் வழங்கப்படும் சொகுசு வசதிகளை பற்றி பார்த்தால், அது பெரிய லிஸ்ட்டாக செல்லும். அந்த அளவிற்கான அல்ட்ரா லக்சரி காரை தான் நடிகர் ஃபர்ஹன் அக்தர் வாங்கியுள்ளார். இந்த கார் வாங்கிய ராசி அவருக்கு கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from DriveSpark

Article Published On: Thursday, September 26, 2024, 19:29 [IST]
English summary
Hindi actor farhan akhtar buys mercedes maybach s class s580 check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X