இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

Written By:

ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் இந்தியாவின் கார் மற்றும் இருசக்கர வாகன மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பெற்றிருக்கிறது. இந்த நிலையில், தனது சிறிய ரக பயணிகள் விமானங்களையும் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்ததுள்ளது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டெல்லியை சேர்ந்த ஏரோ ஏர்கிராஃப்ட் சேல்ஸ் அண்ட் சார்ட்டர்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஹோண்டா விமானங்களை விற்பனை செய்வதற்கான அதிகாரப்பூர்வ வினியோகஸ்தராக நியமிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான ஒப்பந்தம் ஹைதராபாத்தில் நடந்து வரும் விங்ஸ் இந்தியா ஏரோ ஷோவில் கையெழுத்தானது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

மேலும், இந்த கண்காட்சியில் முதல்முறையாக ஹோண்டா நிறுவனத்தின் விமானம் இந்தியர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டு இருந்தது. ஹோண்டாஜெட் என்ற பெயரில் விற்பனைக்கு வந்திருக்கும் இந்த விமானம் பெரும் பணக்காரர்களின் தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற பல சிறப்பம்சங்களை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இறக்கையின் இருபுறத்திலும் இருக்கும் கொடுக்கப்பட்டு இருக்கும் இரண்டு தாங்கிகளின் உச்சியில் எஞ்சின் கொடுக்ப்பட்டு இருப்பதுடன், இறக்கை அமைப்பிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. இதனால், உட்புறத்தில் சிறப்பான இடவசதியை பெற்றிருக்கிறது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த புதிய விமானத்தில் எச்எஃப்120 எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய எஞ்சினை வடிவமைத்துள்ளது ஹோண்டா. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 2050 lb-ft த்ரஸ்ட் எனப்படும் முன்னோக்கி உந்தித் தள்ளும் விசையை அளிக்கும்.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இறக்கையின் மீதுள்ள தாங்கிகளில் எஞ்சின் பொருத்தப்பட்டு இருப்பதன் காரணமாக, இடவசதி மேம்பட்டு இருப்பதுடன், கேபினுக்குள் அதிர்வுகளும் மிக குறைவாக இருக்கும். இதன் காரணமாக இனிமையான சொகுசான பயண உணர்வை பெற முடியும்.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹோண்டாஜெட் விமானத்தில் இரண்டு எஞ்சின்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எஞ்சின்கள் மூலமாக கிடைக்கும் த்ரஸ்ட் விசையை வைத்து அதிகபட்சமாக 780 கிமீ வேகம் வரை இந்த விமானம் பறக்கும். நிமிடத்திற்கு 3,990 அடி வரை உயரம் வரை மேல் எழும்பும் திறனையும், அதிகபட்சமாக 30,000 அடி உயரத்தில் பறக்கும் வல்லமையையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹோண்டா கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிபொருள் சிக்கனத்திற்கு பெயர் பெற்றவை. அதேபோன்று, இந்த விமானமும் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை வழங்கும். இதன் போட்டியாளர்களை ஒப்பிடும்போது 15 சதவீதம் கூடுதல் எரிபொருள் செலவை வழங்கும் என ஹோண்டா தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹோண்டாஜெட் விமானத்தை 4,000 அடி நீளத்துக்கும் குறைவான ஓடுபாதையில் டேக் ஆஃப் செய்யவும், 3,000 அடிக்கும் குறைவான நீளம் கொண்ட ஓடுபாதையில் தரை இறக்கவும் முடியும்.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

வழக்கமான விமான உடல்கூடு கட்டமைப்பு முறையிலிருந்து சற்று மாறுபட்டு இந்த விமானம் கார்பன் ஃபைபரில் கட்டமைக்கப்ட்டு இருக்கிறது. இதனால், மிக உறுதியாகவும், சிறப்பான காற்றை கிழித்துச் செல்லும் தத்துவத்தையும் பெற்றிருக்கிறது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஹோண்டாஜெட் விமானத்தில் 2 விமானிகள் உட்பட அதிகபட்சமாக 7 பேர் வரை பயணிக்க முடியும். அதேநேரத்தில், இந்த விமானத்தை வாங்கும் 50 சதவீத கோடீஸ்வரர்கள் சொந்தமாக பைலட் லைசென்ஸ் வைத்திருப்பதால், சொந்தமாக ஓட்டிச் செல்வார்கள். பைலட்டுகள் அவசியம் இருக்காது என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த விமானத்தில் புதிய கார்மின் ஜி3000 ஏவியோனிக்ஸ் சிஸ்டம் இருக்கிறது. இதனால், விமானத்தை எளிதாக கட்டுப்படுத்தும் வசதியை விமானிகள் பெறலாம். இதில், இரண்டு தொடுதிரை வசதிகளுடன் கூடிய கட்டுப்பாட்டு அமைப்பு இருக்கிறது. இரண்டு விமானிகள் இயக்க தேவைப்பட்டாலும், ஒரு விமானி மூலமாக இந்த விமானத்தை இயக்க முடியும்.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த விமானம் சிறப்பான குளிர்சாதன வசதி, மியூசிக் சிஸ்டம், விளக்குகளை மொபைல்போன் மூலமாக கட்டுப்படுத்திக் கொள்ளும் வசதிகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த விமானத்திற்கு உலக அளவில் அதிக அளவில் ஆர்டர்கள் குவிந்துள்ளன. இந்த நிலையில், இந்தியாவிலும் இந்த விமானத்திற்கு சிறப்பான வரவேற்பு இருக்கும் என்று ஹோண்டா நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஹோண்டாஜெட் குட்டி விமானம் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ஒரு ஹோண்டாஜெட் விமானம் சர்வதேச சந்தையில் 4.5 மில்லியன் டாலர் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்திய மதிப்பில் ரூ.30 கோடி விலை கொண்டது.

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Honda Aircraft Company Expands HondaJet Sales To India.
Story first published: Saturday, March 10, 2018, 11:55 [IST]

Latest Photos

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark