எரும மாடு போலிருக்கும் காரை தலையில தூக்கி வச்சு கொண்ட பல்லி மாதிரியான கார்! 1650கிலோக்கும் அதிக எடை கொண்ட கார்

தன்னை விட உருவத்தில் பிரமாண்டமாக இருக்கும் கார் ஒன்றை பல்லி மாதிரியான உருவம் கொண்ட ஹோண்டா சிட்டி (Honda City) கார் தலை மேலே தூக்கி வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. விபத்தினாலேயே இத்தகைய நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. ஹோண்டா சிட்டி-க்கு மேலே இருப்பது டாடா ஹாரியர் (Tata Harrier) கார் மாடல் மாடல் ஆகும். இது ஹோண்டா சிட்டி காரைவிட பலமடங்கு அதிக எடைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும்.

1,107 கிலோ முதல் 1,153 கிலோ வரையில் எடைக் கொண்டதே சிட்டி கார் ஆகும். அதேநேரத்தில் டாடா ஹாரியர் எஸ்யூவியோ 1,650 கிலோவிற்கும் அதிக எடைக் கொண்டதாக இருக்கின்றது. இத்தகைய அதிக எடைக் கொண்ட வாகனத்தை தன்னுடைய மேற்கூரையில் நிக்க வைத்திருக்கின்றது ஹோண்டா சிட்டி.

Tata harrier and honda city met accident

இதன் வாயிலாக அதிக பாரத்தை மேற்கூரையில் தாங்கும் திறன் கொண்ட காரே ஹோண்டா சிட்டி என்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், அதிக உறுதியான கார் இது என்பதும் இதன் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. பொதுவாக இத்தகைய அதிக பாரம் கொண்ட ஓர் வாகனம் வேறொரு வாகனத்தின் மீது இருக்கும் எனில் அது அப்படியே நசுங்கி இருக்கும்.

ஆனால், இந்த நிலை ஹோண்டா சிட்டிக்கு ஏற்படவில்லை. இதுவே ஆச்சரியப்படும் வகையில் அமைந்திருக்கின்றது. ஹோண்டா சிட்டி காரின் முன் பக்கம் சற்றே ஷார்ப்பானதாக இருக்கும். அதன் இந்த தோற்றமே அசால்டாக டாடா ஹாரியர் காரின் அடிப்பக்கத்தில் குத்தி அதன் மேலே ஏற்றியிருக்கின்றது.

இதேபோல், ஹோண்டா சிட்டியின் அதிக வேகமும் ஓர் காரணமாக இருக்கின்றது. அதிக வேகத்தில் வந்து ஹாரியர் காரின் பின் பக்கத்தில் வந்து மோதியதனாலேயே ஹோண்டா சிட்டி ஹாரியருக்கு அடியில் புகுந்திருக்கின்றது. இதனால் ஹாரியர் கார் பாதுகாப்பு இல்லாதது என்று சொல்லிவிட முடியாது.

அது பாதுகாப்பு விஷயத்தில் ஐந்திற்கு ஐந்து ஸ்டார்களைப் பெற்ற கார் மாடல் ஆகும். அதேபோல், அதிக கவர்ச்சியான கார் மாடலாக அது காட்சியளிக்கின்றது. டாடா ஹாரியர் காரில் பயணிகளின் பாதுகாப்பிற்காக முழங்காலுக்கான ஏர்பேக்குடன் சேர்த்து 6 ஏர் பேக்குகள், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், முன் மற்றும் பின் பக்கத்தில் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இத்தகைய பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைத் தாங்கிய மற்றும் அதிக எடைக் கொண்ட காரையே ஹோண்டா சிட்டி அசால்டாக தன் தலை மேலே விபத்தின்போது தூக்கி நிறுத்தி வைத்திருக்கின்றது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. அனைவரும் சிறு சிறு காயங்களுடன் தப்பி இருக்கின்றனர்.

ஹோண்டா சிட்டி இந்தியாவில் ரூ. 12.28 லட்சம் என்கிற ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதேபோல், டாடா ஹாரியர் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 15 லட்சம் என்கிற விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது கவனிக்கத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் செடான் கார் பிரிவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக ஹோண்டா சிட்டி இருக்கின்றது. இதேபோல், எஸ்யூவி கார் மார்க்கெட்டில் கணிசமான வரவேற்பைப் பெற்றுக் கொண்டிருக்கும் கார் மாடலாக ஹாரியர் இருக்கின்றது. இந்த கார்கள் விபத்தில் சிக்கியிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 18, 2025, 20:29 [IST]
English summary
Honda city crashes into tata harrier on bengaluru mysuru expressway
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+