விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

ஹோண்டா நிறுவனத்தின் ஹோண்டாஜெட் எலைட் எஸ் சொகுசு விமானம் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலைக் கீழே காணலாம்.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

பிரபல கார் தாயரிப்பு நிறுவனமான ஹோண்டா, விமானம் தயாரிப்பில் ஈடுபட்டு வருவது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும். நிறுவனம் கடந்த இரு தசாப்தங்களாகவே இப்பணியில் ஈடுபட்டு வருகின்றது. தற்போது, விமானத்தை உருவாக்குவது மட்டுமின்றி பயன்பாட்டிற்கு (விற்பனைக்கு) கொண்டு வருவது வரையிலான அனைத்து பணிகளும் சிறப்பான இப்பணி நிறைவடைந்திருக்கின்றது. மேலும், தான் உருவாக்கிய ஆடம்பர ரக விமானத்தையும் அது காட்சிப்படுத்தியுள்ளது.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

உலக செல்வந்தர்கள் மற்றும் பணகாரர்களுக்காக மட்டுமே இவ்விமானத்தை ஹோண்டா உருவாக்கியிருக்கின்றது. ஹோண்டா ஜெட் எலைட் எஸ் எனும் பெயரில் இந்த விமானம் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது. அதிக சொகுசு மற்றும் தனி நபர் பயன்பாட்டு வசதிகளுடன் இவ்விமானம் உருவாகியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

இது ஓர் இலகு ரக விமானம் ஆகும். இந்த விமானத்தின் அதிகபட்ச டேக்-ஆஃப் எடையே 90 கிலோ மட்டுமே என கூறப்படுகின்றது. மேலும், இவ்விமானம் முழுமையாக 225 கிமீ வரை ரேஞ்ஜை வழங்கும். விமானத்தை அதிக வேகத்தில் பறக்க செய்ய உதவும் எஞ்ஜின்கள் விநோதமாக றெக்கைகளின் மேலே நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

இது முற்றிலும் விநோத உருவ தோற்றத்தை ஹோண்டாஜெட் எலைட் எஸ் சொகுசு விமானத்திற்கு வழங்குகின்றது. தொடர்ந்து, இவ்விமானத்தில் மேம்பட்ட ஸ்டீயரிங் பெருக்குதல் (Advanced Steering Augmentation System - ASAS) அமைப்பு ஹோண்டா வழங்கியிருக்கின்றது.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

இது சிஸ்டமானது தானியங்கி வசதியை வழங்க உதவும். அதாவது, விமானி இல்லா இயக்கும் அனுபவத்தை வழங்க இது உதவும். ஆகையால், விமானிகளால் சில மணி நேரங்கள் ஓய்வெடுக்க முடியும். விமானிக்கே இந்தளவு சொகுசு வசதி இவ்விமானத்தில் வழங்கப்பட்டிருக்கு என்றால், அதன் உரிமையாளர்கள் பயணிக்கும் உட்புற பகுதியில் எவ்வளவு சொகுசு வசதிகள் வழங்கப்பட்டிருக்குமோ என கேட்கிறீங்களா.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

ஆமாங்க, பல பிரம்மிப்பை ஏற்படுத்தும் வசதிகள் இவ்விமானத்தில் வழங்கப்பட்டிருக்கின்றன. குறிப்பிட்டு கூற வேண்டுமானால் தொழில் வகுப்பு விமான இருக்கைகளில் காணப்படுவதைக் காட்டிலும் பல மடங்கு சொகுசு மற்றும் பிரீமியம் வசிகள் ஹோண்டாஜெட் எலைட் எஸ் விமானத்தில் வழங்கப்பட்டிருக்கின்றது.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

விமானத்தின் உட்புற பகுதிக்கு கிரீம் மற்றும் பழுப்பு நிற கலவை கொடுக்கப்பட்டுள்ளது. இது மிகவும் ராயலான உட்புற தோற்றத்தை விமானத்திற்கு வழங்கும் வகையில் அமைந்துள்ளது. இத்துடன், மிக மிருதுவான இருக்கைகள், பெரிய ஜன்னல்கள் ஆகியவையும் இதில் இடம்பெற்றிருக்கின்றன.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

ஹோண்டா நிறுவனம் இந்த விமானத்தை பல விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. இதன்படி, லக்ஸே கோல்டு, துப்பாக்கி உலோக நிறம் மற்றும் ஆழ் கடல் நீல நிறம் ஆகிய நிற தேர்வுகளில் ஹோண்டாஜெட் எலைட் எஸ் விமானம் கிடைக்கும்.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

குறைந்த உறுப்பினர் கொண்ட லக்சூரி பயண அனுபவத்தைத் தேடும் நபர்களுக்கு இவ்விமானம் ஓர் சிறந்த தேர்வாக அமையும் என ஹோண்டா நம்புகின்றது. எனவேதான், ஆரம்பத்தில் இதை உருவாக்கும்போது திட்டமிட்டதைக் காட்டிலும் பல மடங்கு அப்கிரேட் செய்து இப்போது காட்சிப்படுத்தியுள்ளது.

விமான தயாரிப்பில் ஹோண்டாவா..! தனிநபர் பயணங்களுக்கான ஹோண்டாவின் சொகுசு விமானம்... வெளியீடு!!

இவ்விமானத்தின் விற்பனைக்கான அறிமுகம் பற்றிய தகவல் இதுவரை வெளியிப்படவில்லை. மிக விரைவில் இது விற்பனைக்கு வர இருப்பதாக நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகள் சிலர் தகவல் தெரிவித்திருக்கின்றனர்.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Honda Showcases All-New HondaJet Elite S Luxury Aircraft. Read In Tamil.
Story first published: Thursday, May 27, 2021, 12:47 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X