24 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு அதிபதி இந்த காரையா வாங்கி இருக்காரு! அவ்ளோ எளிமையான மனுஷனா இவரு!
இந்தியாவில் கோடியில் புரளும் திரை நட்சத்திரங்களில் ரோஹித் ராயும் ஒருவர் ஆவார். இவர் பிரபல சீரியல் நடிகர் ஆவார். அதுதவிர, இந்தி திரைப்படங்களிலும் அவர் அதிகம் நடித்திருக்கின்றார். "காபில்" மற்றும் "ஏக் கில்லாடி ஏக் ஹசீனா" போன்ற முன்னணி படங்களில் முன்னணி நடிகர்களுடன் அவர் நடித்து இருக்கின்றார்.
இந்தி திரை உலகின் முன்னணி திரை நட்சத்திரங்களான ஹிரித்திக் ரோஷன் மற்றும் யமஹி கவுதம் உள்ளிட்டோருடனேயே அவர் நடித்துள்ளார். மேலும், இவர் சின்னத் திரை இன்டஸ்ட்ரீயில் 1994 ஆம் ஆண்டிலேயே பணியாற்றி வருகின்றார். இப்போதும் இவரின் இந்த திரை பயணம் தொடர்ந்துக் கொண்டிருக்கின்றது.

இவரின் வயது 52. ஆனால், இப்போது உள்ள இளம் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு இளம் வயதுடையவரைப் போல் இவருடைய தோற்றம் இருக்கின்றது. இவரின் நெட்-ஒர்த் 24 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று கூறப்படுகின்றது. இந்த மாதிரியான ஓர் ஜாம்பவான் நடிகரே மிகவும் எளிமையான கார் ஒன்றை வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது அவரின் எளிமையான வாழ்க்கையை வெளிக்காட்டும் வகையில் உள்ளது. அவர் வாங்கி இருப்பது இந்தியாவின் மிக மிக மலிவு விலைக் கொண்ட எம்ஜி கோமெட் இவி ஆகும். இதன் விலை ரூ. 7.98 லட்சம் என்கிற ஆரம்ப (எக்ஸ்-ஷோரூம்) விலையில் இருந்து இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இத்தகைய மலிவு விலை காரையே ரோஹித் ராய் தற்போது வாங்கி இருக்கின்றார். சமீபத்தில் சுனீல் ஷெட்டியும் இந்த காரை வாங்கினார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுவே சுனீல் ஷெட்டியின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடல் ஆகும். இவரைத் தொடர்ந்தே தற்போது பாலிவுட் திரை உலகைச் சேர்ந்த மற்றுமொரு பிரபலமான ரோஹித் ராயும் கோமெட் இவி-யை வாங்கி இருக்கின்றார்.
இவர்கள் எப்படியும் இந்த கார் மாடலின் உயர் நிலை தேர்வையே வாங்கி இருப்பார்கள் என யூகிக்க முடிகின்றது. அதன் ரூ. 10.63 லட்சத்திற்கும் அதிகமான விலையில் விற்கப்படுகின்றது. ரோஹித் ராய் இந்த காரை மும்பை நகரத்தின் நெரிசல் மிகுந்த சாலைக்கு ஏற்ற கார் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.
இந்த காரணத்திற்காகவே பலர் கோமெட் இவி-யை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். ஓர் மூன்று சக்கர ஆட்டோவை போலவே குட்டியான தோற்றத்தை கோமெட் கொண்டிருக்கின்றது. மற்ற கார்களுடன் ஒப்பிடுகையில் இது மிக சிறிய தோற்றம் ஆகும். அதேவேளையில், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தக் கூடியதாக இருக்கின்றது.
எம்ஜி கோமெட் இவி பேஸ் (Pace), பிளே (Play) மற்றும் ப்ளஷ் (Plush) எனும் மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். இந்த காரில் 17.3 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 230 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இது ஓர் ஐபி67 தர சான்று பெற்ற பேட்டரி பேக் ஆகும். இந்த பேட்டரி தூசி மற்றும் துருவால் பாதிக்கப்படாது என்பதற்கான சான்றே இதுவாகும். மேலும், 41 பிஎச்பி மற்றும் 110 என்எம் டார்க்கை வெளியேற்றும் மின் மோட்டாரும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இந்த காரில் விலை உயர்ந்த சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பம் மற்றும் பிரீமியம் வசதிகள் வாரி வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், இரண்டு திரைகள் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஒவ்வொன்றும் 10.25 அங்குலம் கொண்டவை ஆகும். ஒன்று தொடுதிரை வசதிக் கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகும், மற்றொன்று டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகும்.
மேலும், சாவியே இல்லாமல் காருக்குள் நுழையும் வசதி, பார்க்கிங் சென்சார்களுடன் கூடிய கேமிரா, டூயல் ஏர்பேக்குகள், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ் உள்ளிட்டவையும் எம்ஜி கோமெட்டில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே இந்தியாவின் முன்னணி பிரபலங்களிடத்திலும் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நெரிசல் மிகுந்த நகரங்களின் சாலைகளுக்கு ஏற்ற ஓர் கார் மாடலே இது ஆகும். ஆட்டோக்களைப் போல குட்டியான பாதையிலும் இதனால் பயணிக்க முடியும். இதனால்தான் இந்தியாவில், முக்கியமாக நகர வாசிகள் மத்தியில் இந்த காருக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








