சுஸுகி இன்ட்ரூடருடன் போட்டோஷுட் நடத்திய அழகி
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மாடல் அழகி கார்மென் ஒர்டெகா. சமீபத்தில் கலிஃபோர்னியாவின் சான்டா மோனிகா பீச்சில் சுஸுகி இன்ட்ரூடர் எம்800 பைக்குடன் சேர்ந்து நின்று இவர் நீச்சல் உடையுடன் போட்டோஷுட் நடத்தியுள்ளார். அந்த பைக்கை மிகவும் நேசிப்பதால் இந்த போட்டோஷுட்டை நடத்தியதாக அவர் கூறியிருக்கிறார்.
சிறந்த சொகுசு ரக குரூஸர் பைக்கான சுஸுகி இன்ட்ரூடர் செல்வந்தர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருகிறது. அந்த பைக்குடன் நின்று கார்மன் தரும் விதவிதமான போஸ்களுடன் கூடிய போட்டோஷுட்டையும், இன்ட்ரூடர் எம்800 பைக் பற்றிய கூடுதல் தகவல்களையும் ஸ்லைடரில் காணலாம்.

இன்ட்ரூடர் குடும்பம்
சுஸுகி நிறுவனம் இன்ட்ரூடர் பிராண்டில் உயர்ரக குரூஸர் பைக்குகளை விற்பனை செய்து வருகிறது. 1985ம் ஆண்டு இன்ட்ரூடர் பைக் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது.

எஞ்சின்
இந்த பைக்கில் லிக்யூடு கூல்டு 805சிசி எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது.

பவர்
குரூஸர் ரகத்தை சேர்ந்த இந்த பைக் அதிகபட்சமாக 50 பிஎச்பி பவரையும், 65 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும்.

மைலேஜ்
நகர்ப்புற டிரைவிங்கில் லிட்டருக்கு 12 முதல் 14 கிமீ மைலேஜையும், நெடுஞ்சாலைகளில் 20 கிமீ மைலேஜையும் தரும்.

எடை
இந்த பைக் 269 கிலோ எடை கொண்டது.

பெட்ரோல் டேங்க்
இந்த பைக்கில் 15.5 லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரோல் டேங்க் பொருத்தப்பட்டிருக்கிறது.

வண்ணங்கள்
மெட்டாலிக் ஓர்ட் கிரே, பியர்ல் நெபுலர் பிளாக் மற்றும் கேண்டி மேக்ஸ் ஆரஞ்ச் ஆகிய வண்ணங்களில் கிடைக்கிறது.

பிரேக்
முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக்கும், பின்புறத்தில் டிரம் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளது.

இன்ட்ரூமென்ட் கிளஸ்ட்டர்
எரிபொருள் மானி, டிரிப் மீட்டர் ஆகியவை டிஜிட்டல் டிஸ்ப்ளேவையும், அனலாக் ஸ்பீடோமீட்டரும் உள்ளது.

உந்துசக்தி
0-100 கிமீ வேகத்தை இந்த பைக் 9 வினாடிகளில் தொடும் ஆற்றல் வாய்ந்தது.

பிரபலங்களின் சாய்ஸ்
பாலிவுட் நடிகர் சல்மான்கான் உள்பட இந்தியாவில் பல பிரபலங்களின் சிறந்த சாய்ஸ் இந்த பைக்தான்.

விலை
ரூ.9.5 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications








