ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

By Balasubramanian

உ.பி. மாநிலத்தில் ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய தன் சொந்த மகனுக்கே டிராபிக் போலீஸ் ஒருவர் அபராதம் விதித்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

இந்தியாவில் டூ வீலரில் செல்பவர்கள் ஐ.எஸ்.ஐ. தரம் வாய்ந்த ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வு பெருகி வந்தாலும், ஆங்காங்கே சிலர் விதிகளை மீறி வருகின்றனர். விதிகளை மீறுபவர்களுக்கு டிராபிக் போலீசார் அபாரதம் விதித்தாலும் சிலர் லஞ்சம் வழங்கியும், தங்கள் செல்வாக்கு மூலமும் தப்பி விடுகின்றனர்.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

காவல்துறையில் உயர் பதவியில் இருப்பவர்கள், வக்கீல்கள், பத்திரிக்கையாளர்கள் என பல செல்வாக்கான இடத்தில் இருப்பவர்கள் அதை பயன்படுத்தி ஆபராதத்தில் இருந்து தப்பி வருகின்றனர். நடைமுறை இப்படி இருக்கையில் ஒரு டிராபிக் போலீஸ்காரர் தன் சொந்த மகனுக்கே ஹெல்மெட் போடாடதிற்காக அபாராதம் விதித்துள்ளார்.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

உ.பி., மாநிலத்தை சேர்ந்த ராம் மெஹர் சிங் என்ற டிராபிக் போலீஸ்வாகன தணிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்பொழுது அந்த வழியாக தன் மகன் ஹெல்மெட் போடாமல் வந்து கொண்டிருந்தார். அதை பார்த்த ராம் மெஹர் சிங் தனது மகனுக்கு ரூ 100 அபாரதம் விதித்துள்ளார்.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

இது குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தேஜ் பிரதீப் சிங் கூறுகையில் : "எஸ்.எஸ்.பி. பப்லுகுமார் எங்களுக்கு சாலை விதிகளை கடைபிடிப்பதில் யாருக்கும் எந்த வித சலுகையும் வழங்ககூடாது என அறிவுறித்தியிந்தார். அதன் படியே செயல்பட்டு வருகிறோம். அரசு அதிகாரிகள், போலீசார் என யாராக இருந்தாலும் விதிகளை மீறினால் அபராதம் விதிப்போம். சட்டத்திற்கு மேல் யாரும் இல்லை என்பதில் நம்பிக்கையாக இருக்கிறோம்.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

குறிப்பிட்ட இடத்தில் சம்பவம் நடந்த அன்று சுமார் 58 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டு சுமார் ரூ 10,800 வரை அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அப்பொழுது தலைமை காவலர் ராம் மெஹர் சிங்கின் மகன் ஹரீஸ் குமார் ஹெல்மெட் அணியாமல் வாகன்த்தில் வந்துள்ளார். அவருக்கும் ராம் மெஹர் சிங்கே அபராதம் விதித்துள்ளார்." என கூறினார்.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

இது குறித்து ராம் மெஹர் சிங் கூறுகையில் "நான் எனது மகனுக்கு அபராதம் விதிப்பதற்காக எந்த தயக்கமும் காட்டவில்லை, எஸ்.எஸ்.பியின் உத்தரவு படியே செயல்பட்டுள்ளேன். எனது மகனுக்கு மட்டும் நான் சலுகை வழங்கியிருந்தால் அது தவறான உதராணமாக போயிருக்கும்." இவ்வாறு கூறனார்.

ஹெல்மெட் போடாமல் பைக் ஓட்டிய சொந்த மகனுக்கு அபராதம் போட்ட டிராபிக் போலீஸ்

இந்தியாவில் போக்குவரத்து விதிகளை மீறுவது சகஜமாகியிருக்கும் சூழ்நிலையில் போக்குவரத்து விதிகளை கடுமையாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இருந்தும் பலர் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி அபாராதத்தில் இருந்து தப்பி வரும் நிலையில் இந்த போலீசாரின் செயல் மிகவும் பாராட்டிற்குரியதே.

