"மஞ்சள் வீரன்" செய்த இந்த காரியம் தான் பைக் விபத்தில் அவரது உயிரை காப்பாற்றியது! நீங்களும் இதை ஃபாலோ பண்ணுங்க

பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் நேற்று காஞ்சிபுரம் அருகே சாலையில் செல்லும் போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் விபத்தில் சிக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் போது நெஞ்சை பதற வைக்கும் வகையில் விபத்து நடந்துள்ளது. இவ்வளவு கோரமான விபத்தில் டிடிஎஃப் வாசல் எப்படி உயிர் பிழைத்தார் தற்போது அவரது உடல் நிலை என்ன என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமான யூடியூப்ராக இருப்பவர் டிடிஎஃப் வாசன். இவர் சூப்பர் பைக்குகளில் இந்தியா முழுவதும் டூர் சென்று வந்து அதற்கான வீடியோவை எடுத்து அந்த வீடியோவை யூடியூபில் போடுவதன் மூலம் பிரபலமானார். இவர் மீது பல்வேறு சர்ச்சைகளில் எழுந்து வந்தது. இவர் அதிக வேகமாக வாகனத்தை ஓட்டுகிறார் இளைஞர்களுக்கு மோசமான முன் உதாரணமாக இருக்கிறார் என்று எல்லாம் இவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

ttf vasan accident update

மேலும் பல சந்தர்ப்பங்களில் இவர் சாலை விதிமுறைகளை மீறியுள்ளார். இதற்காக போலீசார் இவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கோர்ட்டில் இவர் வழக்கை எல்லாம் சந்தித்து வந்துள்ளார். இந்த சம்பவத்தால் இவர் தமிழக முழுவதும் பிரபலமானார். பலமுறை செய்திகளிலும் இவர் பெயர் அடிபட்டுள்ளது. இந்நிலையில் இவர் எதிர்பாராத விதமாக நேற்று விபத்தில் சிக்கினார்.

இவரும் இவரது நண்பர் அஜிஸூம் தனித்தனியாக தங்களது பைக்குகளில் சென்னையிலிருந்து புறப்பட்டு மகாராஷ்டிரா வரை பைக் ரெய்டு செல்ல திட்டமிட்டனர். அதன்படி இவர்கள் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தனர். சரியாக காஞ்சிபுரம் மாவட்டம் பாலுசெட்டி சத்திரம் என்ற பகுதியில் இவர்கள் பயணித்துக் கொண்டிருக்கும் போது சாலையில் சென்ற டிடிஎஃப் வாசல் சாகசம் செய்ய முயற்சி செய்தார்.

ttf vasan accident update

அதன்படி அவர் தனது சுசுகி ஹயபுஸா பைக்கில் இவர் வீலிங் செய்துள்ளார். அப்பொழுது நிலை தடுமாறி எதிர்பாராத நேரத்தில் தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் இவர் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இவர் பைக் சுக்கு நூறாக நொறுங்கியது. இவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு அப்பகுதியில் இருந்தவர்கள் இவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த விபத்து நடந்த இடத்தில் பதிவு செய்யப்பட்ட சிசிடிவி காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த காட்சியை பார்க்கும் போது இது மிகவும் மோசமான விபத்தாக இருப்பது தெரியவந்தது. இந்த காட்சியை பார்த்தவர்களின் நெஞ்சமெல்லாம் பதைபதைத்தது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசன் சிக்கி இருந்தால் அவர் உயிருக்கு மிகப்பெரிய ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும் என பலர் கருதினர்.

ttf vasan accident update

இந்நிலையில் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ ஒன்று வெளியானது. அந்த சிகிச்சையின்படி அவர் கையில் பலத்த கட்டு போடப்பட்டிருந்தது. மேலும் அவர் பல்வேறு உடல் பிரச்சினைகளில் சிக்கி இருந்தார். ஆனால் பெரிய அளவில் உயிர்க்கு ஆபத்தான அடிகள் எதுவும் படவில்லை. சிகிச்சை பெற்று அவர் பத்திரமாக தற்போது வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வளவு மோசமான விபத்து நடந்தும் அதிலிருந்து டிடிஎஃப் வாசன் உயிருக்கு ஆபத்து இல்லாமல் தப்பியது எப்படி என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் அவர் பயன்படுத்திய பாதுகாப்பு கருவிகள் தான். டிடிஎஃப் வாசன் அதிக பைக் ரைடு செய்பவராக இருப்பதால் அவர் பைக் ரைடு செய்யும்போது பல முக்கியமான பாதுகாப்பு கவசங்களை எல்லாம் அணிந்துதான் பைக் ரைடு செய்கிறார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இவர் பைக் ரைடு குறித்து தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்த போது இவர் ரூ31,000 மதிப்புள்ள ஹெல்மெட்டை பயன்படுத்துவதாக தெரிவித்தார். பாதுகாப்பு வசதிகள் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் நிறைந்த ஹெல்மெட்டை இவர் பயன்படுத்துவதாக தெரிவித்தார். மேலும் ஒரு முறையான சூப்பர் பைக்கை ஓட்டும்போது நாம் அணிந்து கொள்ள வேண்டிய பாதுகாப்பு கவசங்களை எல்லாம் இவர் அணிந்துதான் பைக் ரைடு செய்கிறார்.

இந்த பாதுகாப்பு கவசங்கள் தான் இவரது உயிரை இன்று காப்பாற்றியுள்ளது. நேற்று நடந்த மோசமான விபத்தில் இவர் இந்த கவசங்கள் இல்லாமல் இருந்திருந்தால் இவரது உயிரே போயிருக்க வாய்ப்புள்ளது. ஆனால் இவர் போதுமான கவசங்களுடன் இருந்ததால் தான் இவருக்கு உயிருக்கு ஆபத்து இல்லாமல் காயங்களுடன் தப்பியுள்ளார்.

தற்போது இவர் குறித்த பரபரப்பான செய்திகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவர் சமீபத்தில் மஞ்சள் வீரன் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில் சமூக வலைதள நெட்டிசன்கள் பலர் இவரது திரைப்படத்தின் நிலை என்ன என கவலை தெரிவித்து பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர்.

அவருக்கு அடிபட்டிருக்கும் காயங்களைப் பார்த்தால் இன்னும் ஒரு சில நாட்களில் இவர் உடல் நிலை சரியாகி மீண்டும் தனது பைக் ரைடு மற்றும் சினிமா பட பணிகளை செய்ய துவங்கி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விபத்து குறித்த வழக்கையும் அவர் எதிர்கொள்ள வேண்டும்.

டிரைப்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் பைக் ரைடு செய்வது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்திய சாலைகள் அதிக போக்குவரத்து நெருக்கடி நிறைந்தது. இங்கு சாதாரணமாக பைக் ஓட்டுவதை சவாலான விஷயமாக இருக்கும். இந்நிலையில் டிடிஎஃப் வாசன் சாகசம் செய்ய முயற்சித்து தற்போது விபத்தில் சிக்கியுள்ளார். இதனால் நீங்கள் பைக் ரைடு செய்யும் போது சாகசத்தை தவிர்க்க வேண்டும். பைக் ரைடு செய்யும்போது போதுமான கவசங்களை அணிந்து கொள்ள வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Monday, September 18, 2023, 13:28 [IST]
English summary
How did ttf vasan survive a brutal accident what gear did he use
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X