பழைய காரை புதுசுனு சொல்லி வித்துட்டாங்க! கோர்டு வரை போன வாடிக்கையாளர்.. கடைசில நடந்ததுதான் செம டுவிஸ்டு!
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் விஷயத்தில் இந்த கார் விற்பனையாளர்கள் பிஎச்டி படிப்பே படிச்சுட்டு வந்திருப்பாங்க போல. அந்த அளவிற்கு கை தேர்ந்தவர்களாக ஏமாற்றுவதில் கார் விற்பனையாளர்களும், விற்பனையக ஸ்டாஃப்களும் இருக்கின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே ஓர் சம்பவம் இந்தியாவில் சமீபத்தில் அரங்கேறி இருக்கின்றது.
ஓர் ஹோண்டா (Honda) கார் விற்பனையாளர் புதிய காரை புக் செய்தவருக்கு பழைய வெர்ஷன் கார் மாடலை டெலிவரி வழங்கியே மோசடி செயலில் ஈடுபட்டு இருக்கின்றார். இந்த சம்பவம் கார் ஆர்வலர்கள் மத்தியில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

அந்த கார் விற்பனையகம் வாடிக்கையாளரை ஏமாற்ற என்ன மாதிரியான யுக்தியைக் கையாண்டு இருக்கின்றது, இந்த சம்பவத்தில் நுகர்வோர் நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? உள்ளிட்ட முக்கிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் இது குறித்தத விரிவான பதிவிற்குள் போகலாம்.
பஞ்சாப் மாநிலம், ஜலந்தர் பகுதியைச் சேர்ந்தவர் அனு கர்க். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் வசிக்கும் அதே ஜலந்தர் பகுதியில் இயங்கிக் கொண்டிருக்கும் லல்லி மோட்டார்ஸ் (Lally Motors) வாயிலாக ஹோண்டா டபிள்யூஆர்-வி (Honda WR-V) காரை வாங்கி இருக்கின்றார்.
இந்த கார் விஷயத்திலேயே ஷோரூம் நிர்வாகம் மிகப் பெரிய மோசடியைச் செய்து இருக்கின்றது. அதாவது, புதிய வெர்ஷன் டபிள்யூஆர்-வி காரை அனு கர்க் புக் செய்திருந்த நிலையில், அவருக்கு பழைய வெர்ஷனை டெலிவரிக் கொடுத்தே அவர்கள் மோசடியை செய்திருக்கின்றனர். இத்தகைய மோசடியில் ஈடுபட்டதன் அடிப்படையிலேயே அந்த டீலர்ஷிப் நிர்வாகம் மீது மிகக் கடுமையான நடவடிக்கையை சண்டிகர் மாவட்ட நுகர்வோர் குறை தீர் நீதிமன்றம் எடுத்திருக்கின்றது.
புதிய காரை டெலிவரிக் கொடுக்க தவறியதன் காரணத்தினால், அனு கர்க் செலுத்திய ஒட்டுமொத்த தொகையையும் அவரிடமே திருப்பிக் கொடுக்குமாறு உத்தரவிட்டிருக்கின்றது. இன்சூரன்ஸ், ஆர்டிஓ கட்டணம், வரி என அனைத்தையும் அவருக்கு திருப்பிக் கொடுக்கவே நீதிமன்றம் உத்தரவிட்டது. இதுதவிர, கூடுதல் இழப்பீடாக ரூ. 50 ஆயிரத்தையும் அந்த தொகையுடன் சேர்த்து வழங்கவும் நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டள்ளது.
மேலும், வழக்கிற்கான செலவு ரூ. 10 ஆயிரத்தையும் டீலர்ஷிப் நிர்வாகமே வழங்கிடவும் உத்தரவிடப்பட்டறது. ஷோரூம் நிர்வாகம் அனுவிற்கு பழைய காரை மட்டுமே டெலிவரி கொடுக்கலைங்க, அந்த காரில் சில பாகங்கள் பழுதடைந்த நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகின்றது. அந்தவகையில், டபிள்யூஆர்-வி காரை வாங்கிய சில நாட்களிலேயே அந்த காரின் ரிவர்ஸ் பார்க்கிங் கேமிரா சரியாக வேலை செய்யவில்லை என அனு புகார் தெரிவிக்கின்றார்.
இதை பற்றி விசாரிக்க போகும்போதே அவருக்கு பழைய வெர்ஷன் டபிள்யூஆர்-வி கொடுக்கப்பட்டு மோசடிக்கு ஆளாகி இருக்கின்றோம் என்பதை அவர் உணர்ந்திருக்கின்றார். இந்த நிலையிலேயே அதுகுறித்து ஷோரூம் நிர்வாகத்திடம் அவர் முறையிட்டு இருக்கின்றார். ஆனால், இந்த விஷயத்தில் போதிய ரெஸ்பான்ஸை அந்த ஷோரூம் நிர்வாகம் அவருக்கு வழங்கவில்லை.
இந்த நிலையிலேயே சண்டிகர் நுகர்வோர் குறைதீர் மன்றம் வாடிக்கையாளரை ஏமாற்றிய ஷோரூம் நிர்வாகத்திற்கு தக்க பதிலடி கொடுத்திருக்கின்றது. ஆகையால், இனியாவது கார் விற்பனையாளர்கள் இதுபோன்ற மோசடியில் ஈடுபட மாட்டார்கள் என நம்பப்படுகின்றது. அதேவேளையில், ஷோரூம் நிர்வாகங்கள் இதுபோன்று நம்பி வரும் வாடிக்கையாளர்களிடம் மோசடியில் ஈடுபடுவது முதல் முறையல்ல.
இதற்கு முன்னதாகவும் இதுபோன்ற பல்வேறு மோசடி சம்பவங்களை கார் விற்பனையாளர்கள் இந்தியாவில் நிகழ்த்தி இருக்கின்றனர். அவர்கள் மீது இதுபோன்ற மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்க நீதிமன்றங்கள் தவறியதில்லை. இருப்பினும் ஒரு சில விற்பனையாளர்கள் திருந்தியதாக தெரியவில்லை. அவர்கள் தொடர்ச்சியாக இதுபோன்ற மோசடியில் இப்போதும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையிலேயே தற்போது ஜலந்தர் பழைய கார் விற்பனை மோசடி சம்பவம் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது. இந்த நிகழ்வு புதிதாக காரை வாங்கும் பிளானில் இருப்பவர்கள் மத்தியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கின்றது. பழைய (யூஸ்டு) காரை வாங்கச் செல்லும்போதுதான் மோசடி வலையில் வாடிக்கையாளர்கள் சிக்குகின்றார் என்றால் புதிய காரிலுமா என பலரை இந்த சம்பவம் சிந்திக்க வைத்திருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் வாடிக்கையாளர்கள் வெவ்வேறு வழிகளில் ஒவ்வொரு நாளும் ஏமாற்றப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். ஆனால், இந்த மோசடி மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது. புதிய கார் வேண்டும் என்றுதான் புதிய கார் விற்பனையாளர்களை வாடிக்கையாளர்கள் தேடி வருகின்றனர். ஆனால், அவர்களோ அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இப்படி வாடிக்கையாளர்களை ஏமாற்றுவது வேதனை அளிக்கக் கூடிய செயலாக இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