சரி, இதுமாதிரி போக்குவரத்து போலீசார் வண்டிய நிறுத்தினா பதறாதீங்க. சில விஷயங்களை தெரிந்துகொண்டால், பதட்டம் தேவையில்லை. அந்த விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இனி டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

சீருடையுடன் பணியில் இருக்கும் போலீஸ் அதிகாரி அல்லது போக்குவரத்து துறை அதிகாரி எந்தவொரு வாகனத்தையும் ஆய்வு செய்ய உரிமை உண்டு. அவ்வாறு, உங்கள் வாகனத்தை ஆய்வுக்காக நிறுத்த சொல்லும்பட்சத்தில், வண்டியின் வேகத்தை குறைத்து, சாலையின் ஓரமாக நிறுத்துங்கள். தப்பித்துச் செல்ல முயற்சிப்பது விபத்துக்களுக்கு வழிகோலும்.

காவலருக்கான அதிகாரம்

காவலருக்கான அதிகாரம்

சாதாரண போக்குவரத்து காவலர் உங்களது வாகனத்தின் ஆவணங்களை கேட்பதற்கோ, வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கோ அதிகாரம் இல்லை. ஏஎஸ்ஐ, எஸ்ஐ மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் மட்டுமே ஸ்பாட் ஃபைன் போட அதிகாரம் கொண்டவர்கள். ஏஎஸ்ஐ ரேங்கிற்கு கீழே உள்ள தலைமை காவலர் மற்றும் காவலர்கள் செல்லான் போட முடியாது. அதேநேரத்தில், விதிமீறல்கள் மற்றும் அதன் தன்மை குறித்து குறிப்பெடுக்கவும், அதுகுறித்து காவல்துறை புகார் பதிவு மையத்திற்கு தகவல் அளிக்க முடியும்.

கைது அதிகாரம்

கைது அதிகாரம்

சாதாரண போக்குவரத்து காவலர்கள் வாகனத்தை பறிமுதல் செய்யவோ அல்லது வாகன ஓட்டிகளை கைது செய்யவோ முடியாது. வாகன புகை பரிசோதனை சான்றையும் அவர்கள் கேட்க முடியாது. அது போக்குவரத்து அதிகாரிகளால் மட்டுமே கேட்க முடியும். மேலும், வண்டியிலிருந்து சாவியை பிடுங்குவதற்கும் அதிகாரம் இல்லை.

ஸ்பாட் ஃபைன்

ஸ்பாட் ஃபைன்

சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், மொபைல்போனில் பேசிக் கொண்டே வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட குற்றங்களுக்காக ஸ்பாட் ஃபைன் போடப்பட்டால், அதனை உடனே கட்ட இயலாத சூழல் இருந்தால் மட்டுமே, டிரைவிங் லைசென்ஸை போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். நீதிமன்றத்தில் அபாரதம் கட்டிய பிறகு திரும்ப பெற முடியும். அதேபோன்று, நிர்ணயித்ததைவிட அதிக அபராதம் விதித்தாலும், கோர்ட்டில் கட்டி விடுகிறேன் என்று கூறிவிட்டு செல்லானை பெற்றுக் கொண்டு வந்துவிடலாம்.

டிரைவிங் லைசென்ஸ்

டிரைவிங் லைசென்ஸ்

சிக்னல் ஜம்ப், குடிபோதை டிரைவிங், அதிக பாரம் ஏற்றுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஓட்டுனர் உரிமத்தை பறிமுதல் செய்ய வழி உள்ளது. அதேநேரத்தில், அதற்குண்டான உரிய செல்லான் இல்லாமல் உங்களது டிரைவிங் லைசென்ஸை டிராஃபிக் போலீஸ் எடுத்து செல்ல இயலாது. எனவே, அதற்குண்டான உரிய ஆவணத்தை கேட்டு பெறுவது அவசியம்.

காரை எடுத்துச் சென்றால்...

காரை எடுத்துச் சென்றால்...

காரில் யாரேனும் அமர்ந்திருக்கும்போது, காரை போலீசார் வேறு வாகனம் டோ செய்து எடுத்துச் செல்ல முடியாது. அதேநேரத்தில், போலீசாரிடம் விளக்கம் கேட்டுக் கொண்டு காரை விட்டு இறங்கிவிடுவது அவசியம்.

பெண்களுக்கு...

பெண்களுக்கு...

