ரூ12.5 லட்சத்திற்கு லாம்போர்கினி காராக மாறிய ஹோண்டா சிவிக் கார்! இது எப்படி சாத்தியம் தெரியுமா?

லாம்போர்கினி காரை வாழ்நாளில் ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என பலர் ஏங்கி வரும் நிலையில், யூடூபர் ஒருவர் வெறும் ரூபாய் 12.5 லட்சம் செலவில் தனது சாதாரண ஹோண்டா சிவிக் காரை லம்போர்கினி காராக மாற்றியுள்ளார். இது எப்படி சாத்தியமானது? சாதா காரை எப்படி லம்போர்கினி அழகாக மாற்ற முடியும்? என்ற விரிவான விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

உலகில் அதிவேகமாக பயணிக்கும் கார்களை தயாரிக்கும் நிறுவனங்களில் லாம்போர்கினி நிறுவனமும் ஒன்றாக இருக்கிறது. இந்நிறுவனம் தயாரிக்கும் கார்கள் எல்லாம் சிறந்த பெர்ஃபாமென்ஸ் கொண்ட கார்களாக இருக்கிறது. பல்வேறு விதமான கார்களை நிறுவனம் தயாரித்து வருகிறது. எந்த காராக இருந்தாலும் இந்நிறுவனத்தின் காரை வாழ்நாளில் ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருக்கிறது.

Honda Civic Converted

இந்நிலையில் யூடியூபர் ஒருவர் குறைந்த செலவில் தனது சாதாரண ஹோண்டா சிவிக் காரை லம்போர்கினி காராக மாற்றி உள்ளார். அதுவும் மிகக் குறைந்த செலவில் இவர் இந்த மாற்றத்தை செய்துள்ளார். இது பலரை ஆச்சரியப்படுத்தும் வகையில் இருக்கிறது. இது குறித்து அவர் சொல்லும் போது இதற்காக அவர் வெறும் ரூபாய் 12.5 லட்சத்தை தான் செலவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

யூட்யூபில் தன்னா தாவல் என்ற பெயரில் சேனல் நடத்தி வரும் இவர் பல்வேறு விதமான வீடியோக்களை வெளியிட்டு வருவார். இப்படியாகத்தான் இவர் தற்போது தனது ஹோண்டா சிவி காரை லம்போர்கினி நிறுவனத்தின் டார்ஸோ கார் போல மாற்றியமைத்துள்ளார். இதற்கு அவர் பல்வேறு விதமான மாடிஃபிகேஷன்களை செய்துள்ளார்.

Honda Civic Converted

இதற்காக தவான் தனது ஹோண்டா சிவிக் காரில் இருந்து இன்ஜினை பிரித்து எடுத்துள்ளார். அதை தனியாக ஒரு மெட்டல் ப்ரைமில் பொருத்தியுள்ளார் பின்னர் இவர் பல்வேறு விதமான கார்களின் உதிரி பாகங்களை பயன்படுத்தி இந்த காரின் அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கியுள்ளார் முக்கியமாக பெட்ரோல் டேங்க்கை ஹுண்டாய் நிறுவனத்தின் சென்ட்ரோ காரில் இருந்து எடுத்துள்ளார்.

அடுத்ததாக இந்த காருக்கான சஸ்பென்ஷன் சிஸ்டத்தை மாருதி நிறுவனத்தின் ஆல்டோ காரில் இருந்து எடுத்துள்ளார். இதன் எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை பொருத்தவரை பெனலி 600ஐ பைக்கில் உள்ள எக்ஸாஸ்ட் சிஸ்டத்தை எடுத்து இதில் பொருத்தியுள்ளார். இதன்படி இந்த காரின் அடிப்படை கட்டமைப்பு தயாராகிவிட்டது. இந்த காருக்கு லம்போர்கினி காரின் லுக் வரவேண்டும் என்பதற்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்ட ஃபைபர் கிளாஸ் வடிவமைப்பை தயார் செய்தார்.

Honda Civic Converted

இந்த வடிவமைப்பு பார்க்க லம்போர்கினி டார்ஸோ கார் போலவே இருக்கிறது. இந்த வடிவமைப்பை அப்படியே எடுத்து இவர் ஏற்கனவே தயாரித்த பிரேமில் பொருத்தி இதை ஒரு லம்போர்கினி டார்ஸோ கார் போல வடிவமைத்துள்ளார். தற்போது இந்த கார் சாலையில் ஓட்டும் அளவிற்கு தகுதி பெற்ற காராக இருக்கிறது. இந்த கார் சாலையில் சென்றால் தெரியாதவர்கள் பார்க்கும்போது நிச்சயம் இதை லம்போர்கினி கார் என்று நினைத்து விடுவார்கள்.

இதை முழுவதுமாக செய்து முடிக்க இவருக்கு 12.5 லட்சம் தான் செலவாகியுள்ளது. முழுமையாக கட்டமைக்க 12 மாதங்கள் தேவைப்பட்டுள்ளது. காரைப் பொறுத்தவரை இந்திய மதிப்பில் ரூபாய் 20 முதல் 25 கோடி என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த காரை இவர் மிகக் குறைந்த விலையில் தயாரித்துள்ளது பலரை ஆச்சரியப்படுத்தி உள்ளது. பலரை இந்த சம்பவம் தங்கள் காரையும் மாடிஃபிகேஷன் செய்து பயன்படுத்த வேண்டும் என்ற ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரை ஆர்டிஓ அனுமதி இல்லாமல் பொதுசாலையில் இயக்குவது என்பது சட்டவிரோதமான செயலாகும். இப்படியாக மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட காரை நாம் விருப்பத்திற்காக வேண்டுமானால் நம் சொந்த இடத்திலேயே பயன்படுத்தலாமே தவிர புதுசாலைகளில் பயன்படுத்த வேண்டும் என்றால் இதற்கான உரிய சான்று பெற வேண்டும் என்பது தனி விஷயம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கார் மாடிஃபிகேஷன் செய்யும் பலர் இப்படியாக வித்தியாசமான மாடிஃபிகேஷன் செய்து வருகிறார்கள். இது பார்ப்பதற்கு பிரம்மிப்பாக இருக்கிறது. இப்படி எல்லாம் கூட மாடிஃபிகேஷன் செய்ய முடியுமா என்ற ஆச்சரியத்தை நமக்கு ஏற்படுத்துகிறது. லாம்போர்கினி காரை வாங்க விருப்பமுள்ள பலர் பண பிரச்சனையால் வாங்காமல் தவிப்பவர்களுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கிறது.

More from DriveSpark

Article Published On: Monday, May 20, 2024, 11:34 [IST]
English summary
Honda civic converted lamborghini terzo rs 12 5 lakh watch video
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X