Hindustan Ambassador காரை இவ்வளவு வேகத்தில் ஓட்ட முடியுமா? மாடர்ன் கார்களே தோற்றுவிடும்... வீடியோ!!

150kmph வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியாகியுள்ள வீடியோவையும், இந்த மாடிஃபை அம்பாசிடர் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.

ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காருக்கு அறிமுகம் தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில் ஒரு காலத்தில் அந்த அளவிற்கு பிரபலமான காராக பலத்தரப்பட்ட மக்கள் மத்தியில் அம்பாசிடர் விளங்கியது. பொது மக்கள் மட்டுமின்றி, முக்கிய பிரமுகர்கள் உள்பட அந்த சமயத்தில் அரசியல்வாதிகளின் அன்றாட வாகனமாகவும் அம்பாசிடர் தான் விளங்கியது. ஒரு சிலர் தங்களது அம்பாசிடர் கார் உடன் நெருங்கிய பிணைப்பை கொண்டு இருந்தனர்.

modified hindustan ambassador

இதனாலேயே சிலரிடம் தற்போதும் அம்பாசிடர் கார் உள்ளது. அவ்வாறு அம்பாசிடரை வைத்திருப்போரில் சிலர் தங்களது காரை மாடிஃபை செய்துள்ளனர். அந்த வரிசையில், மாடிஃபை செய்யப்பட்ட அம்பாசிடர் காரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்க உள்ளோம். அம்பாசிடர் காரின் முக்கிய சிறப்பம்சமே அதன் உட்புற கேபின் தான். ஏனெனில் 4-5 நபர்கள் தாராளமாக அமர்ந்து செல்லும் அளவிற்கு விசாலமான இடவசதியை இந்த கார் கொண்டுள்ளது.

அம்பாசிடர் காரின் எடை சற்று அதிகம் தான் என்றாலும் 100 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை இந்த கார்களில் பெற முடிந்தது. இருப்பினும், அதிகமான எடையால் இந்த காரில் மிக அதிக வேகத்தில் பயணிக்க முடியாது. அந்த காலத்தில் இது பெரியதாக குறையாக தெரியவில்லை. ஆனால் இன்றைய மாடர்ன் கார்கள் அதிக டாப் ஸ்பீடை கொண்டவைகளாக தயாரிக்கப்படுகின்றன. அத்தகைய மாடர்ன் கார்களுக்கு இணையாக ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் ஒன்று அதிகப்பட்சமாக 150kmph வேகத்தில் இயங்கக்கூடிய வகையில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை மேலே காணலாம். வெறும் 31 வினாடிகள் மட்டுமே ஓடக்கூடியதாக உள்ள இந்த வீடியோ வேறொரு காரில் இருந்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பதிவு செய்த காருக்கு முன்பாகவே இந்த கதையின் நாயகனான ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் செல்கிறது. வீடியோவை காட்சிப்படுத்தியவர்கள் தங்களது கார் 150kmph வேகத்தில் இயங்கி கொண்டிருப்பதை ஸ்பீடோ மீட்டர் வாயிலாக காண்பிக்கின்றனர்.

கிட்டத்தட்ட இதே வேகத்தில்தான் சாலையில் முன்பாக அந்த அம்பாசிடர் கார் சென்று கொண்டிருக்கிறது. எங்களுக்கு தெரிந்தவரையில், வேறெந்த அம்பாசிடர் காரும் 150kmph வேகத்தில் இயங்கும் அளவிற்கு மாடிஃபை செய்யப்பட்டது இல்லை. ஆதலால் இதுவே முதல்முறை ஆகும். வீடியோவில் காட்சி தரும் அம்பாசிடர் காரை 150kmph வேகத்திற்கு இயங்கும் அளவிற்கு மாடிஃபை செய்ய ரூ.30 லட்சம் வரையில் செலவிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரூ.30 லட்சம் என்பது உண்மையில் அதிக தொகை ஆகும்.

modified hindustan ambassador

இந்த மாடிஃபிகேஷன் வேலைப்பாடுகளை மும்பையை சேர்ந்த கே எஸ் மோட்டார்ஸ்போர்ட் என்ற நிறுவனம் மேற்கொண்டுள்ளது. இந்த அம்பாசிடர் காருக்கான என்ஜின் நிஸான் சைல்வியா எஸ்13 காரில் இருந்து பெறப்பட்டுள்ளது. இந்த ஆற்றல்மிக்க என்ஜின் வெளிப்படுத்தும் செயல்படுதிறனை தாங்கி கொள்ளும் விதமாக முன் சஸ்பென்ஷன், கியர்பாக்ஸ் டன்னல், ஃபெண்டர்கள் உள்ளிட்டவை மாடிஃபை செய்யப்பட்டிருப்பது மட்டுமின்றி, காரின் பம்பர்களிலும் சில வேலைப்பாடுகள் நடைபெற்று இருப்பதை படங்களின் மூலம் அறியலாம்.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: மேலே பதிவிடப்பட்டுள்ள வீடியோவை காட்சிப்படுத்தியவர்களின் கார் ஒரு கட்டத்தில் முன்னால் சென்று கொண்டிருந்த அம்பாசிடர் காரை முந்திவிடுகிறது. அவர்களது கார் சரியாக 150kmph வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது என்றால், அவர்கள் முந்திய அம்பாசிடர் இதனை காட்டிலும் சற்று குறைவாக, 120kmph அல்லது 130kmph வேகத்தில்தான் இயங்கி கொண்டிருக்க வேண்டும். ஆனால் அவர்கள் விளம்பரத்திற்காக 150kmph என குறிப்பிட்டுள்ளனர்.

More from DriveSpark

Article Published On: Tuesday, April 18, 2023, 15:12 [IST]
English summary
Hindustan ambassador modified traveling at 150 kmph
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+