சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

வெறும் 71 ஆயிரம் ரூபாய் மட்டுமே விலை உடைய ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்காக, அதன் உரிமையாளர் 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவிட்டிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

சமீப காலமாக வாகனங்கள் குறித்த சுவாரஸ்யமான செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சமீபத்தில் பஜாஜ் டோமினார் (Bajaj Dominar) பைக்கை வாங்கினார். இதன் விலை 2.67 லட்ச ரூபாய். இவ்வளவு பெரிய தொகையை 1 ரூபாய் நாணயங்களாக அவர் கொடுத்ததுதான் சுவாரஸ்யமே.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

2.67 லட்ச ரூபாய்க்கு ஒரு ரூபாய் நாணயங்களாக கொடுத்து, பஜாஜ் டோமினார் பைக்கை அவர் வாங்கியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. பஜாஜ் டோமினார் அவரது கனவு பைக் ஆகும். இந்த கனவை நிறைவேற்றும் வகையில், பணத்தை சேமித்து இப்படி ஒரு வித்தியாசமான முறையில் அவர் பஜாஜ் டோமினார் பைக்கை வாங்கினார்.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

சமீபத்தில் சமூக வலை தளங்கள் முழுக்க இந்த செய்திதான் ஆக்கிரமித்திருந்தது. பஜாஜ் நிறுவனம் கூட தனது சமூக வலை தள பக்கத்தில் இந்த விஷயத்தை பகிர்ந்திருந்தது. இந்த சூழலில் தற்போது ஒருவர் ஃபேன்ஸி நம்பர் பிளேட்டிற்காக (Fancy Number Plate), 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவு செய்திருக்கும் சுவாரஸ்யமான செய்தி வெளியாகியுள்ளது.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஆம், சரியாகதான் படித்துள்ளீர்கள். 15 லட்ச ரூபாய்தான். இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சாதாரணமான ஒரு ஸ்கூட்டரில், ஃபேன்ஸி நம்பர் பிளேட் பொருத்துவதற்காக இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்கள் அல்லது செயல்திறன் மிக்க பைக்குகளுக்குதான் ஃபேன்ஸி நம்பர் வாங்கப்படும்.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஆனால் ஒருவர் மிகவும் வித்தியாசமாக சாதாரண ஸ்கூட்டருக்கு ஃபேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார். ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) ஸ்கூட்டருக்காகதான் இவ்வளவு பெரிய தொகை செலவழிக்கப்பட்டுள்ளது. 'CH 01 CJ 0001' என்ற ஃபேன்ஸி நம்பர்தான் 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

சண்டிகர் பதிவு மற்றும் உரிமம் வழங்கும் ஆணையம் (Chandigarh Registering and Licensing Authority), சமீபத்தில் ஃபேன்ஸி நம்பர்களை ஏலத்தில் விட்டது. மொத்தம் 378 ஃபேன்ஸி பதிவு எண்கள் ஏலம் விடப்பட்டன. அவை அனைத்தும் ஒட்டுமொத்தமாக 1.50 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

இதில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் உரிமையாளர் ஒருவர், தனது ஸ்கூட்டருக்கு 'CH 01 CJ 0001' என்ற ஃபேன்ஸி நம்பரை, 15.44 லட்ச ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்துள்ளார். இங்கே மற்றொரு சுவாரஸ்யம் என்னவென்றால், சம்பந்தப்பட்ட ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரின் விலையே வெறும் 71 ஆயிரம் ரூபாய் மட்டும்தான்.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஸ்கூட்டரின் விலையை காட்டிலும் பல மடங்கு அதிக தொகை கொடுத்து இந்த ஃபேன்ஸி பதிவு எண் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. சரியாக சொல்வதென்றால், ஸ்கூட்டரின் விலையை காட்டிலும், 14.73 லட்ச ரூபாய் அதிகமாக கொடுத்து, அவர் இந்த ஃபேன்ஸி பதிவு எண்ணை ஏலத்தில் எடுத்துள்ளார். பிரிஜ் மோகன் (Brij Mohan) என்பவர்தான் இவ்வளவு பெரிய தொகையை கொடுத்து ஃபேன்ஸி நம்பரை வாங்கியுள்ளார்.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

சண்டிகரை சேர்ந்த இவர் விளம்பர நிறுவனம் நடத்தி வருகிறார். தற்போது இந்த நிகழ்வு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது. சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலரும் பிரிஜ் மோகன் குறித்து ஆச்சரியமாக பேசி வருகின்றனர். பிரிஜ் மோகனுக்கு முன்பாகவே ஃபேன்ஸி பதிவு எண்ணுக்காக பலர் பல லட்ச ரூபாய்களை சர்வ சாதாரணமாக செலவழித்துள்ளனர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஆனால் நாங்கள் ஏற்கனவே கூறியபடி அவை பெரும்பாலும் சொகுசு கார்கள் அல்லது மிகவும் விலை உயர்ந்த பைக்குகளுக்காகதான் இருக்கும். சாதாரண ஒரு ஸ்கூட்டருக்காக, 15 லட்ச ரூபாய்க்கும் அதிகமான தொகையை செலவழித்து ஃபேன்ஸி பதிவு எண் வாங்கியிருப்பது உண்மையிலேயே அரிதான ஒரு விஷயம்தான். இதனாலேயே இச்சம்பவம் இந்த அளவிற்கு அனைவரது கவனத்தையும் கவர்ந்துள்ளது.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

ஹோண்டா ஆக்டிவா சாதாரணமான ஒரு ஸ்கூட்டர் என்றாலும், இந்தியாவின் விருப்பமான ஸ்கூட்டர் என்று இதனை சொல்லலாம். இதன் விற்பனை எண்ணிக்கை தொடர்பான எண்கள் நமக்கு அதனை தெளிவாக எடுத்து காட்டுகின்றன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில், ஹோண்டா ஆக்டிவா முதன்மையான இடத்தில் இருக்கிறது.

சாதாரண ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டருக்கு 15 லட்சத்தை செலவு செய்த உரிமையாளர்... எதுக்குனு தெரிஞ்சா ஆடிப்போயிருவீங்க!

சிறப்பான விலை நிர்ணயம், நல்ல மைலேஜ், அனைவரையும் திரும்பி பார்க்க வைக்க கூடிய டிசைன் போன்ற காரணங்களால்தான் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டரை பலரும் விரும்பி வாங்குகின்றனர். இந்தியாவில் ஹோண்டா ஆக்டிவா விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு பல ஆண்டுகள் உருண்டோடி விட்டாலும், இந்த ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் தொடர்ச்சியாக அப்டேட் செய்து கொண்டே வருவதும் அதன் வெற்றிக்கு முக்கியமான காரணங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 18, 2022, 17:23 [IST]
English summary
Honda activa scooter owner pays rs 15 44 lakh for fancy number details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+