சேதமடைந்த நெக்ஸான் காரை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ் டீலர்... புதிய கார் வாங்கும் போது கவனம் தேவை
சேதமடைந்த காரை டச்அப் செய்து வாடிக்கையாளரிடம் டாடா மோட்டார் நிறுவன டீலர் விற்பனை செய்துள்ளார். பின்னர் அதை கண்டுபிடித்த வாடிக்கையாகளர் டீலரிடம் புகார் செய்த உடன் அவருக்கு அந்த காருக்கு பதிலாக புதிய
சேதமடைந்த காரை டச்அப் செய்து வாடிக்கையாளரிடம் டாடா மோட்டார் நிறுவன டீலர் விற்பனை செய்துள்ளார். பின்னர் அதை கண்டுபிடித்த வாடிக்கையாகளர் டீலரிடம் புகார் செய்த உடன் அவருக்கு அந்த காருக்கு பதிலாக புதிய கார் வழங்கப்பட்டுள்ளது.

ஹரியானா மாநிலம் ரெவாரியை சேர்ந்தவர் ஹரேந்திரர் பரத்வாஜ், ஜிம் பயிற்சியாளராக இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு டாடா நெக்ஸான் எக்ஸ் இ காரை வாங்கியுள்ளார்.

அவர் வாங்கிய பின்பு தான் அந்த கார் சேதமடைந்த கார் என்றும் அந்த காரின் சேதங்களை வெளியே தெரியாமல் டச்அப் செய்து இவரிடம் விற்பனை செய்திருப்பதும் தெரியவந்தது.

காரின் ஆங்காங்கே பெயிண்டின் நிறத்தில் லேசான மாறுபாடு இருப்பதை பார்த்துள்ளார். அதை விரல் நகரத்தால் கீறி பார்த்த போது காரின் பெயிண்ட் வந்துள்ளது. இதை அவர் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ உங்களுக்காக
தொடர்ந்து பல்வே இடங்களை மிக நுண்ணியமாக பார்த்த போது காரின் பேனலில் ஒரு சிறிய இடம் உடைந்திருந்ததும் தெரியவந்தது. மேலும் காரின் பின் பக்கத்திலும் சில கீறல்கள் இருந்துள்ளது.

இதையடுத்து பரத்வாஜ் தனது காரை டீலரிடம் கொண்டு சென்று புகார் செய்ததையடுத்து அவருக்கு புதிய கார் வழங்கப்பட்டது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட டீலர்களே சேதமடைந்த காரை வாடிக்கையாளருக்கு விற்பனை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதையும் அவர் வீடியோவாக பதிவு செய்து வெளியிட்டுள்ளார் அதை கீழே பாருங்கள்
நல்ல வேலையா பரத்வாஜ் இதை கண்டுபிடித்து தன் காரை மாற்றிவிட்டார். இன்னும் எத்தனை கார்கள் சேதமடைந்த கார்களை அவர்கள் விற்பனை செய்தார்கள் என தெரியவில்லை.

நீங்கள் அடுத்து கார் வாங்க போகிறீர்கள் என்றால் காரை டெலிவரி எடுக்கும் முன் எல்லா இடங்களையும் நன்றாக சோதனை செய்து விட்டு டெலிவரி எடுங்கள். காரை டெலிவரி எடுக்கும் முன் அதை எப்படி சோதனை செய்ய வேண்டும் என கீழே பாருங்கள்.

காரை டெலிவரி எடுக்கும் முன் செக் செய்ய வேண்டியவை
1. ஓடோ மீட்டர் சரியாக வேலை செய்கிறதா என்பதை செக் செய்யுங்கள். முக்கியமாக கார் டெலிவரி எடுப்பதற்கு முன் 100 கி.மீ., க்குள் மட்டுமே ஓடியிருக்க வேண்டும்.
2. காரின் முழு பாடி பேனலையும் சூரிய வெளிச்சத்தில் பார்த்து கொள்ளுங்கள் ஏதேனும் இடத்தில் பெயிண்டின் நிறம் மாறுபடுகிறதா?, ஏதேனும் இடத்தில் சேதங்கள் ஏற்பட்டுள்ளதா என்பதை செக் செய்து கொள்ளுங்கள்

3. காரின் டயர்கள் புதிதாக உள்ளதா என்பதை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
4. காரின் சீட்கள் சுத்தமாகவும் நேர்த்தியாகவும் உள்ளதா என்பதையும் செக் செய்துகொள்ளுங்கள்.
5. காரின் சேஸிஸ்,இன்ஜின் நம்பர், விஐஎன் ஆகியன உங்களுக்கு வழங்கப்பட்ட ஆவணங்களுடன் ஒத்துபோகிறதா என்பதை சரி செய்து கொள்ளுங்கள்.

6. இன்ஜின் ஆயில், கூலண்ட், ஆகியவற்றின் அளவுகள் சரியாக இருக்கிறதா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள்.
7.காரின் பேட்டரியின் சீரியல் நம்பரை சரி பார்த்துக்கொள்ளுங்கள்.
8. காரில் உள்ள ஹெட்லைட் உள்ளிட்ட எல்லா லைட்கள், ஹாரன்கள், மியூசிக் சிஸ்டம், ஏசி. ஆகியவை சரியாக வேலை செய்கிறதா என்பதை பார்த்து கொள்ளுங்கள்

நீங்கள் அடுத்து புதிய கார வாங்கும் போது பரத்வாஜ்ஜிற்கு ஏற்பட்ட நிலைமை உங்களுக்கு ஏற்படாமல் இருக்க மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு கார் மெக்கானிஷம் பற்றி சரியாக தெரியவில்லை என்றால் நன்றாக தெரிந்த உங்கள் நண்பரையோ, அல்லது கார் மெக்கானிக்கையோ உடன் அழைத்து சென்று கார் வாங்குவது நல்லது.
Source: Harender Bhardwaj on Youtube


Click it and Unblock the Notifications








