ரோல்ஸ் ராய்ஸ் காரையே விஞ்சும் அளவுக்கு மாற்றப்பட்ட அம்பாஸிடர்! எவ்ளோ செலவு ஆச்சுனு தெரிஞ்சா அசந்திருவீங்க!

இந்திய மக்களின் மனதில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் (Hindustan Ambassador) காருக்கு, எப்போதுமே தனி இடம் உண்டு. இதை யாரும் வெறும் காராக பார்க்கவில்லை. ஒரு குடும்ப உறுப்பினரை போலவேதான் பார்த்தனர். அந்த காலத்தில் எல்லாம் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் வைத்திருந்தால், அனைவர் மத்தியிலும் மிகப்பெரிய மரியாதை கிடைக்கும்.

ஆனால் கடந்த 2014ம் ஆண்டு, ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. தற்போது இந்தியாவில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் விற்பனைக்கு கிடைப்பதில்லை. இருப்பினும் பல ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரை இன்னமும் கூட பலர் புதிது போல் பராமரித்து வருகின்றனர்.

Hindustan Ambassador Modification

அதே நேரத்தில் இன்னும் சிலர், பழைய அம்பாசிடர் கார்களை மாடிஃபிகேஷன் மூலம் புதிது போல் மாற்றி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் கார் ஒன்று, புதிய காரை விட மேலான ஒரு நிலைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்காக அந்த காரின் உரிமையாளர் 8 லட்ச ரூபாயை செலவு செய்துள்ளார்.

கம் கஸ்டம்ஸ் என்ற நிறுவனம்தான், ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை, அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் மாடிஃபிகேஷன் செய்துள்ளது. இது தொடர்பான வீடியோவை (Video), அவர்களின் யூடியூப் (YouTube) சேனலில் அவர்கள் வெளியிட்டுள்ளனர். புதிது போல் மாற்றப்பட்டுள்ள ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் பெயிண்ட் வேலைப்பாடுகள்தான் முதலில் நமது கவனத்தை ஈர்க்கின்றன.

Hindustan Ambassador Modification Interior

இதன் முன் பக்க க்ரில் அமைப்பில் Ambassador என்ற எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அத்துடன் உண்மையான ஹாலோஜன் ஹெட்லேம்ப்களுக்கு பதிலாக, புதிய எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. பக்கவாட்டு பகுதியை பொறுத்தவரையில், ஸ்டீல் ரிம்களுக்கு பதிலாக கண்ணை கவரும் வகையில் அலாய் வீல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரின் உண்மையான ஒஆர்விஎம்களும் மாற்றப்பட்டுள்ளன. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய மற்றும் மடித்து வைத்து கொள்ள கூடிய ஓஆர்விஎம்கள் வழங்கப்பட்டுள்ளன. டோர் ஹேண்டில்கள் மாற்றப்படவில்லை என்றாலும் கூட, இந்த ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரில் தற்போது சென்ட்ரல் லாக்கிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

Hindustan Ambassador Modification Seats

பின் பகுதியை பொறுத்தவரையில் டெயில்லேம்ப்களும், எல்இடி விளக்குகள் ஆக மாற்றப்பட்டுள்ளன. வெளிப்புறமே கவர்ச்சியாக இருக்கும் நிலையில், உட்புறத்தில் இன்னும் நிறைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஹிந்துஸ்தான் அம்பாசிடர் காரின் உண்மையான இருக்கைகள் மாற்றப்பட்டு, புதிய இருக்கைகள் வழங்கப்பட்டிருப்பது இதற்கு ஒரு உதாரணம் ஆகும்.

முன் இருக்கைகளுக்கு எலெக்ட்ரிக் முறையில் அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய வசதி வழங்கப்பட்டிருப்பது தனிச்சிறப்பு. அதே சமயம் பின் பகுதியில் தனித்தனியான கேப்டன் இருக்கைகள் வழங்கப்பட்டுள்ளன. இவை நிச்சயம் சௌகரியமான பயணத்தை வழங்கும். மேலும் ஆம்பியண்ட் லைட்டிங் உள்பட பல்வேறு வசதிகளையும் இந்த ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் பெற்றுள்ளது.

அதே சமயம் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரின் உண்மையான ஸ்டியரிங் வீல் மாற்றப்பட்டு, மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio) காரின் ஸ்டியரிங் வீல் வழங்கப்பட்டுள்ளது. எனினும் HM லோகோ தொடர்ந்து இடம்பெற்றுள்ளது கவனிக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது. இதுதவிர புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப் வசதியும், இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் கொடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாம் தவிர டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டமும், இந்த ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரில் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆடியோ அனுபவத்தை மேம்படுத்துவதற்காக 4 ஸ்பீக்கர்கள் மற்றும் சப்வூஃபர் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் இந்த அம்பாஸிடர் கார் பெட்ரோல் இன்ஜின் மூலமே இயங்கி கொண்டிருந்தது.

ஆனால் தற்போது அதற்கு பதிலாக இசுசூ டீசல் இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் அதன் தனித்துவமான ரெட்ரோ லுக்கை இழக்காமல், மாடர்ன் ஆக மாறியுள்ளது. சமூக வலை தளங்களில் பலரும் இந்த மாடிஃபிகேஷன்களுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உண்மையில் இந்த மாடிஃபிகேஷன்கள் சாலையில் அனைவரையும் திரும்பி பார்க்க வைக்கும் வகையில் இருக்கின்றன. கடந்த காலங்களிலும் ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் காரை பலர் புதிது போல் மாற்றியுள்ளனர். ஆனால் இது அவற்றை எல்லாம் விட மிகவும் சிறப்பான ஒன்றாக இருக்கிறது.

8 லட்ச ரூபாய் செலவு செய்ததற்கு நல்ல பலன் கிடைத்துள்ளதாகவே நாங்கள் கருதுகிறோம். இது 42 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்ட ஹிந்துஸ்தான் அம்பாசிடர் கார் ஆகும். ஆனால் ஷோரூமில் இருந்து நேற்றுதான் டெலிவரி எடுக்கப்பட்டதை போல், அதனை மாற்றியுள்ளனர். எனவே யார் கண்ணும் படுவதற்கு முன்னால், இந்த காருக்கு சுற்றி போடுவது நல்லது!

More from DriveSpark

Article Published On: Wednesday, June 14, 2023, 13:15 [IST]
English summary
Hindustan ambassador restored with isuzu diesel engine video modification cost all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X