செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), இந்நிறுவனம் ஹோண்டா ஜெட் (HondaJet) எனும் பெயரில் விமான தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்று. இந்த நிறுவனத்தின் வாயிலாக தற்போது புத்தம் புதிய இலக ரக ஜெட் விமானத்தை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இதனை தற்போது நிறுவனம் வெளியீடும் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இப்பதிவில் காணலாம், வாங்க.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

ஸ்கூட்டர், மோட்டார்சைக்கிள் மற்றும் கார் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பிரபல ஹோண்டா நிறுவனம், புதிய இலக ரக ஜெட் விமானத்தை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விமானத்தையே நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இப்புதிய விமானத்தை அதிக எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் வகையில் வடிவமைத்திருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

இது ஓர் சொகுசு வசதிகள் கொண்ட சிறிய ரக விமானம் ஆகும். தனி நபர் பயன்பாட்டிற்கு உதவும் வகையில் இவ்விமானத்தை ஹோண்டாஜெட் நிறுவனம் வடிவமைத்து உள்ளது. சமீப காலமாக விமான தயாரிப்பில் ஹோண்டா நிறுவனம் தீவிரம் காட்டி வருகின்றது. அண்மையில் லாஸ் வேகாஸ் நகரத்தில் நடைபெற்ற ஓர் நிகழ்வில் நிறுவனம் அதன் புதிய ஹோண்டா ஜெட் 2600 எனும் கான்செப்ட் மாடலை காட்சிப்படுத்தியது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

இந்த விமானம் 2,625 நாட்டிக்கல் மைல் ரேஞ்ஜ் வழங்கக் கூடியது. அதாவது, தோராயமாக 4,800 கிமீ ரேஞ்ஜை வழங்கும் திறனைக் கொண்டது. இத்தகைய சிறப்பு வாய்ந்த விமானத்தைக் காட்சிப்படுத்திய கையோடு தற்போது புதிய விமானத்தை நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

ஹோண்டா ஜெட் எலைட் எஸ் (HondaJet Elite S) என்ற பெயரில் புதிய சொகுசு விமானம் வெளியீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்த புதிய சொகுசு ஜெட் விமானம் மற்றும் ஹோண்டா ஜெட் 2600 கான்செப்ட் விமானம் ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு சில அம்சங்கள் மட்டுமே ஒத்துபோகின்றன.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

புதிய இலகு ரக ஜெட் விமானம் அதிக எரிபொருள் சிக்கனம் மற்றும் மிக அதிக வேகத்தில் பயணிக்கக் கூடியதாக காட்சியளிக்கின்றது. இந்த விமானம் தற்போது பயன்பாட்டில் இருக்கும் இலக ரக ஜெட் விமானங்களைக் காட்டிலும் 20 சதவீதம் அதிகம் எரிபொருள் சிக்கனத்தை வழங்கும் என தெரிவித்திருக்கின்றது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

விமானத்தின் அதிகபட்ச க்ரூஸ் வேகம் 422KTAS, அதிகபட்ச க்ரூஸ் ஆல்டிட்யூட் FL430, என்பிஏஏ ஐஎஃப்ஆர் ரேஞ்ஜ் 1437nm மற்றும் பேக்கேஜ் ஸ்பேஸ் 66 க்யூபிக் அடிகள் ஆகும். இத்தகைய பிரம்மிக்க வைக்கும் வசதிகள் உடனே புதிய ஹோண்டா ஜெட் எலைட் எஸ் சொகுசு விமானம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இவ்விமானத்தை ஹோண்டாஜெட், உலகின் மிக அட்வான்ஸ்ட் லைட் ஜெட் என குறிப்பிடுகின்றது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

புதிய ஹோண்டா ஜெட் எலைட் எஸ் சொகுசு விமானத்தை மூன்று விதமான கேபின் அமைப்புகளில் வழங்க ஹோண்டாஜெட் நிறுவனம் திட்டமிட்டிருக்கின்றது. நான்கு இருக்கை தேர்வு, இரு இருக்கை தேர்வு மற்றும் கோச் ரக நான்கு இருக்கை தேர்வு ஆகிய ஆப்ஷன்களில் இவ்விமானம் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

முதலாவதாக உள்ள நான்கு இருக்கை தேர்வில் இரு இருக்கைகள் எதிரெதிர் பார்த்தவாறும், இரண்டாவதாக உள்ள இரு இருக்கை மிக அதிக சொகுசு வசதியை வழங்கும் வகையிலும், மூன்றாவதாக இருக்கும் நான்கு இருக்கை தேர்வு படுக்கை வசதியுடன் கிடைக்கும். இத்தகைய வசதிகளையே தனது வாடிக்கையாளர்களுக்கு பிரத்யேகமாக வழங்க ஹோண்டா திட்டமிட்டுள்ளது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

எலைட் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு புதிய ஹோண்டாஜெட் எலைட் எஸ் லக்சூரி விமானம் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையில் விமானத்தின் இருக்கை தேர்வுகள் உள்ளன. இந்த விமானத்தை போலவே அண்மையில் காட்சிப்படுத்தப்பட்ட ஹோண்டாஜெட் 2600 கான்செப்ட் இருக்கின்றது. இவ்விமானத்தை மிக விரைவில் ஹோண்டாஜெட் உற்பத்தி செய்ய இருக்கின்றது.

செம்ம சொகுசான கேபின் வசதி கொண்ட ஜெட் விமானம்! இது Honda தயாரிப்பு! எரிபொருளை ரொம்ப கம்மியா குடிக்கும்!

இது விற்பனைக்கு வரும்போது அதன் போட்டியாளர்களைக் காட்டிலும் குறைந்த விலை மற்றும் அதிக திறன் கொண்ட விமானமாக விற்பனைக்குக் களமிறங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆகையால், எதிர்காலத்தில் இந்த விமானம் விமான சந்தையில் புதிய புரட்சியை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஹோண்டா #honda
English summary
Hondajet elite s luxury aircraft unveiled here is full details
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X