ஒரே விமான விபத்தில் சிக்கி ஒரே விதமாகப் பாதிக்கப்பட்ட இருவருக்கு வேறு வேறு நஷ்ட ஈடு வழங்கப்படும் ஏன் தெரியுமா?
ஒரே விமான விபத்தில் சிக்கிய இருவருக்கு வேறு வேறு தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படும். இது குறித்த முழு விபரத்தைக் காணலாம் வாருங்கள்

இந்த உலகில் ஆபத்து அதிகம் நிறைந்த போக்குவரத்து வசதி என்றால் அது விமானம் மற்றும் ஹெலிகாப்டர் போன்ற பறந்து செல்லும் வாகனங்கள் தான். இது தான் பூமியிலிருந்து முற்றிலுமாக விலகி அந்தரத்தில் பறந்து கொண்டே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பயணிக்கும் அதனால் விமானங்கள் விபத்து என்பது மிகக் கோரமாக நடக்கக் கூடியது.

பொதுவாகச் சாலைகளில் பஸ் விபத்து நடந்தால் பல நேரங்களில் உயிரிழப்பு என்பது நடக்காது. உயிரிழப்பு ஏற்படும் விதமான சாலை விபத்து மிகவும் குறைவுதான். அதாவது மொத்தம் ஏற்படும் சாலை விபத்துகளில் உயிரிழப்பு உள்ள விபத்துக்கள் குறைவு தான். ஆனால் விமானங்களில் விபத்து ஏற்பட்டால் உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்.

இதனால் விமானங்கள் விபத்தில் சிக்குவதைத் தவிர்க்கப் பல முன்னேற்பாடுகள், முன்னெச்சரிக்கை விஷயங்கள் பல செய்யப்படுகிறது. இதனால் விமானங்கள் பெரும்பாலும் விபத்தில் சிக்குவதில்லை. ஆனால் சில நேரங்களில் யாரும் எதிர்பாராத விதமான விமானங்கள் விபத்தில் சிக்குகின்றன. இதனால் உயிர்ப் பலிகளும் அதிகமாக நடக்கிறது.

பொதுவாக ஒரு விபத்தில் ஒரு உயிர் மரணமாகிவிட்டால் அந்த வாகனத்திற்கான இன்சூரன்ஸ் நிறுவனம் இறந்தவர்களுக்கான இழப்பீட்டை வழங்கும். ஆனால் விமானங்கள் என்பது சர்வதேச எல்லைகளைக் கடந்து பயணம் செய்வது. இப்படியாக ஒரு விமானம் விபத்தில் சிக்கினால் என்ன நடக்கும்? அதில் பலியான அல்லது காயமடைந்தவர்களுக்கு எப்படி நஷ்ட ஈடு கிடைக்கும்? இது பற்றி விரிவாகக் காணலாம் வாருங்கள்.

ஒரு விமான விபத்திற்குள் சிக்கினால் அதில் பாதிக்கப்பட்டவர்கள் நஷ்ட ஈடு என்பது ஒவ்வொரு விமான நிறுவனத்திற்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் மாறுபடும். இதற்கும் இன்சூரன்ஸ் மூலம் தான் பணம் கொடுக்கப்படும். ஆனால் அந்த காப்பீடு என்பது விமான நிறுவனங்களில் சர்வதேச அளவில் நடத்தப்படும் இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இதற்காக விமான நிறுவனங்கள் ஐஎம்எஃப் என அழைக்கப்படும் International Monetary Fund என்ற நிறுவனத்தின் மூலம் SDR (special drawing rights) என்ற ரீதியில் இறந்தவர்களுக்குப் பணம் வழங்கப்படுகிறது.

அதன்படி விமான விபத்தில் சிக்கியவருக்கு அதிகபட்சமாக 1,13,100 SDR வரை நஷ்ட ஈடு வழங்கப்படலாம். அதில் SDR என்பதற்கு இந்திய மதிப்பு ரூ104.9 ஆகும். அப்படி என்றால் இந்திய ரூபாய் அதிகபட்சமாக ரூ1.18 கோடி நஷ்ட ஈடாக வழங்கப்பட வாய்ப்பு உள்ளது.

இதற்கு முன்னதாக விபத்து நடந்ததும் montreal convention விதி பிரிவு எண் 28ன் படி விபத்து நடந்ததும் விபத்தில் காயம், படுகாயம், உயரிழிப்பு போன்ற விஷயங்கள் உறுதிசெய்யப்பட்டால் அவர்களுக்கு இடைக்கான இழப்பீடு தொகையை வழங்க வேண்டும். அதுவும் விபத்து நடந்த 90 நாட்களுக்கும் இது வழங்கப்பட்ட வேண்டும்.

அதன்படி உயிரிழந்தவர் 12 வயதிற்கு மேற்பட்டவராக இருந்தால் ரூ10 லட்சம், 12 வயதிற்குப்பட்டவருக்கு ரூ5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ2 லட்சம் என இடைக்கால இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதன் பின்னர் விசாரணை நடத்தப்பட்டுப் பாதிக்கப்பட்டவரின், வயது, வருமானம், குடும்ப சூழ்நிலையில் அவரின் நம்பி குடும்பத்தில் இருக்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை, சமூகத்தில் எந்த அந்தஸ்தில் இருக்கிறார் உள்ளிட்ட பல விஷயங்களைக் கணக்கில் கொண்டு அவருக்கான முழுமையான இழப்பீடு தொகை முடிவு செய்யப்படும்.

இது மட்டுமல்ல விமான எந்த நாட்டில் விபத்திற்குள்ளானது, எந்த நாட்டில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனத்தின் விமானம் விபத்திற்குள்ளானது? சர்வதேச வான்வெளி எல்லையில் விபத்து நடந்ததா? உள்ளிட்ட பல விஷயங்களைப் பொருத்தும் ஒட்டு மொத்த இழப்பீடு தொகை மாறுபடும்.

பொதுவாகப் பார்த்தால் ஒரு விமானத்திற்கான இன்சூரன்ஸ் தொகையை எத்தனை நபர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதைப் பார்த்து சமமாகப் பிரித்து வழங்குவதுதான் நியாயம் எனத் தோன்றலாம், ஆனால் நடைமுறை அப்படி அல்ல. ஒரே விமானத்தில் விபத்தில் சிக்கிய இருவருக்கு வேறு வேறு தொகை நஷ்ட ஈடாக வழங்கப்படலாம். ஆனால் நஷ்ட ஈடாக வழங்கப்படும் தொகை ரகசியம் காக்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை வகுத்துள்ளனர்.


Click it and Unblock the Notifications