மேற்கு சைனீஸ் அழகிகளை தேடும் கார் நிறுவனங்கள்: ஏன் தெரியுமா?
உலகின் வேகமாக வளர்ந்து வரும் கார் மார்க்கெட்டில் நம்பர்-1 ஆக இருக்கும் சீனாவில் தற்போது தயாரிப்பாளர்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க பல்வேறு விற்பனை யுக்திகளையும் அங்குள்ள கார் நிறுவனங்கள் கையாண்டு வருகின்றன.
மேலும், வாடிக்கையாளர்களை கவர அவ்வப்போது தங்களது கார்களுக்கான பிரத்யேக ஷோக்களையும் கார் நிறுவனங்கள் நடத்தி வருவதுடன், அதிக அளவில் விளம்பரங்களுக்கும் பணத்தை தண்ணீராய் வாரி இறைத்து வருகின்றன. இந்த நிலையில், நிசான் நிறுவனம் தனது ஜிடிஆர் ஸ்போர்ட்ஸ் காரின் விளம்பரத்துக்கு மேற்கு சீனாவை சேர்ந்த அழகியை தேர்ந்தெடுத்து போட்டோஷூட் நடத்தியுள்ளது.
மேற்கு சீன அழகிகள் உயரமானவர்களாகவும், வாளிப்பான உடலழகை பெற்றவர்களாக இருப்பதே இதற்கு காரணம் என விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, தற்போது கார் நிறுவனங்களின் விளம்பர பிரிவினர் மேற்கு சீன அழகிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஸ்லைடரில், மேற்கு சீன அழகியை வைத்து எடுக்கப்பட்ட நிசான் ஜிடிஆர் போட்டோஷூட்டை காணலாம். தொடர்ந்து, கண்காட்சி ஒன்றில் ஆடி டிடி காருக்கு விளம்பரம் தேடும் விதமாக அழகி ஒருவர் கொடுக்கும் 'ரியாலிட்டி ஷோ' போஸ்களையும் பார்க்கலாம் வாருங்கள்.






















Click it and Unblock the Notifications