மாலை 6 மணிக்கு மேல் பெண் வாகன ஓட்டிகள் அல்லது பெண்களை ஏற்றி வரும் வாகனங்கள் போலீசாரால் நிறுத்தப்பட்டால், அவரை பெண் காவலர் மூலமாகவே ஆய்வு செய்ய முடியும் . மேலும், பெண் காவலர் இல்லாதபட்சத்தில், அவரை வரவழைத்து ஆய்வு செய்ய சொல்லவும் பெண்களுக்கு உரிமை உண்டு.

செல்லான்

செல்லான்

அபராதம் விதிக்கும் டிராஃபிக் போலீசாரிடம் அதற்குண்டான செல்லான் புத்தகம் அல்லது மின்னணு எந்திரம் கைவசம் இருக்க வேண்டும். இல்லாதபட்சத்தில் அவர்கள் அபராதம் விதிக்க முடியாது.

இனி டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

சாலை விதியை மீறிய நிலையில், உங்களது டிரைவிங் லைசென்ஸ் மற்றும் வாகனத்தின் இன்ஸ்யூரன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை போக்குவரத்து போலீசாரிடம் காட்டுவது அவசியம். மோட்டார் வாகனச் சட்டம் 130-ன் படி சீருடையுடன் பணியில் உள்ள போக்குவரத்து போலீசாரிடம் வாகன ஓட்டிகள் உரிய ஆவணங்களை காட்டுவது அவசியம், ஆனால், ஒப்படைக்கும் அவசியம் இல்லை.

இனி டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

பணியில் இருக்கும் போலீசாரின் சீருடையில், அவரது பெயர் மற்றும் அவரது பெல்ட் எண் ஆகியவை இருத்தல் அவசியம். அது இல்லாதபட்சத்தில், அவரிடம் அவரது பணி விபரங்களை கேட்டுக் கொண்டு ஆவணங்களை காட்டுவதுடன், அவரிடம் ஆவணங்களை ஒப்படைப்பதையும் தவிர்க்கவும்.

இனி டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

இன்று பல போலீசார் வண்டியை நிறுத்தியவுடன் வாகனத்தில் உள்ள சாவியை முதலில் பிடுங்கிக் கொள்கின்றனர். இதுவும் தவறு. அதேபோன்று, காரின் கதவுகளை கட்டாயமாக திறந்து உங்களை வெளியேற்றுவதும் தவறு.

இனி டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

விதி மீறலுக்காக கைது செய்யும்பட்சத்தில், நேராக காவல் நிலையத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அங்கிருந்து 24 மணி நேரத்திற்குள் உங்களை போலீசார் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும். எனவே, விதிமுறைகளை மீறும்பட்சத்தில் இந்த விதிகளை மனதில் வைத்தால் தேவையற்ற பதற்றத்தை தவிர்க்க முடியும்.

இனி டிராஃபிக் போலீஸ் உங்க வண்டிய நிறுத்தினா பதறாதீங்க... !!

இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் விதிமுறைகள் வாகன ஓட்டிகள் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். லஞ்சம் கொடுப்பதை தவிர்ப்பதுடன், போலீசாருக்கு பயந்து விபத்தில் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகத்தான். அதேநேரத்தில், வாகனங்களில் உரிய ஆவணங்கள் இருக்கும்பட்சத்தில்தான் இந்த விதிமுறைகள் பொருந்தும் என்பதையும் மனதில் வைக்கவும்.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்ட செய்திகள்:

01. 2018 மாருதி டெசர்ட் ஸ்டார்ம் ராலி பந்தய வெற்றி பெற்றவர் விபரம்!

02. உங்கள் காருக்கான மறு விற்பனை மதிப்பை அதிகரிக்க இந்த 10 விஷயங்களை கடைபிடியுங்கள்

03. சொந்தமான விமானம் வைத்திருக்கும் இந்தி திரைப்பட பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

04. மஹிந்திரா மோஜோ எஞ்சினுடன் வரும் புதிய ஜாவா மோட்டார்சைக்கிள்கள்!

05.உலகின் விலையுயர்ந்த எஸ்.யூ.வி., கார் கார்ல்மேன் கிங்!

Tamil
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
Honest traffic cop fines own son for riding motorcycle without helmet. Read in Tamil.
 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more