6 வருஷத்துக்கு அப்புறம் ஆளே அடையாளம் தெரியல... பல கோடி ரூபாய் காரை வாங்கியிருக்கும் இந்த நடிகரை தெரிகிறதா?
லேண்ட் ரோவர் (Land Rover) கார்களை பிடிக்காதவர்கள் யார்தான் இருப்பார்கள்... குறிப்பாக, சினிமா துறையினர் அதிகளவில் லேண்ட் ரோவர் கார்களை வாங்குவதை பார்க்க முடிகிறது. பாலிவுட் ஸ்டார்கள் பலரிடத்தில் குறைந்தது ஒரு லேண்ட் ரோவர் கார் ஆவது இருக்கிறது. அந்த வரிசையில், பிரபலமான இந்தி திரைப்படம் மூலம் கவனத்தை பெற்ற நடிகர் ஒருவர் புதியதாக லேண்ட் ரோவர் டிஃபெண்டர் (Defender) காரை வாங்கியுள்ளார். இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவையும், டிஃபெண்டர் காரை வாங்கியிருக்கும் நடிகரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
2018ஆம் ஆண்டில் இந்தியில் வெளியான டம்ப்பட் திரைப்படத்தை பற்றி உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடவுள், சாத்தான் என திகில் கலந்த திரைப்படமான டம்ப்பட், திரைக்குவந்து கிட்டத்தட்ட 6 வருடங்களாகிவிட்ட போதிலும் இப்போதும் ஐஎம்டிபி-இல் 10க்கு 8.2 மதிப்பெண்களை கொண்டுள்ளது.

இதில் இருந்து இந்த திரைப்படத்தின் வெற்றியை அறியலாம். இத்தகைய திகிலான திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் சோஹம் ஷா (Sohum Shah) ஆவார். நடிப்பதுடன், பாலிவுட்டில் சில படங்களை சோஹம் ஷா தயாரித்தும் உள்ளார். இதற்காக ஒரு திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை நிர்வகித்துவரும் இவர் முதல்முறையாக 2009ஆம் ஆண்டில் பாபர் என்கிற திரைப்படத்தின் மூலமாக நடிக்க ஆரம்பித்தார்.
இருப்பினும், இவரது நடிப்புக்கு 2012ஆம் ஆண்டிற்கு பின்பே வரவேற்பு கிடைக்க ஆரம்பித்தது. டம்ப்பட், தல்வர் மற்றும் சிம்ரன் உள்ளிட்டவை நடிகர் சோஹம் ஷாவுக்கு அதிக ரசிகர்களை ஈட்டிக் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். இந்த நடிகர் தான் தற்போது லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை புதியதாக வாங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ கார்ஸ் ஃபார் யு என்கிற யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த வீடியோவில், புதிய டிஃபெண்டர் கார் உடன் நடிகர் சோஹம் ஷா நிற்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. வீடியோவில் அடுத்த காட்சிகளில், புதிய டிஃபெண்டர் காரில் இருந்து வெளியே வந்து அங்கிருப்பவர்களை சோஹம் ஷா சந்திப்பது போன்ற காட்சிகள் உள்ளன. வீடியோவின் இறுதியில், காரின் முன் இருக்கையில் சோஹம் ஷா அமர்ந்து செல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
அதாவது, காரை நடிகர் சோஹம் ஷா ஓட்டவில்லை. டிஃபெண்டர் ஆனது இந்தியாவில் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வெற்றிக்கரமான காராக விளங்குகிறது. முக்கியமாக, லக்சரி காரில் ஆஃப்-ரோடு பயணங்களை மேற்கொள்ளும் பணக்காரர்கள் டிஃபெண்டர் கார்களை அதிக எண்ணிக்கையில் வாங்குகின்றனர். உலகளவில் தற்சமயம் மிகுந்த பவர்ஃபுல்லான எஸ்யூவி கார்களுள் டிஃபெண்டரும் ஒன்று ஆகும்.

அதேநேரம், அட்டகாசமான தோற்றத்தில் கேபின் மற்றும் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளையும் டிஃபெண்டர் கொண்டுள்ளது. டிஃபெண்டர் காரினுள் பிவி புரோ கார் டெக் உடன் 11.4-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் டிஸ்பிளே, மெரிடியன் பிரீமியம் சவுண்ட் சிஸ்டம், க்ளீயர்சைட் ரியர் வியூ மிரர், டிரைவர் அசிஸ்டன்ஸ் ஃபங்க்ஷன்ஸ் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு என்ஜின், 4.4 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு வி8 டீசல் என்ஜின், 3.0 லிட்டர் ட்வின்-டர்போசார்ஜ்டு இன்லைன் 6-சிலிண்டர் என்ஜின் மற்றும் 2.0 லிட்டர் 4-சிலிண்டர் என்ஜின் என பல்வேறு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் டிஃபெண்டர் கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. ஏனெனில், அந்த அளவிற்கு டிஃபெண்டர் 90, டிஃபெண்டர் 110, டிஃபெண்டர் 130 என 3 விதமான டிஃபெண்டர் கார்களை லேண்ட் ரோவர் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தி நடிகர் சோஹம் ஷா இதில் எந்த வெர்சனில், எந்த என்ஜின் ஆப்ஷன் உடன் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் காரை வாங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. திரைப்பட தயாரிப்பாளர் என்பதால் நிச்சயமாக விலையுயர்ந்த டிஃபெண்டர் காரை வாங்கி இருப்பதற்கே வாய்ப்புள்ளது. புதிய கார் வாங்கிய ராசி நடிகர் சோஹம் ஷாவுக்கு மேலும் கைக் கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









