மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

ஓசூர் தொழிலாளி உருவாக்கியுள்ள மின்சார சைக்கிள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Recommended Video

ஆட்டோமேட்டிக் கார்கள் பற்றிய இந்த முக்கிய விஷயங்களை யாரும் சொல்லமாட்டாங்க!
மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

மின்சார வாகனங்களின் முக்கியத்துவத்தை இந்திய மக்கள் உணர தொடங்கியுள்ளனர். பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதுதான் இதற்கு முக்கியமான காரணம். மேலும் சுற்றுச்சூழல் மீது அக்கறை உள்ளவர்களும், மின்சார வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எனவே வாகன உற்பத்தி நிறுவனங்கள் போட்டி போட்டு கொண்டு மின்சார தயாரிப்புகளை களமிறக்க தொடங்கியுள்ளன.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

ஆனால் இந்தியாவில் மின்சார வாகனங்கள் இன்னும் பெரிய அளவில் பயன்பாட்டிற்கு வரவில்லை. கார்களை பொறுத்தவரை ஹூண்டாய் கோனா, எம்ஜி இஸட்எஸ், டாடா நெக்ஸான் போன்ற தயாரிப்புகள் மட்டும்தான் மின்சார ரகத்தை சேர்ந்தவை. இரு சக்கர வாகனங்களை பொறுத்தவரை, ஏத்தர் மற்றும் பஜாஜ் போன்ற சில நிறுவனங்கள் மட்டுமே மின்சார தயாரிப்புகளை விற்பனை செய்து வருகின்றன.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

எனினும் மத்திய, மாநில அரசுகள் வழங்கி வரும் ஆதரவு காரணமாக வரும் காலங்களில் இந்திய சந்தையில் பல்வேறு புதிய மின்சார வாகனங்கள் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபக்கம் எரிபொருளில் இயங்கும் வாகனங்களை ஒரு சிலர் மின்சார வாகனங்களாக மாற்றம் செய்து வருகின்றனர்.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

இது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளம் பல முறை வெளியிட்டுள்ளது. இந்த வரிசையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை சேர்ந்த தொழிலாளி ஒருவர் சைக்கிளை தற்போது மின்சார வாகனமாக மாற்றி அசத்தியுள்ளார். தமிழகம் முழுக்க அனைவருடைய கவனத்தையும் இந்த மின்சார சைக்கிள் ஈர்த்துள்ளது.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

கனரக தொழிற்சாலைகள் அதிகம் உள்ள ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோ பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன். ஐடிஐ படித்துள்ள பாண்டியராஜன், கனரக தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவர்தான் சைக்கிளை, பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனமாக மாற்றியுள்ளார். ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் பாண்டியராஜன் வேலை செய்து வரும் தொழிற்சாலை சமீபத்தில் மீண்டும் திறக்கப்பட்டது.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

ஆனால் நேரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்ட காரணத்தால், நடைபயிற்சி செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதாக பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். எனவே உடற்பயிற்சியாக இருக்கட்டும் எனக்கருதி தொழிற்சாலைக்கு சைக்கிளில் செல்வதை பாண்டியராஜன் வழக்கமாக்கி கொண்டார். ஆனால் ஓசூர் சமதளமான பகுதி கிடையாது. ஆங்காங்கே ஏற்ற, இறக்கங்களை சந்திக்க வேண்டியது வரும்.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

அப்படிப்பட்ட ஒரு இடத்தில் சைக்கிளை ஓட்டுவதில், பாண்டியராஜன் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார். மேடான இடங்களில் சைக்கிளை மிதிக்கும்போது, அவருக்கு மூட்டு வலி ஏற்பட்டுள்ளது. எனவே சோர்வுடன் வீடு திரும்புவார். இதைப்பார்த்து கவலையடைந்த அவரது மகன், உங்களுடைய தேவைக்கு ஏற்ப இந்த சைக்கிளை மின்சார வாகனமாக மாற்றி கொள்ளலாமே என ஆலோசனை வழங்கியுள்ளார்.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

