அம்பாசடர் இடத்திற்கு மீண்டும் வரப்போகும் எலெக்ட்ரிக் வாகனம்... இது செம ஐடியாவா இருக்கே...!
அம்பாசடர் காரை தயாரித்த ஹிந்துஸ்தான் மோட்டார் நிறுவனம் தற்போது லண்டனர் நிறுவனத்துடன் இணைந்து எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கவுள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை காணலாம்.

இந்தியாவில் இதுவரை வெளியானதிலேயே மிகவும் பிரபலமான கார் எது என்றால் கண்ணை மூடிவிட்டு அம்பாஸிடர் கார் எனச் சொல்லிவிடலாம். இந்த காரின் டிசைன் மற்றும் இந்த காரின் பாதுகாப்பிற்காகவே இந்த கார் மிகவும் பிரபலமாக இருந்தது. அரசியல் வாதிகள் முதல் பெரும் பணக்காரர்கள் வரை பலர் இந்த அம்பாசடர் காரை தான் பயன்படுத்தி வந்தனர். ஒருவர் அம்பாசடர் காரை வைத்திருக்கிறார் என்றால் அவர் சமூகத்தில் மிகப்பெரிய அந்தஸ்துடன் தான் இருப்பார்கள்.

இப்படிப்பட்ட அம்பாசடர் காரை தயாரித்த நிறுவனம் ஹிந்துஸ்தான் மோட்டாஸ். இந்நிறுவனத்தை பிர்லா குடும்பம் வைத்திருக்கிறது. இந்த நிறுவனம் அதன்பின் பெரிய அளவில் கார்களை வெளியிடவில்லை. கடந்த 2014ம் ஆண்டு வரை இந்நிறுவனம் அம்பாசடர் கார்களை தயாரித்தது ஆனால் அப்பொழுது போதுமான வரவேற்ப்பு அந்த காருக்கு இல்லாததால் அந்த கார் தயாரிப்பை நிறுத்தியது.

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது சிகே பிர்லா குரூப்பில் கீழ் இயங்கி வருகிறது. இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பைத் துவங்க முடிவு செய்துள்ளது. அதற்காக ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனம் ஒரு லண்டன் நிறுவனத்துடன் கை கோர்த்து இதைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்கான கூட்டு ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகவுள்ளது. ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் மற்றும் லண்டன் நிறுவனம் சேர்ந்து துவங்கும் இந்த நிறுவனம் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்கிறது.

இந்த கூட்டு ஒப்பந்தம் வரும் அக்டோபர் மாத மத்தியில் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் பின் இந்த நிறுவனத்திற்குப் பெயர் வைக்கப்பட்டு அதன் மூலம் வாகனம் தயாரிப்பு துவங்கும். வரும் 2024ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் இந்நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சந்தைக்குக் கொண்டு வரத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக முதற்கட்டமாக ரூ600 கோடியை முதலீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்த கையெழுத்தான பிறகு 6 மாதம் வரை ஆட்களை வேலைக்கு எடுத்தல், மிஷினரிகளை வாங்குதல் உள்ளிட்ட பணிகள் நடை பெறும் 6 மாதத்திற்குப் பிறகு தான் வாகன தயாரிப்பு செய்யத் துவங்கும். தற்போது இந்த ஆலை மேற்கு வங்கத்தில் உள்ள உத்தம்பாரா பகுதியில் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆலையில் இது செயல்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆலையில் தான் ஒரு காலத்தில் அம்பாசடர் கார் தயாரிக்கப்பட்டது. இந்த கார் தயாரிப்பு கடந்த 2014ம் ஆண்டு நிறுத்தப்பட்டது முதல் இந்த ஆலை மூடப்பட்டது. பின்னர் இந்நிறுவனம் இந்த ஆலையில் குறிப்பிட்ட பகுதியை விற்பனை செய்ய முடிவு செய்தது.

அரசு 314 ஏக்கர் நிலத்தை விற்பனை செய்ய அனுமதியளித்தது. இதையடுத்து அந்த நிலம் விற்பனை செய்யபட்ட நிலையில் மீதம் இருக்கும் இடத்தில் தான் ஆலை அமைக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அம்பாசடர் கார் தயாரித்த இடத்தில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களைத் தயாரிக்க ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது ஆட்டோமொபைல் துறையில் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. செண்டிமெட்டா இந்த இடம் மிகப்பெரிய ஹிட்டான வாகனத்தைத் தயாரித்த இடம் என்பதால் இதே இடத்தில் தயாரிக்கப்படும் எலெக்டரிக் வாகனங்களும் மிகப்பெரிய அளவில் ஹிட்டை கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.
Images Used For Representative purpose only


Click it and Unblock the Notifications








