லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

லம்போர்கினி கார் ஒன்றை ஓட்ட வேண்டுமென்பது பலருக்கு ஆசையாக இருக்கலாம். வி10, வி12 போன்ற ஆற்றல்மிக்க என்ஜினின் பின்னால் இருந்து காரை இயக்க வேண்டுமென்று யாருக்குதான் பிடிக்காமல் இருக்கும். இந்தியா போன்ற பல நாடுகளில் லம்போர்கினி கார்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

தாழ்வான வடிவமைப்பு மற்றும் கூர்மையான ஸ்டைலிங் உள்ளிட்டவை லம்போர்கினி கார்களுக்கே உண்டான அம்சங்களாகும். ஆனால் லம்போர்கினி காரை வைத்துள்ளவர்கள் என்று பார்த்தால் மிகவும் சிலர் மட்டுமே. இத்தகைய லக்சரி கார்களை வாங்க வேண்டுமென்றால், அதிகமாக பணம் வைத்திருக்க வேண்டும் என்றே பலரும் நினைப்பர்.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

ஆனால் சிலர் வேறு வழியில் யோசித்து லம்போர்கினி கார்களுக்கு இணையான தோற்றத்திற்கு தங்களது காரை மாற்றி கொள்வர். அத்தகையவர்களில் ஒருவரை பற்றி தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். மத்திய பிரதேச மாநிலம், இந்தூரை சேர்ந்தவரான இவர் ஹோண்டா சிவிக் காரில் இருந்து போலி லம்போர்கினி அவெண்டேடர் காரை உருவாக்கியுள்ளார்.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

அதாவது, கிட்டத்தட்ட லம்போர்கினி அவெண்டேடர் காரின் தோற்றத்திற்கு ஹோண்டா சிவிக் கார் ஒன்று மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாக்னீட்டோ 11 என்ற யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவினை கீழே காணலாம். முழுவதுமாக மாடிஃபை செய்யப்பட்ட ஹோண்டா சிவிக் காரை காட்டுவதில் இருந்து இந்த வீடியோ துவங்குகிறது.

இந்த மாடிஃபை காரின் பெயர் சில்வர் ஷார்க் என உரிமையாளர் பெயர் வைத்துள்ளார். ஏனெனில் சுறாவின் சில்வர் நிறத்தில் இந்த கார் வடிவமைக்கபட்டுள்ளது. மாடிஃபிகேஷனை பற்றி கூற வேண்டுமென்றால், நாம் சமீபத்தில் பார்த்த மிகவும் சிறப்பான மாடிஃபிகேஷன்களில் இதுவும் ஒன்றாகும். இந்த மொத்த மாற்றங்களையும் இந்தூரை சேர்ந்த ஃபிரோஸ் கான் என்ற மெக்கானிக் மேற்கொண்டுள்ளார்.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

வெள்ளை நிறத்தில் இருந்த இந்த ஹோண்டா சிவிக் காரை சுற்றிலும் கஸ்டம் பாடி பேனல்கள் கிட்டத்தட்ட அவெண்டேடார் தோற்றத்தில் பொருத்தப்பட்டுள்ளன. பொனெட், மேல்நோக்கி தூக்கக்கூடிய கதவு பேனல்கள், முன் கதவுகளில் பொருத்தப்பட்ட பின்பக்கத்தை காட்டும் கண்ணாடிகள், பக்கவாட்டு-ஜன்னல் பேனல்கள், குவார்டர் ஜன்னல் கண்ணாடிகள், பின்பக்கத்திற்கு தேவையான பேனல்கள், ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் என காரின் ஒவ்வொரு ஒற்றை பேனலும் அவெண்டேடருக்கு இணையான வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

இந்த காரில் புதியதாக 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதற்கேற்ப டயர்களும் அகலமானதாக வழங்கப்பட்டுள்ளது. இறக்கை ஸ்பாய்லர் காரின் பின்பக்கத்தில் பொருத்தப்பட்டிருக்க, பக்கவாட்டில் முன் & பின் சக்கரங்களுக்கு இடையே சிவப்பு நிற லைன் ஒன்று செல்கிறது. முன்பக்க பம்பரின் பேனல்களுள் எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் எல்இடி டர்ன் இண்டிகேட்டர்கள் கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளன.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

ஒரிஜினல் அவெண்டேடர் ரோட்ஸ்டரை போன்று இந்த கஸ்டம் ஹோண்டா சிவிக்கின் மேற்கூரையும் பின்னோக்கி மடங்குவதுபோல் கொடுக்கப்பட்டுள்ளது. என்ஜின் புகையை வெளியிடும் எக்ஸாஸ்ட் குழாய் சரியாக காரின் மத்தியில் வழங்கப்பட்டுள்ளது. இதில் இருந்து வெளிவரும் சத்தம் கிட்டத்தட்ட லம்போர்கினி அவெண்டேடரை நினைவூட்டுகிறது.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

ஆனால் லம்போர்கினி கார்களை போல் இல்லாமல், இந்த கஸ்டம் ஹோண்டா சிவிக் காரில் என்ஜின் முன்பக்கத்தில் அப்படியே தொடரப்பட்டுள்ளது. இதனால் பின்பக்கத்தில் 400 லிட்டர்கள் கொள்ளளவில் பொருட்களை வைப்பதற்கு போதுமான இடவசதி கிடைத்துள்ளது. இந்த பூட் ஸ்பேஸிற்கான கதவு மேல்நோக்கி தூக்குவதுபோல் வழங்கப்பட்டுள்ளது. இந்த கதவு கார்பன் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

உட்புறத்தில் மொத்த கேபினும் கருப்பு நிறத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. ஆனால் டேஸ்போர்டு ஹோண்டா சிவிக் காரில் இருந்து அப்படியே தொடரப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய ஸ்போர்ட் இருக்கைகள், டேஸ்போர்ட்டில் விளக்கு ஸ்ட்ரிப், ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ உடன் இணைக்கக்கூடிய பெரிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் சிறிய அளவில் பின்பக்க இருக்கைகள் போன்ற புதிய மாற்றங்களை இந்த ஹோண்டா சிவிக் கார் பெற்றுள்ளது.

லம்போர்கினி கார் போல் இருக்குல!! ஆனால் இது ஹோண்டா சிவிக் என்றால் நம்ப முடிகிறதா! சிறப்பான மாடிஃபிகேஷன்

இதில் பின் இருக்கை வரிசையில் தற்போது சவுகரியமாக இருவர் மட்டுமே அமர முடியும். அத்துடன் கதவு ட்ரிம்கள் மற்றும் டிரான்ஸ்மிஷன் அமைப்பிற்கான கூரை பேனல்களையும் சொந்த முயற்சியில் உருவாக்கி பொருத்தியுள்ளனர். இதில் டிரான்ஸ்மிஷனிற்கான கூரை பேனல்கள், பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகளுக்கான ஸ்விட்ச்களையும் கொண்டுள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Honda civic converted into lamborghini aventador roadster
Story first published: Monday, December 13, 2021, 21:03 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X