இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த கணவன்-மனைவி... இந்த பைக்கோட விலை சொகுசு கார்களையே என்ன சேதினு கேக்கும்...

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் பிரபலமாக உள்ள பைக்குகளில் ஒன்று ஹோண்டா கோல்டுவிங் (Honda Goldwing). இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் இந்த பைக்கின் விலை 39.90 லட்ச ரூபாயாக உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) மட்டுமே.

அதே நேரத்தில் இந்த பைக்கின் ஆன்-ரோடு விலை (On-Road Price) சுமார் 45 லட்ச ரூபாயாக இருக்கிறது. இந்த பணத்தில் நிறைய கார்களையே வாங்கி விடலாம் என்பதால், பெரும்பாலான மக்கள் ஹோண்டா கோல்டுவிங் பைக்கை வாங்க ஆர்வம் காட்ட மாட்டார்கள். ஆனால் உண்மையான பைக் ஆர்வலர்கள், விலையை எல்லாம் பொருட்படுத்தாமல் இந்த பைக்கை வாங்கி விடுவார்கள்.

Honda Goldwing

அப்படி விலையை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல், புத்தம் புதிய ஹோண்டா கோல்டுவிங் பைக்கை, ஒரு தம்பதியினர் வாங்கியுள்ளனர். கேரளாவை சேர்ந்த இந்த தம்பதி, ஹோண்டா கோல்டுவிங் பைக்கை டெலிவரி எடுக்கும் வைரல் வீடியோ (Viral Video) தற்போது யூடியூப் (YouTube) தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

இந்த வைரல் வீடியோவில், கேரளா மாநிலத்தை சேர்ந்த ஒரு தம்பதி, தங்களது ஜீப் வ்ராங்லர் ஆஃப்-ரோடு எஸ்யூவி (Jeep Wrangler Off-road SUV) காரில், ஹோண்டா டீலர்ஷிப்பிற்கு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் மூலமே இவர்கள் வாகன காதலர்கள் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

Honda Goldwing Delivery

இந்த தம்பதி தங்களது மகனுடன் வந்து, ஹோண்டா கோல்டுவிங் பைக்கை டெலிவரி எடுத்துள்ளனர். அப்போது அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் பலர் உடனிருந்தனர். கேக், ஃப்ரூட் பியர் என கொண்டாட்டங்களுடன், ஹோண்டா கோல்டுவிங் பைக்கை அவர்கள் டெலிவரி எடுத்தனர். இது அரிதான ஒரு பைக் என்பதால், இந்த வீடியோவை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.

ஹோண்டா கோல்டுவிங் பைக்கில் பொருத்தப்பட்டிருப்பது, 1,833 சிசி 6 சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் ஆகும். அதிகபட்சமாக 5,500 ஆர்பிஎம்மில் 126 பிஎஸ் பவர் மற்றும் 4,500 ஆர்பிஎம்மில் 170 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன், 7 ஸ்பீடு ட்யூயல் க்ளட்ச் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: ஹோண்டா கோல்டுவிங் மிகச்சிறந்த டூரர் பைக்குகளில் (Tourer Bike) ஒன்றாகும். இந்த விலை உயர்ந்த டூரர் பைக்கை டெலிவரி எடுத்த நபர் கூட, மசினகுடி வழியாக ஊட்டிக்கு செல்ல திட்டமிட்டிருப்பதாக கூறுவதை இந்த வீடியோவில் நம்மால் பார்க்க முடிகிறது.

இந்த ஹோண்டா கோல்டுவிங் பைக், திரையுலக நட்சத்திரங்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமான ஒரு பைக்காக திகழ்கிறது. தமிழ் உள்பட பல்வேறு மொழிகளிலும் பிரபலமான ஒரு நடிகராக உள்ள மாதவன் (Madhavan) கூட ஹோண்டா கோல்டுவிங் பைக்கை வைத்துள்ளார் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 18:42 [IST]
English summary
Honda goldwing delivery viral video all details here
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+