மனதுக்குள் புகுந்து உறுத்தும் மோட்டார்சைக்கிள்கள்

மோட்டார்சைக்கிள்கள் மீதான காதலையும், ஈர்ப்பையும் விவரிக்க இயலாது. , ஒரு சில மோட்டார்சைக்கிள்களின் ஸ்டைல், பவர் நமது ஆவலை 1000 மடங்கு தூண்டிவிடும்.

பவர், ஸ்டைல் என மிரள வைக்கும் அந்த மோட்டார்சைக்கிள்கள் மீது பலர் பைத்தியமாக இருந்து வருகின்றனர். அதுபோன்ற சில பைக்குகளின் விபரங்களை ஸ்லைடரில் காணலாம். ஒவ்வொருவரின் ரசனை மாறும் என்பதால், ஒவ்வொரு ரகத்திலும் ஒரு சிறந்த பைக்கை தேர்வு செய்து வழங்கியிருக்கிறோம்.

 பிரம்மோ எம்பல்ஸ்

பிரம்மோ எம்பல்ஸ்

வாகனங்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறதே என்பவர்களுக்கான பைக் இது ஓர் முழுவதுமான அமெரிக்க பிராண்டு எலக்ட்ரிக் சூப்பர் பைக். இதன் நெஞ்சு முழுவதும் பேட்டரியால் விம்மி விதும்புகிறது. மணிக்கு அதிகபட்சம் 170 கிமீ வேகத்தில் பறக்கும்.

ஏவுகணை போலத்தான்

ஏவுகணை போலத்தான்

இந்த பைக்கில் 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 195 கிமீ வரை செல்லும். இது எலக்ட்ரிக் பைக் என்பதால் சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக இருக்கிறது.

கேடிஎம் 1190 அட்வென்ச்சர்

கேடிஎம் 1190 அட்வென்ச்சர்

நம் நாட்டு இளைஞர்களை கவர்ந்திழுத்த கேடிஎம் டியூக் 200 பைக்கின் உயர் ரக வெர்ஷன். சாகசங்களில் ஈடுபாடு கொண்டவர்களுக்கான உன்னத தேர்வாக இருக்கும்.

பவர் ஸ்டார்

பவர் ஸ்டார்

கம்பீரமான தோற்றத்துக்கு 19 இன்ச் முன்பக்க வீல், எஞ்சினுக்கு வற்றாத எரிபொருள் சப்ளை செய்ய 23 லிட்டர் பெட்ரோல் டேங்க்கை கொண்டுள்ளது. இதன் எஞ்சின் பவர் 150 பிஎச்பி ஆகும்.

 ஹோண்டா சிபி 1000ஆர்

ஹோண்டா சிபி 1000ஆர்

ரேஸ் மோட்டார்சைக்கிள் வேண்டாம், சாலைகளில் சீறிப்பாய ஓர் சூப்பர் பைக் வேண்டும் என்பவர்களுக்கு சிறந்த மாடல். நடுத்தர எடை கொண்ட இந்த சூப்பர் பைக் சிறந்த கையாளுமை கொண்டது.

ஸ்டைல் பைக்

ஸ்டைல் பைக்

2007ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஹோண்டா சிபி1000ஆர் பைக்கை ஹார்னெட் என்றும் அழைக்கப்படுகிறது. இதன் எஞ்சின் அதிகபட்சம் 125 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும். ரூ.10 லட்சத்திற்குள் இந்தியாவில் கிடைக்கிறது.

பிஎம்டபிள்யூ கே1600ஜிடி

பிஎம்டபிள்யூ கே1600ஜிடி

உயர் ரக டூரிங் பைக்குகளை விரும்புவர்களுக்கு சிறந்த தேர்வாக இருக்கும். எந்த ஒரு சாலையிலும் இதன் மீது நீங்கள் வைக்கும் அன்பை குலைக்காமல் அழைத்துச் சென்று வரும். ஜெர்மன் தொழில்நுட்பத்தின் அருமையை உணர வைக்கும்.

டுர்ர்ர்ர்... டூரர் பைக்

டுர்ர்ர்ர்... டூரர் பைக்

எலக்ட்ரானிக் த்ரோட்டிள் கன்ட்ரோல் சிஸ்டம், சாலை நிலைக்கு ஏற்பட வேகத்தை மாற்றிக் கொள்வதற்கான வசதிகள், அடாப்டிவ் ஹெட்லைட் ஆகியவை இந்த ஸ்போர்ட்ஸ் டூரர் பைக்கின் சிறப்பம்சங்கள்.

1940 இண்டியா

1940 இண்டியா

இதெல்லாம் ஒண்ணும் வேண்டாம். நான் ஒரு விண்டேஜ் பைக் பிரியன். அதைப்பற்றி ஏதாவது என்பவர்களுக்கான பைக் இது. அமெரிக்காவை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான இண்டியன் தயாரிப்புதான் 1940 இண்டியன். இது தயாரித்த காலத்தில் மிகவும் காஸ்ட்லியான பைக்காக கருதப்பட்டது.

 தேடினாலும் கிடைக்காது

தேடினாலும் கிடைக்காது

இப்போது பல விண்டேஜ் பைக் பிரியர்கள் இந்த பைக்குகளை தேடிப் பிடித்து வாங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். அப்போதைய ஹார்லி டேவிட்சன் இதுதான். அந்தளவுக்கு இந்த பைக் மீது பலர் பிரியம் கொண்டு அலைகின்றனர்.

கடவுள் மனதையும் கரைக்கும்

கடவுள் மனதையும் கரைக்கும்

இதுபோன்ற மோட்டார்சைக்கிள்களை கண்டதும் மனிதனுக்கும் மட்டுமல்ல, கடவுளுக்கும் ஆசை பிறக்கும் என்றால் மிகையாது. சரி, உங்களுக்கு இதுபோன்று மனதுக்குள் உறுத்தி வரும் பைக் எது?

More from DriveSpark

Article Published On: Friday, April 5, 2013, 16:14 [IST]
English summary
Motorbikes have always triggered a passion which is unparalleled. At times this simple machine with two wheels invokes an attitude in you and the biker in you is born. If you are reading this, we are sure you love motorcycles; however there are quite a few motorcycles to die for in this world.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+