21 வயதில் வீட்டிலேயே எலெக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய இளைஞர்! செலவும் ரொம்ப கம்மி தான்!

கடந்த சில ஆண்டுகளாக இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மீதான மோகம் அதிகமாகி வருகிறது. இதன் விளைவாக இளைஞர்கள் பலர் சொந்தமாக எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது குறித்த வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது. இப்படியாக கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் தானே ஒரு எலெக்ட்ரிக்கை பைக்கை தயாரித்துள்ளார். இது குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாத்ரூபூமி தளத்தின் யூடியூப் பக்கத்தில் தான் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவின் படி கொச்சியில் உள்ள பரம்படப்பு என்ற பகுதியை சேர்ந்த அதுல் வினோத் என்பவர் தான் இந்த எலெக்ட்ரிக் வாகனத்தை தயாரித்துள்ளார். இந்த வீடியோவில் அவர் குறித்து அறிமுகம் முதலில் நடக்கிறது. அதன் பிறகு அவர் தான் தயாரித்த எலெக்ட்ரிக் பைக் குறித்த விளக்கத்தை வழங்க துவங்குகிறது. இதை தற்போது மார்கெட்டில் இருக்கும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இணையாக ஒப்பிடுகிறார்.

Homemade Electric Motorcycle

இவருக்கு அவரது பள்ளி பருவத்தில் இருந்தே சொந்தமாக பைக் உருவாக்க வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. முதலில் தனது பைக் எப்படி வர வேண்டும் என்பது 10 வகுப்பு படிக்கம் போதே வரைய துவங்கிவிட்டார். முதலில் வேறுமாதிரியான வடிவமைப்பு இருந்தது. இது மெல்ல மெல்ல டெலப்பாகி தற்போது அவர் உருவாக்கி வடிவமைப்பாக மாறியுள்ளது. அவர் பைக் மீது கொண்ட காதல் காரணமாக ஆட்டோமொபைல் குறித்த படிப்பை பாலிடெக்னிக்கில் படிக்க துவங்கினார்.

மேலும் அதுல் பைக் உருவாக்குவது குறித்து யூடியூப் மற்றும் கூகுள் மூலம் கற்றுக்கொண்டார். முதலில் இவர் எலெக்ட்ரிக் ரிக்ஷாக்களில் உள்ள எலெக்ட்ரிக் மோட்டாரை பயன்படுத்தி இதை செயின் டிரைவ் சிஸ்டத்துடன் இணைத்துள்ளார். ஆனால் அதில் அதிகமாக சூடாகும் பிரச்சனை இருந்துள்ளது. தற்போது இதை
ஹப் மோட்டாரை பொருத்தியுள்ளார். இந்த மோட்டார் தான் தற்போது நவீன எலெக்ட்ரிக் வாகனங்களில் பொருத்தப்படுகிறது. இதற்கு பவர் கொடுக்க 48V எல்எஃபி பேட்டரியை உருவாக்கினார்.

Homemade Electric Motorcycle

இந்த வீடியோவில் இந்த மோட்டாரின் பவர் மற்றும் டார்க் குறித்த விபரங்கள் எதையும் அவர் தெரிவிக்கவில்லை. இந்த பைக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் 70 கி.மீ பயணிக்க முடியும் எனவும். இதை ஒரு முறை சார்ஜ் செய்ய 3.5 முதல் 4 மணி நேரம் வரை எடுத்துக்கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த பைக்கிற்கான சார்ஜிங் பாயிண்ட் டேங்க் பகுதியில் பொருத்தியுள்ளார்.

இதன் சஸ்பென்சன் செட்டப்பை பெஆரத்தவரை ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் உள்ள முன்பக்க ஃபோர்க்கும், பின்பக்கம் யமஹா எஃப்இசட் பைக்கில் உள்ள மோனோஷாக் சஸ்பென்ஷனையும் பொருத்தியுள்ளார். இந்த பைக்கில் பொருத்தப்பட்ட பெரும்பாலான பொருட்கள் கஸ்டம் மேடு பொருட்களாக உள்ளது. இதன் ஃபிரேம் ஜிஐ பைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் சில பகுதிகள் வெளியே தெரிகிறது. இது சிவப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

Homemade Electric Motorcycle

அதுல் இந்த பைக்கின் மாடல் மற்றம் பாி பேனல்களை அவரே வடிவமைத்துள்ளது. இந்த வடிவமைப்பு டிசைனை அல்ட்ராவைலட் பைக்கை பார்த்து இன்ஸ்பயர் செய்து செய்துள்ளார். இதன் ஹெட்லைட் வடிவமைப்பு கவாஸகி நேக்கட் பைக்கில் உள்ளதை போல இருக்கிறது. முன்பக்க மட்கார்டு ஸ்கிராப்யார்டிலிருந்து எடுத்து பயன்படுத்தியுள்ளார்.

இந்த பைக்கில் டேங்க் பகுதியில் சிறிய ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது. இதில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென் கிளஸ்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ரைடு மோடை தேர்வு செய்வது உள்ளிட்ட சில அம்சங்கள் உள்ளது. மேலும் இந்த பைக்கில் ஆண்டி தெஃப்ட் அலாரம், ரிமோட் ஸ்டார்ட்/ஸ்டாப், ரிவர்ஸ் அசிஸ்டென்ஸ் ஆகிய அம்சங்கள் உள்ளது. இவர் அடுத்து இதில் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டத்தையும் பொரத்த முடிவு செய்துள்ளார் .

இதன் வடிவமைப்பு சிறப்பாக இருக்கிறது. 21 வயது பையன் செய்த வடிவமைப்பு போலவே தெரியவில்லை. இதில் வித்தியாசமாக இருப்பது அகலம் குறைந்த டயர்கள் தான். இப்படியா பைக்குகளில் பின்புறம் பெரிய டயர்களை பொருத்துவார்கள். இவர் சிறிய டயரை பொருத்தியுள்ளார். இந்த பைக்கை உருவாக்க அவருக்கு வெறும் 1 லட்சம் தான் செலவாகியுள்ளது.

இவது இந்த முயற்சிக்கு இவரது குடும்பத்தினர்கள் சப்போர்ட்டாக இருந்துள்ளார். இவருக்க தேவையான பண உதவி செய்வது போன்று உதவிகளை செய்துள்ளனர். மேலும் இவர் டீச்சர் வேலை பார்ப்பது, டுரோன், இன்குபேட்டர்கள் செய்வது உள்ளிட்ட வேலைகள் செய்து அதில் கிடைக்கும் பணத்தை வைத்து இந்த பைக்கை தயாரித்துள்ளார். எதிர்காலத்தை இதை மேலும் மேம்படுத்த முடிவு செய்துள்ளார்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த வீடியோவில் இந்த பைக் எவ்வளவு வேகத்தில் பயணிக்கும் என்ற தகவலை அவர் வெளியிடவில்லை குறைந்த வேகத்தில் பயணிக்கும் வாகனம் என்றால் இதை சாலையில் பயன்படுத்த பதிவெண் தேவையில்லை. ஆனால் வேகமாக சாதாரண பைக் போல பயணிக்கும் வாகனம் என்றால் பதிவெண் தேவை. இதற்கு பதிவெண் பெற பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, September 19, 2025, 8:09 [IST]
English summary
Homemade electric motorcycle 70 km range hot design
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X