ஓடி கொண்டிருந்தபோதே வெடித்த காரின் டயர்.. பதபதைக்க வைக்கும் விபத்து வீடியோ! வீடியோவ ஸ்கிப் பண்ணிடுங்க ப்ளீஸ்!
என்னதான் கவனமாக சென்றாலும் விபத்து ஏற்படும் என்பதற்கு சான்றாக ஓர் வாகன விபத்து சம்பவம் தற்போது அரங்கேறி இருக்கின்றது. இதுகுறித்து அதிர்ச்சியளிக்கும் வீடியோவும் வெளியாகி இருக்கின்றது. அப்படி என்ன நிகழ்வு அது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
நன்றாக ஓடிக் கொண்டிருந்த கார் ஒன்று திடீரென விபத்தில் சிக்கும் பதை பதைக்க வைக்கும் வீடியோ காட்சிகளே தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. கார் விபத்தைச் சந்திக்க, அதன் டயர் திடீரென வெடித்ததே காரணமாக இருக்கின்றது. இந்த சம்பவம் லக்னோ - ஆக்ரா எக்ஸ்பிரஸ் சாலையிலேயே அரங்கேறி இருக்கின்றது.

என்னதான் கவனமாக பயணித்தாலும் விபத்து அரங்கேறும் என்பதற்கு சான்றாகவே இந்த நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதாவது, அதிக கவனத்துடன் வாகனத்தை இயக்கினாலும், சரியான பராமரிப்பு இல்லை என்றால் நாம் விபத்தில் சிக்க நேரிடும் என்பதற்கு சான்றாகவே இந்த விபத்து சம்பவம் அரங்கேறி உள்ளது.
நல்ல ஓடிக் கொண்டிருந்த காரின் டயர் வெடிக்கின்றது என்றால் அந்த டயர் சரி வர பராமரிக்காமல் இருந்ததே முக்கிய காரணம் ஆகும். பராமரிப்பு என வரும்போது காற்றை போதி அளவு நிரப்ப தவறினாலும், அது பராமரிப்பு குறைபாடே ஆகும். இதுதவிர நீண்ட காலமாக, அதாவது, டயர் தேய்ந்த நிலையில் பயன்படுத்தும் என்றாலும், அந்த டயர் வெடிக்க நேரிடும்.

இதுதவிர இன்னும் சில காரணங்களாலும் டயர்கள் திடீரென வெடிக்க நேரிடுகின்றன. இத்தகைய வெடிப்பைச் சந்தித்ததன் காரணத்தினாலேயே ஹோண்டா ஜாஸ் காருடன், ஹோண்டா சிட்டி மோதி விபத்தைச் சந்தித்து இருக்கின்றது. ஹேட்ச்பேக் காரை முந்த நினைத்தபோதே ஹோண்டா சிட்டி செடான் டயர் வெடிப்பைச் சந்தித்து விபத்தைச் சந்தித்து இருக்கின்றது.
இந்த சம்பவம் முழுவதும் ஹோண்டா ஜாஸ் காரின் பொருத்தப்பட்டு இருந்த டேஷ் கேமிராவில் பதிவாகி இருக்கின்றது. டயர் வெடித்த பின்னரே அந்த கார் கன்ட்ரோலை இழந்து ஜாஸ் உடன் மோதி இருக்கின்றது. அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்த விதமான ஆபத்தும் ஏற்படவில்லை. மிக சிறிய காயங்களே இரு கார்களிலும் இருந்தவர்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
இதுபோன்ற டயர் வெடிப்பை தவிர்க்க என்ன செய்யலாம்? டயரை தவறாமல் அடிக்கடி சோதிக்க வேண்டும். அதன் தேய்மானம் குறித்து தொடர்ச்சியாக ஆய்வு செய்தல் வேண்டும். ஆங்காங்கே வெடிப்போ அல்லது கிழிசலையே நீங்கள் பார்த்தால் உடனடியாக அந்த டயரை மாற்றிவிட வேண்டும். இதில் சமரசம் கூடவே கூடாது.
மிக முக்கியமாக மிமீ ட்ரெட் டெப்த்தைக் கொண்டிருப்பதை நீங்கள் உறுதிப்படுத்த வேண்டும். இதுவே டயருக்கும், சாலைக்குமான இணைப்பை உறுதிப்படுத்தும். அதீத வேகத்தில் பயணிப்பதையும் தவிர்த்துவிடுங்கள். பெரும்பாலான வாகனங்கள் ஓட்டுநரிந் கட்டுப்பாட்டை இழக்க அதீத வேகமே காரணமாக இருக்கின்றது. ஆகையால், உங்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேக வரம்புகளை மீறாமல் இருப்பதே நல்லது ஆகும்.
டயரில் போதுமான காற்று இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும். குறைந்த காற்றழுத்தம் காரணமாகவும் சில நேரங்கள் டயர்கள் வெடிக்க நேரிடலாம். இதேபோல், அதிக அளவிலும் காற்றை நிரப்பக் கூடாது என்பது கவனத்தில் கொள்ளுங்கள். ஓவர்லோடு கூடவே கூடாது. இதுவும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்க மிகப் பெரிய காரணமாக இருக்கின்றது.
இதுதவிர கோடையின் கொளுத்தும் வெயிலில் நீங்கள் பயணிக்கின்றீர்கள் என்றால், கொஞ்சம் நேரம் நிழலில் நிறுத்திவைத்து உங்களின் காருக்கு ஓய்வும், டயருக்கு குளிர்ச்சியையும் வழங்க வேண்டும். இந்த செயல்களின் வாயிலாக டயர் வெடிப்பை முற்றிலுமாக தவிர்க்க முடியும். டயர் வெடிப்பை சமாளிப்பது எப்படி? டயர் வெடிப்பு ஏற்பட்டால், பதற்றம் அடையாமல் காரை கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்பதே முதல் விதியாகும்.
குறிப்பாக திடீரென பிரேக்கை பிடித்தல் கூடாது. பிரேக்கை பிடிப்பதனாலேயே கார் கட்டுப்பாட்டை இழந்து, நேராக செல்ல முடியாமல் திணறும். அதேநேரத்தில் ஸ்டியரிங் வீல் மற்றும் பிரேக்குகளில் மெதுவான உள்ளீடுகளை வழங்க வேண்டும். இதன் வாயிலாக மிக பொறுமையாக காரை ஓரங்கட்டி பாதுகாப்பாக வெளியேற்ற முடியும். இவ்வாறு செய்வதனால் உங்களை மட்டுமல்ல மற்ற வாகன ஓட்டிகளுக்கும் போதுமான பாதுகாப்பை வழங்க முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்னதான் கவனமாக சென்றாலும், அதிக வேகம் ஏதாவது ஓர் வழியில் நம்மை விபத்தில் சிக்க வைத்துவிடும் என்பதற்கு சான்றாகவே இந்த நிகழ்வு தற்போது அரங்கேறி இருக்கின்றது. ஆகையால், எப்போது அதீத வேகம் கூடாது என்பதே எங்களின் அறிவுறுத்தல் ஆகும். மீறினால், என்ன நடக்கும் என்பதை இந்த வீடியோவை பார்த்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications