தியேட்டரில் கூட்டத்தோட கூட்டமா உக்காந்திருந்தது அவரா! லைட்டை போட்டதும் மிரண்டு போன ரசிகர்கள்!
திரைப்படங்களை தியேட்டரில் பார்ப்பது என்பது உண்மையிலேயே மகிழ்ச்சியான ஒரு அனுபவம். ஒருவேளை உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், திரையுலக நட்சத்திரங்களையும் உங்களால் பார்க்க முடியும். அவர்களுடன் புகைப்படங்களையும் எடுத்து கொள்ள முடியும். ஆம், உண்மைதான். புதிய திரைப்படங்கள் வெளியாகும்போது, ஒரு சில சமயங்களில் அதன் நட்சத்திரங்கள் தியேட்டர்களுக்கு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
ரசிகர்களுடன் அமர்ந்து தங்கள் திரைப்படத்தை அவர்கள் தியேட்டரில் ரசிக்கின்றனர். இதன் மூலம் படத்தின் உண்மையான நிறை, குறைகள் என்னென்ன? என்பதை அவர்களால் நேரடியாக தெரிந்து கொள்ள முடிகிறது. அத்துடன் தியேட்டர்களில் திரைப்படத்தை காண செல்வதன் மூலம் ரசிகர்களுடன் அவர்களால் நெருக்கமாகவும் முடிகிறது.

மேலும் தியேட்டர்களுக்கு செல்வது போன்ற திரையுலக நட்சத்திரங்களின் நடவடிக்கைகள், திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் விளம்பரம் ஏற்படுத்தி தருவது போலவும் இருக்கும். இதைதான் சஜீத் நடிஅட்வாலா (Sajid Nadiadwala) தற்போது செய்துள்ளார். இவர் இந்திய திரையுலகின் மிகவும் பிரபலமான தயாரிப்பாளர்களில் ஒருவர் ஆவார்.
கடந்த ஜூன் 6ம் தேதி (June 6) வெளியான ஹவுல்ஃபுல் 5 (Housefull 5) திரைப்படத்தின் தயாரிப்பாளர் இவர்தான். பாலிவுட் காமெடி த்ரில்லர் திரைப்படமான ஹவுல்ஃபுல்5, ஏராளமான திரையுலக நட்சத்திரங்களின் நடிப்பில் உருவாகியுள்ளது. இதில், அபிஷேக் பச்சன், அக்ஸய் குமார், ரித்தேஷ் தேஷ்முக், சஞ்சய் தத் மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ் போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

இந்த திரைப்படத்தை சஜீத் நடிஅட்வாலா தற்போது திரையரங்களில் ரசிகர்களுடன் அமர்ந்து பார்த்துள்ளார். அப்போது ரசிகர்கள் பலரும், அவருடன் உற்சாகமாக செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அந்த வைரல் வீடியோ (Viral Video) தற்போது வேகமாக பரவி வருகிறது. சஜீத் நடிஅட்வாலா திரைப்படங்களை போலவே, கார்களையும் அதிகமாக நேசிக்க கூடியவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
அவரது பிரம்மாண்டமான கார் கலெக்ஸனே (Car Collection) இதற்கு சாட்சி. சஜீத் நடிஅட்வாலாவின் சொத்து மதிப்பு (Net Worth) சுமார் 1,500 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே ஏராளமான விலை உயர்ந்த கார்களையும் எல்லாம் சஜீத் நடிஅட்வாலா வாங்கி வைத்துள்ளார்.
இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan), லம்போர்கினி உருஸ் (Lamborghini Urus), மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் (Mercedes Benz S-Class), மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் (Mercedes Benz V-Class) மற்றும் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் (Jeep Wrangler Rubicon) போன்றவை எல்லாம் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
இதில், ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன்தான் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் 10.50 கோடி ரூபாய் முதல் 12.25 கோடி ரூபாய் வரையிலான விலைகளில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ஆகும்.
சஜீத் நடிஅட்வாலாவின் மற்ற கார்களும் கூட மிகவும் விலை உயர்ந்தவைதான். அவரிடம் உள்ள லம்போர்கினி உருஸ் கார் தற்போதைய நிலையில் 4.18-4.57 கோடி ரூபாய் என்ற விலையிலும், மெர்சிடிஸ் பென்ஸ் எஸ்-க்ளாஸ் கார் 1.79-1.90 கோடி ரூபாய் என்ற விலையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
மறுபக்கம் ஜீப் வ்ராங்லர் ரூபிகான் காரானது, 71.65 லட்ச ரூபாய் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை அனைத்துமே எக்ஸ்-ஷோரூம் விலைதான். அதே நேரத்தில் மெர்சிடிஸ் பென்ஸ் வி-க்ளாஸ் காரானது, இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் இல்லை. அதன் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சஜீத் நடிஅட்வாலா சொகுசு கார்களில் பயணம் செய்வதை விரும்ப கூடியவர் என்பதை, அவரது கார் கலெக்ஸன் மூலமாக புரிந்து கொள்ளலாம். அவரது விலை உயர்ந்த கார்களை மும்பை சாலைகளில் அவ்வப்போது காண முடியும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.


Click it and Unblock the Notifications








