கோவத்தில் கண்ணாடியை நொறுக்கிய நபர்! பஸ் டிரைவர் செஞ்ச சம்பவம்தான் ஹைலைட்டே! அப்படி என்ன பண்ணார் தெரியுமா?
இந்திய சாலைகளில் வாகன ஓட்டிகளுக்கு இடையே வாக்குவாதங்கள் ஏற்படுவது என்பது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி விட்டது. சாலையில் வாகன ஓட்டிகள் சண்டையிட்டு கொள்வதை ஆங்கிலத்தில் Road Rage என அழைக்கின்றனர். வாகன ஓட்டிகள் நிதானம் இழப்பதால்தான், இத்தகைய சம்பவங்கள் அதிகமாக அரங்கேறுகின்றன.
குறிப்பாக போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்போதுதான், வாகன ஓட்டிகளுக்கு இடையே நிறைய பிரச்னைகள் ஏற்படுகின்றன. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூர் நகரில் இன்று உச்சகட்ட போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது (Bangalore Traffic Jam). 1 கிமீ தொலைவை கடப்பதற்கே 1 மணி நேரத்திற்கும் மேலானதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

அப்போது பல்வேறு இடங்களில் வாகன ஓட்டிகள் சண்டையிட்டு கொள்வதை காண முடிந்தது. இந்த சூழலில், சாலையில் உங்களிடம் யாராவது வாக்குவாதம் அல்லது தகராறில் ஈடுபட்டால், நீங்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? என்பதை விளக்கும் சம்பவம் ஒன்று மும்பையில் (Mumbai) அரங்கேறியுள்ளது.
மும்பையில் கார் டிரைவர் ஒருவர், அரசு பஸ்ஸின் முன் பக்க கண்ணாடியை உடைத்து நொறுக்கியுள்ளார். ஹோண்டா ப்ரியோ (Honda Brio) காரை ஓட்டி வந்த அவர், பேஸ்பால் (Baseball) விளையாட பயன்படுத்தும், பேட் மூலம் அரசு பஸ்ஸின் கண்ணாடியை சேதப்படுத்தியுள்ளார். இந்த வைரல் வீடியோ (Viral Video), காண்பவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.
பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துள்ளனர். பஸ் டிரைவரும் கூட செல்போனில் வீடியோ எடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது. ஹோண்டா ப்ரியோ கார் டிரைவர் பலமாக தாக்கியதில், பஸ்ஸின் முன் பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியதுடன் மட்டுமல்லாது, முன் பக்க ஹெட்லைட் மற்றும் ஓஆர்விஎம் ஆகியவையும் சேதமடைந்துள்ளன.
போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருந்த காரணத்தால், அரசு பஸ்ஸின் டிரைவர், ஹோண்டா ப்ரியோ காரின் பின் பகுதியில் மோதியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளை சுமூகமாக பேசி தீர்க்க வேண்டும். அதை விடுத்து விட்டு, ஹோண்டா ப்ரியோ காரை ஓட்டி வந்தவர், மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டுள்ளார்.
ஆனால் அரசு பஸ் டிரைவர் நடந்து கொண்ட விதம் பாராட்டுக்குரியது. அவர் மிகவும் அமைதியாக காணப்பட்டார். என்ன வேண்டுமானாலும் செய்து கொள் என்ற பாணியில், நடந்த சம்பவங்களை எல்லாம் அவர் செல்போனில் ஆதாரமாக பதிவு செய்து கொண்டிருந்தார். இதுகுறித்து காவல் துறை விசாரணை நடத்தி, ஹோண்டா ப்ரியோ காரை ஓட்டி வந்தவரை கைது செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுபோன்ற பிரச்னைகளில் நீங்கள் சிக்கி கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால், போக்குவரத்து விதிமுறைகள் (Traffic Rules) அனைத்தையும் முறையாக பின்பற்றுங்கள். வேக வரம்புகளை பின்பற்றுதல் மற்றும் வளைவுகளில் திரும்பும்போது இன்டிகேட்டர்களை சரியான முறையில் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் சாலையில் பயணம் செய்யும்போது பிரச்னைகளை தவிர்க்கலாம்.
அதேபோல் நீங்கள் எங்கு செல்வதாக இருந்தாலும் கொஞ்சம் முன் கூட்டியே புறப்பட வேண்டும். அப்போதுதான் சாலையில் உங்களால் ரிலாக்ஸாக இருக்க முடியும். ரிலாக்ஸாக இருந்தாலே பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்த்து விட முடியும். அத்துடன் மற்றவர்களின் தவறுகளை மன்னித்து பழகுங்கள். மனிதர்கள் என்றாலே தவறு செய்வது சகஜம்தான். எனவே எதையும் பெரிதுபடுத்தாமல் மன்னித்து பழகினாலும், சாலைகளில் பிரச்னைகளை தவிர்க்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மும்பையில் நடைபெற்ற சம்பவத்தில், கார் டிரைவர் மீதே தவறு இருப்பதை போல் தெரிகிறது. ஏனெனில் பஸ் டிரைவர் தவறு செய்திருந்தாலும் கூட, வாகனத்தை ஓரமாக நிறுத்தி பேசிதான் தீர்க்க வேண்டும். அதை விடுத்து விட்டு சாலையில் இப்படி ஆக்ரோஷமாக நடந்து கொள்வது என்பது, பொது சொத்துகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதுடன், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்னைகளையும் உண்டாக்கும். அவசரமாக செல்ல வேண்டிய பலர் இதனால் பாதிக்கப்பட்டிருக்கலாம்.


Click it and Unblock the Notifications