9 லட்ச ரூபா பைக்கில் வலம் வந்த பிரபல நடிகர்... ஹெல்மெட் போட்டிருந்ததால அடையாளமே தெரியல!

கோடியில் புரளும் பிரபல நடிகர் ஒருவர் பைக்கில் வலம் வந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. அவர் அடையாளம் தெரியாத அளவிற்கு ஹெல்மெட் அணிந்து பயணிக்கும் வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது. யார்? அவர் ஓட்டி வந்த பைக்கின் விலை மற்றும் சிறப்புகள் என்ன என்பது பற்றி அறியலாம், வாங்க.

நடிகர்கள் என்று உடன் படங்களுக்கு அடுத்தபடியாக அவர்களின் ஆடம்பர வாழ்க்கையும், சொகுசு வாகனங்களே நம்மில் பலருக்கு நினைவிற்கு வரும். அந்த அளவிற்கு இந்தியாவில் உள்ள நடிகர்கள் பலர் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்தும், சொகுசு வாகனங்களைப் பயன்படுத்தியும் கொண்டு இருக்கின்றனர். ஏன் ஒரு சில நடிகர்கள் பெரும் தொழிலதிபர்களுக்கே டஃப் கொடுக்கும் விதமாக மாதம் ஓர் லக்சூரி வாகனங்களை வாங்கிக் குவித்துக் கொண்டிருக்கின்றனர்.

Actor dino morea drives ktm bike

இந்த மாதிரியான சூழ்நிலையிலேயே பிரபல நடிகர் ஒருவர் இரண்டு சக்கர வாகனத்தில் வலம் வரும் வீடியோ இணையத்தில் வெளியாகி இருக்கின்றது. அவர் பயன்படுத்தியது கேடிஎம் ட்யூக் 790 (KTM Duke 790) ஆகும். இது ஓர் ஸ்ட்ரீட்ஃபைட்டர் வகை மோட்டார்சைக்கிள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இதிலேயே பிரபல நடிகர் ஒருவர் சாதாரண ஓர் நபரை போல வலம் வந்திருக்கின்றார். அதேவேளையில், இந்த பைக்கை அவ்வளவு சாதாரணமாக எடைப் போட்டு விட வேண்டாம். இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை உயர்ந்த பைக் மாடல்களில் இதுவும் ஒன்றாகும்.

Actor dino morea

இந்த பைக்கின் விலை ரூ. 9 லட்சம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இத்தகைய விலை உயர்ந்த பைக்கிலேயே பிரபல நடிகர் வலம் வந்திருக்கின்றார். அவர் வேறு யாரும் அல்ல, டினோ மோரியாவே அவர் ஆவார். இவர் மும்பை சாலையிலேயே இந்த பைக்கில் வலம் வந்திருக்கின்றார்.

அப்போது, தலைக் கவசம் அணிந்தபடி வலம் வந்திருக்கின்றார். இதனாலேயே அவரை பலரால் அடையாளம் காண முடியவில்லை. இருப்பினும், அவருடைய தீவிர ரசிகரின் கண்களில் அவர் பட்டிருக்கின்றார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமே தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. டினோ மோரியா ஓட்டி வந்த ஒன்பது லட்ச ரூபா கேடிஎம் 790 ட்யூக் பைக் பார்க்க புத்தம் புதியதுபோல் உள்ளது.

Actor dino morea spotted in costly ktm bike

ஆனால், அதனை அவர் கடந்த 2019ம் ஆண்டிலேயே வாங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. அவர் பைக்கை டெலிவரி பெற்றபோது இதேபோல் இணையத்தில் அந்த தகவல் டிரெண்டாகியது. இந்த நிலையில் தற்போது மிகவும் சாதாரண நபரை போல் அந்த பைக்கில் வலம் வந்திருப்பது மேலும் டிரெண்டாகத் தொடங்கி இருக்கின்றது.

இரண்டு சக்கர வாகனங்கள் மீதிருக்கும் ஆர்வத்தின் காரணமாகவே அவர் இந்த பைக்கை வாங்கினார். அதேவேளையில் அவரிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார் மாடல்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. இருப்பினும், சமீபத்திய பயணத்திற்கு இந்த பைக்கை அவர் பயன்படுத்தி இருக்கின்றார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.

மும்பை நகரம் அதிக போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகரங்களில் ஒன்றாகும். இந்த நகரத்தில் வசிப்பவர்கள் பலர் நேரத்தை மிச்சப்படுத்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் பெரும் பணக்காரர்கள் தொடங்கி முக்கிய நடிகர்கள் பலர் மும்பை மெட்ரோவில் பயணிப்பதாக தகவல்கள் வெளியாகின. அத்துடன் படங்களும் வெளியாகின.

இவர்களைப் போலவே மும்பை நகரத்தின் நெரிசல் மிகுந்த போக்குவரத்தை தவிர்க்கும் பொருட்டு டினோ இந்த பைக்கைப் பயன்படுத்தி இருக்கலாம் என கூறப்படுகின்றது. மற்றொரு பக்கம், இவர் இரண்டு சக்கர வாகனங்கள் மீது அதிகம் பற்றுக் கொண்டவர் எனவேதான் அவர் டூ-வீலரில் பயணத்தை மேற்கொண்டிருக்கின்றார் என்றும் கூறப்படுகின்றது.

இருப்பினும், அவர் ஓட்டி வந்தது அவ்வளவு சாதாரணமான பைக்கல்ல. இதற்கு அதன் விலையே சான்றாக உள்ளது. லாங் டிரைவ்வின்போது மிக சிறந்த ரைடு அனுபவத்தை இதில் பெற்றுக் கொள்ள முடியும். இதற்காக ஏகப்பட்ட அம்சங்களை இந்த பைக்கில் கேடிஎம் வழங்கி இருக்கின்றது.

எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 799 சிசி பாரல்லல் ட்வின் மோட்டாரையே வழங்கி இருக்கின்றது. இது அதிகபட்சமாக 105 எச்பி பவரையும், 87 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக் ரைடு-பை-ஒயர் த்ரோட்டில், ஃப்யூவல் இன்ஜெக்சன் மற்றும் நான்கு விதமான ரைடிங் மோட்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுதவிர, பாதுகாப்பு அம்சங்களாக ஏபிஎஸ், கார்னரிங் ஏபிஎஸ், டிராக்சன் கன்ட்ரோல் மற்றும் லான்ச் கன்ட்ரோல் என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற ஏகப்பட்ட அம்சங்களைத் தாங்கி இருக்கின்ற காரணத்தினாலேயே டினோ மோரியாவைப் போன்ற பெரிய பெரிய நட்சத்திரங்களைக்கூட இந்த பைக் தன் பக்கம் கவர்ந்துக் கொண்டிருக்கின்றது.

அதேவேளையில், டினோ மோரியாவிடம் மற்றுமொரு விலையுயர்ந்த மற்றும் அதிக சிறப்புமிக்க பைக்கும் பயன்பாட்டில் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அந்தவகையில், ஹார்லி டேவிட்சன் ஃபார்ட்டி எயிட் பைக்கும் பயன்பாட்டில் இருக்கின்றது. இதன் விலை ரூ. 10 லட்சத்திற்கும் அதிகம் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பைக்கில் 1202 சிசி திறன் கொண்ட வி-ட்வின் ஏர் கூல்டு மோட்டாரே பொருத்தப்பட்டு இருக்கின்றது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் நடிகர்கள் மிகப் பெரிய செல்வந்தர்களுக்கு டஃப் கொடுக்கும் அரிய மற்றும் விலை உயர்ந்த சொகுசு வாகனங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இதற்காக மலையாளத்தில் மம்மூட்டி மற்றும் அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் நஸ்ரியா கணவர் ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் இருக்கின்றனர்.

More from DriveSpark

Article Published On: Sunday, February 25, 2024, 10:00 [IST]
English summary
Hindi movie actor dino morea spotted in ktm duke 790
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X