ஹோண்டா நியோவிங் மூன்றுசக்கர ஹைபிரிட் கான்செப்ட் - விபரம்

Written By:

இந்த மாத இறுதியில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் துவங்க இருக்கும் ஆட்டோ ஷோவில், ஒரு புதிய மூன்று சக்கர வாகன கான்செப்ட் மாடலை ஹோண்டா காட்சிக்கு வைக்க உள்ளது.

மிக கவர்ச்சியான டிசைன் தாத்பரியங்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும் இந்த புதிய ஹோண்டா மூன்று சக்கர ஸ்கூட்டர் மாடலுக்கு நியோவிங் என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சிறப்பம்சங்கள் விபரத்தை ஸ்லைடரில் காணலாம்.

ட்ரைசைக்கிள் வகை

ட்ரைசைக்கிள் வகை

முன்புறத்தில் இரண்டு சக்கரங்களும், பின்புறத்தில் ஒரு சக்கரமும் கொண்ட டிரிக்கி வகை ஸ்கூட்டர் மாடலாக வடிவமைத்துள்ளனர். வளைவுகளில் திரும்பும்போது, இதன் இரண்டு முன்சக்கரங்களும் அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் அமைப்பை பெற்றிருக்கின்றன.

ஹைபிரிட் மாடல்

ஹைபிரிட் மாடல்

இந்த ஸ்கூட்டரில் அதிசக்திவாய்ந்த 4 சிலிண்டர் எஞ்சின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டாரில் துணையில் இயங்கும் ஹைபிரிட் வகை ஸ்கூட்டராக இருக்கிறது. இந்த ஹைபிரிட் மாடலின் செயல்திறன் மிகச்சிறப்பாக இருக்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது. பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் ஆற்றல் செலுத்தப்படும்.

ஹோண்டா லிங்கேஜ் மெக்கானிசம்

ஹோண்டா லிங்கேஜ் மெக்கானிசம்

இந்த ஸ்கூட்டரின் முன்புற சக்கரங்களில் டில்ட் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும், இருசக்கரங்களையும் இணைந்து செயல்படுவதற்கான பிரத்யேக இணைப்பு தொழில்நுட்பமும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மிகச்சிறப்பான கையாளுமையையும், வளைவுகளிலும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யும்.

 புதிய அனுபவம்

புதிய அனுபவம்

ஓர் விலையுயர்ந்த பைக்கில் பயணிப்பதைவிட இந்த புதிய ஸ்கூட்டர் கான்செப்ட் மிக சொகுசான பயணத்தை அனுபவத்தை வழங்கும் என்று ஹோண்டா தெரிவிக்கிறது.

போட்டி

போட்டி

பியாஜியோ எம்பி3, யமஹா ட்ரைசிட்டி போன்ற மாடல்களுக்கு போட்டியாக இந்த கான்செப்ட் மாடலை ஹோண்டா அறிமுகம் செய்ய காத்திருக்கிறது.

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடல்

தயாரிப்பு நிலை மாடலில் கூடுதல் மாற்றங்களுடன், வாடிக்கையாளர்களுக்கு ஏதுவான விலையில் அறிமுகம் செய்யப்படலாம் என்பது ஆட்டோமொபைல் துறையினரின் எதிர்பார்ப்பு.

 
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Honda Neowing Tilting Tricycle Concept Details.
Please Wait while comments are loading...

Latest Photos