எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா.. ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்..!

அவசர காலத்தில் தானாக பிரேக் உதவுகின்ற தொழில்நுட்பத்தை ஹிட்டாச்சி நிறுவனம் ஸ்டீரியோ கேமிராவில் இணைத்து அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

உலக நாடுகள் முழுவதிலும் வாகனங்களுக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. அதிலும் தொழில்நுட்பம் அடங்கிய வாகனங்களுக்கு சொல்லவே வேண்டாம்.

ஆகையால், முகவர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் வகையில் ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனமும் தங்களின் வாகனங்களில் புது விதமான தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்வதில் தீவிரம் காட்டுகின்றனர்.

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

அந்தவகையில், புது முகங்களாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒவ்வொரு வாகனங்களிலும் காணப்படும் தொழில்நுட்பமானது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் இருக்கின்றது. மேலும், இதன் பரிணாம வளர்ச்சி நாளுக்கு நாள் ஓர் புதிய இலக்கை எட்டியவாறே சென்றுக் கொண்டிருக்sகின்றது.

இந்நிலையில், தானியங்கி தொழில்நுட்பத்தில் புரட்சியை ஏற்படுத்துகின்ற வகையில் ஹிட்டாச்சி ஆட்டோமோட்டிவ் சிஸ்டம் புத்தம் புதிய ஸ்டீரியோ கேமிரா ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

இந்த கேமிராவில் ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் இணைக்கப்பட்டுள்ளது. இது, அவசர காலங்களில் தானாக பிரேக்கைப் பிடிக்க உதவியும்.

பரந்து விரிந்த பார்வைக் கொண்ட இந்த கேமிரா, தனக்கு முன்னாள் மற்றும் பக்கவாட்டு பகுதிகளில் செல்லும் வாகனங்களைக் கண்டறிந்து செயல்படும்.

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

அவ்வாறு, ஏதேனும் ஓர் வாகனம் ஆபத்து விளைவிக்கின்ற வகையில் நெறுங்கினாலோ அல்லது இந்த ஸ்டீரியோ கேமிரா பொருத்தப்பட்டுள்ள வாகனம் மற்றொரு வாகனத்தின் மீது மோதுமாறு சென்றாலோ உடனடியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பிரேக்கிங் வசதியை தானாக ஆக்டிவேட் செய்யும்.

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

உலகளவில் ஆட்டோமொபைல் துறை மிக வேகமாக வளர்ச்சி அடைந்து வருகின்றது. ஆகையால், பயணிகள் மற்றும் ஓட்டுநர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது ஒவ்வொரு வாகன உற்பத்தி நிறுவனங்களின் கட்டாயமாகியுள்ளது. எனவே, இவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் தொழில்நுட்பங்களுக்கான தேவையும் இவற்றுடன் சேர்ந்தே அதிகரித்து வருகின்றது. இதனடிப்படையிலேயே ஹிட்டாச்சி நிறுவனம் இந்த புத்தம் புதிய ஸ்டீரியோ கேமிராவை அறிமுகம் செய்துள்ளது.

MOST READ: "மக்களுக்காக நான், மக்களுக்காகவே நான்" - ஜெயதலலிதா பாணியில் ஹூண்டாய் அதிரடி...

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "2020 ஆம் ஆண்டு நிலவரப்படி, என்சிஏபி (புதிய கார் மதிப்பீட்டு திட்டம்) அமைப்பு, அவர்களின் முன்னணி வாகன பாதுகாப்பு செயல்திறன் மதிப்பீட்டில் உள்ள அளவுகோல்களில் தானியங்கி அவசரகால பிரேக்கிங் (ஏஇபி) சிஸ்டத்தையும் கட்டாயப்படுத்தலாம்" என தெரிவித்துள்ளது.

MOST READ: ஃபாஸ்ட் டேக்கின் உதவியால் காணாமல்போன கார் 5 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு... எப்படி தெரியுமா..?

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்டீரியோ கேமிராவை வழக்கமான ஸ்டீரியோ கேமராக்களுடன் ஒப்பிடும்போது மூன்று மடங்கு அகலமான பார்வைக் கோணத்தை வழங்கும் என கூறப்படுகின்றது. இத்துடன், ஆட்டோமேட்டிக் பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் திருப்பங்களில் தானாக வேகத்தைக் கட்டுப்படுத்துதல் உள்ளிட்ட சிறப்பம்சங்களும் இந்த கேமிராவில் காணப்படுகின்றது. இதற்கான தொழில்நுட்பத்தை ஹிட்டாச்சி நிறுவனம் ஆர்&டி நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.

MOST READ: மேம்பாலத்தின்கீழ் சிக்கிய மிகப்பெரிய விமானம்.. எப்படி வெளியேற்றினார்கள் தெரியுமா..? வீடியோ..!

எமர்ஜென்சி நேரத்தில் தானாக பிரேக் பிடிக்கும் கேமிரா... ஹிட்டாச்சியின் புதிய தொழில்நுட்பம் அறிமுகம்...!

இந்த கேமிரா மிகவும் துல்லியமான முறையில் எதிரில் வரும் வாகனம், முன்-பின் பக்கத்தில் செல்லும் வாகனம், பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுநர்கள் என அனைத்திற்குமான இடைவெளியை மதிப்பீட்டு செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Source

Most Read Articles

மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hitachi Developed Stereo Camera With Automatic Emergency Braking. Read In Tamil.
Story first published: Friday, December 27, 2019, 12:06 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X