அதாவது மேடான இடங்களில் செல்லும்போது ஆக்ஸலரேட்டரை பயன்படுத்தி கொள்ளும்படியும், மற்ற இடங்களில் பெடல் செய்து கொண்டு பயணிக்கும் வகையிலும் சைக்கிளை மாற்றி கொள்ளுங்கள் என பாண்டியராஜனின் மகன் தெரிவித்துள்ளார். இதற்கு ஏற்ப 2 விதங்களிலும் பயன்படுத்தி கொள்ளும் வகையில், பாண்டியராஜன் சைக்கிளை மாற்றியுள்ளார்.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

சைக்கிளை மிதிக்க முடியாது என கருதினால், முழுக்க முழுக்க ஆக்ஸலரேட்டரை பயன்படுத்தியும் பயணம் செய்ய முடியும். இந்த சைக்கிளில் 250W மோட்டாரை பொருத்தியுள்ளதாக பாண்டியராஜன் கூறியுள்ளார். அதிகபட்சமாக மணிக்கு 25 கிலோ மீட்டர்கள் வேகத்தில் செல்லக்கூடிய இந்த சைக்கிளை உருவாக்க 12 ஆயிரம் ரூபாய் வரை பாண்டியராஜன் செலவு செய்துள்ளார்.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

மின்சார சைக்கிளை உருவாக்கியுள்ள பாண்டியராஜனுக்கு தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. அத்துடன் இந்த மின்சார சைக்கிளை அக்கம் பக்கத்தினர் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இது குறித்து சன் நியூஸ் தமிழ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சைக்கிளின் காணொளியை நீங்கள் கீழே காணலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் உடல் பருமன் உள்ளிட்ட பிரச்னைகளால் தற்போது சைக்கிள்களின் பயன்பாடு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஆனால் சமதளத்தை போல், மேடான இடங்களில் பெடல் செய்ய முடியாது என்பதால், ஒரு சிலர் சைக்கிள்களை தவிர்க்கின்றனர். ஆனால் பாண்டியராஜன் உருவாக்கியுள்ள இந்த சைக்கிள் அந்த பிரச்னைக்கும் முடிவு கட்டியுள்ளது.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

இதுபோன்ற தயாரிப்புகள் அரசின் ஆதரவுடன் வர்த்தக ரீதியில் பயன்பாட்டிற்கு வந்தால், பொதுமக்களிடம் வரவேற்பை பெறுவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகம். அத்துடன் சைக்கிள் பயன்பாடு அதிகரித்தால், இந்திய சாலைகளில் தலைவிரித்தாடி வரும் போக்குவரத்து நெரிசல் பிரச்னைக்கும் முடிவு கட்ட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

ஓசூர் நகரை சேர்ந்த பாண்டியராஜன், சாதாரண சைக்கிளை, மின்சார சைக்கிளாக மாற்றியுள்ள நிலையில், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது சைக்கிள்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு பிரச்னை மட்டும் இதற்கு காரணம் அல்ல. கொரோனா தொற்று அச்சமும் இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பின் தற்போது ஆட்டோ, டாக்ஸி, பேருந்து உள்ளிட்ட பொது போக்குவரத்து வாகனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால் அவற்றில் பயணம் செய்தால், கொரோனா தொற்று ஏற்படும் என மக்கள் அஞ்சுகின்றனர். எனவே கார், பைக் உள்ளிட்ட சொந்த வாகனங்களில் பயணம் செய்வதைதான் பாதுகாப்பானதாக கருதுகின்றனர்.

மகன் கொடுத்த ஐடியாவில் தந்தை உருவாக்கிய சூப்பர் சைக்கிள்... வாயை பிளந்து பார்க்கும் ஓசூர் மக்கள்...

ஆனால் சொந்த வாகனங்கள் இல்லாதவர்களும், பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் உடல் நலன் குறித்து கவலைப்படுபவர்களும் சைக்கிள்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியுள்ளனர். இதனால் இந்தியாவில் சைக்கிள் விற்பனை அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சைக்கிள்களின் விற்பனை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #off beat
English summary
Hosur Factory Worker Invents Electric Bicycle - Video. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X