ஷோரூம்ல இருந்து இப்பதான் இறக்கினதபோல இருக்கு! அம்பாசிடர் காரா இது ஆடி, பிஎம்டபிள்யூக்கே டஃப் கொடுக்கும் போலையே
ஒரு காலத்தில் இந்தியாவில் மிகவும் அமோகமான வரவேற்பைப் பெற்று வந்த கார் மாடல்களில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador)-ம் ஒன்றாகும். இப்போதும் இந்த காருக்கு கார் ஆர்வலர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு. ஆனால், ஹிந்துஸ்தான் அம்பாசிடர் உற்பத்தியிலும் இல்லை, விற்பனையிலும் இல்லை.
இதற்கான முடிவு 2014 ஆம் ஆண்டிலேயே கட்டப்பட்டுவிட்டது. எனவே மிகப் பெரிய அளவில் இந்த கார் பயன்பாட்டில் இல்லாத சூழலே தற்போது உருவாகி இருக்கின்றது. சொல்லப் போனால் இந்த கார் மாடல் முற்றிலுமாக அழியும் தருவாயில் இருக்கின்றது. மிக மிக வயதுக் கொண்டிருக்கும் காரணத்தினால் அரசே இந்த கார் மாடலை பயன்பாட்டில் இருந்து அகற்றும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.

அதேவேளையில், இந்த காரை கார் காதலர்கள் சிலர் புத்தாக்கம் செய்து, அதற்கு மறு வாழ்வு அளித்து பயன்படுத்தி வருகின்றனர். அதாவது, புதிய அவதாரத்திற்கு மாற்றி அந்த காரை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். பலர் தங்களின் அந்தஸ்தின் சின்னமாக இந்த கார் மாடலை பார்ப்பதே இதற்கு காரணம் ஆகும்.
அந்தவகையிலேயே, மிகவும் அரிய வகை காராக மாடிஃபிகேஷன் வாயிலாக ஓர் அம்பாசிடர் கார் தற்போது மாற்றப்பட்டு இருக்கின்றது. இதனால், அந்த அம்பாசிடர் கார் மிகவும் அதிக பிரீமியம் அம்சங்கள் கொண்ட காருக்கே டஃப் கொடுக்கும் வாகனமாக மாறி இருக்கின்றது. இதன் சிறப்புகள் பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க் இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹெட்லைட் தொடங்கி காரின் உட்பக்க இருக்கை வரை அனைத்தும் இந்த காரில் மாற்றப்பட்டு இருக்கின்றது. பழைய குண்டு பல்பிற்கு பதிலாக எல்இடி லைட்டுகளே ஹெட்லைட்டாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது ரிங் டைப் டூயல் ஃபங்க்சன் எல்இடி டிஆர்எல்களையும் கொண்டிருக்கின்றது. புரொஜெக்டர் வகை எல்இடி லைட்டே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இத்துடன் குரோம் பூச்சுக் கொண்ட கிரில் தற்போது கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டு இருக்கின்றது. அத்துடன், கிரில்லில் நடு பகுதிக்கு வெள்ளை நிறமும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதன் பம்பர் மாடிஃபிகேஷன் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த அம்பாசிடர் காருக்கு என்றே பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பொதுவாக இந்த காரின் பம்பரும் குரோம் பூச்சிலேயே மெல்லியதாக அழகாக இருக்கும். ஆனால், இதை தான் விரும்பாத காரணத்தினாலேயே பெரும்பாலான குரோம் அலங்கார அணிகலன்களை அகற்றி இருப்பதாக அம்பாசிடரை மாடிஃபை செய்த அதன் உரிமையாளர் தெரிவித்து இருக்கின்றார். அதேவேளையில், ஹெட்லேம்ப், பிளைன்ட் ஸ்பாட் கண்ணாடி மற்றும் பானெட் ஆகியவற்றில் குரோம் அலங்காரம் தக்க வைக்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, புதிதாக இந்த காருக்கு ஏர் இன்டேக் வெண்டுகள் முன் பக்க வீலுக்கு மேலே கொடுக்கப்பட்டு இருக்கின்றன. இந்த துளைகள் ரேஞ்ஜ் ரோவர் காரில் இருப்பதைப் போல தெரிகின்றது. வீல்களைப் பொருத்த வரை 16 அங்குல ஆஃப்டர் மார்க்கெட் அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

இது அலங்கார மற்றும் பிரீமியம் தர அம்சங்களை சேர்க்கும் பணிகள் மட்டுமே அம்பாசிடரில் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், இந்த காரின் உருவம் அப்படியே இருப்பதை நம்மால் காண முடிகின்றது. குறிப்பாக, அம்பாசிடரின் உட்பக்கம் நம் அனைவரையும் பிரம்மிக்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது.
குறிப்பாக, கேபினை முழுக்க முழுக்க பழுப்பு நிறத்தால் அலங்கரித்திருக்கின்றனர். இருக்கைகளில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சீட் லெதர்கூட அதே நிறத்திலேயே காட்சியளிக்கின்றது. ஏன் டேஷ்போர்டுக்குகூட இந்த நிறத்திலேயே காட்சியளிக்கின்றது. இத்துடன், ஆங்காங்கே பழுப்பு நிறத்தாலான அணிகலன்களும் காரின் உட்பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இது மரத்தாலான இன்செர்ட்டுகள் ஆகும்.

இதனை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர், ஏசி வெண்ட் மற்றும் சென்டர் கன்சோல் ஆகியவற்றில் இதனைக் காண முடியும். இத்துடன், நான்கு ஜன்னல்களிலும் பவர் விண்டோ பட்டன் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, லெதர் போர்த்தப்பட்ட டோர் பேட்கள், ஃப்ளோரில் 7டி மேட், அப்கிரேட் செய்யப்பட்ட மியூசிக் சிஸ்டம், தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மிகுந்த சௌகரியமான ரைடு அனுபவத்தை வழங்கும் இருக்கைகள் ஆகியவற்றையே இந்த காரில் அதன் உரிமையாளர் சேர்த்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த விண்டேஜ் அம்பாசிடர் தற்போது நவீன காலத்திற்கு ஏற்ற அம்பாசிடர் காராக மாறி இருக்கின்றது. சொல்லப்போனால் இன்றைய கால ஆடி, பிஎம்டபிள்யூ சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்கும் வாகனமாக இந்த அம்பாசிடர் மாறி இருக்கின்றது. ஆகையால், கார் காதலர்கள் பலரின் மனதைக் கவரும் வகையில் இந்த கார் அமைந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications









