இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

ஏர் ஃபில்டரை மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டது என்பதை உணர்த்தும் அறிகுறிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

காரின் இன்ஜின் சரியாக இயங்க வேண்டுமென்றால், காற்று மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியம். ஏர் ஃபில்டரின் வழியாக இன்ஜினுக்கு உள்ளே காற்று செல்லும். அப்போது குப்பைகள், அழுக்கு மற்றும் இதர அசுத்தங்கள் இன்ஜினுக்குள் நுழைவதை ஏர் ஃபில்டர்கள் தடுத்து விடும். அழுக்குகளை தடுப்பதால், காலப்போக்கில் ஏர் ஃபில்டர்கள் அசுத்தமாகலாம்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

அப்படி ஏர் ஃபில்டர்கள் அசுத்தமானால், உங்கள் கார் இன்ஜின் செயல்படுவதில் எதிர்மறையான தாக்கங்கள் ஏற்பட கூடும். அதாவது இன்ஜினின் செயல்திறன் குறையும். அதிக எரிபொருளை நுகரும். இதன் காரணமாக உங்கள் காரின் மைலேஜ் குறையும். ஏர் ஃபில்டர்கள் செயலிழந்தால், உங்கள் காரின் இன்ஜின் செயலிழப்பதற்கான வாய்ப்புகளும் கூட இருக்கின்றன.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

இன்ஜின் செயலிழந்து விட்டால், உங்கள் காருக்கு நீங்கள் அதிக தொகையை செலவு செய்ய நேரிடும். எனவே குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஏர் ஃபில்டரை மாற்றுவது அவசியம். ஆனால் ஏர் ஃபில்டர்களை எப்போது மாற்ற வேண்டும்? என்பது பலருக்கும் தெரிவதில்லை. ஒரு சில அறிகுறிகள் மூலம் நாம் இதனை தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகள் என்னென்ன? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

அழுக்கான அல்லது நிறம் மாறிய ஏர் ஃபில்டர்!

ஏர் ஃபில்டரை மாற்ற வேண்டுமா? என்பதை தெரிந்து கொள்வதற்கு எளிமையான வழி ஒன்று உள்ளது. ஏர் ஃபில்டரை பார்ப்பதுதான் அந்த எளிமையான வழி. ஆம், ஏர் ஃபில்டரை பார்ப்பதன் மூலமாகவே அதனை மாற்ற வேண்டுமா? என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். சுத்தமான மற்றும் 'ஃப்ரெஷ்' ஆன ஏர் ஃபில்டர் பெரும்பாலும் வெள்ளை நிறத்தில்தான் இருக்கும்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

ஆனால் அழுக்கு படிய படிய கருப்பான நிறத்திற்கு மாறி விடும். எனவே உங்கள் காரின் ஏர் ஃபில்டர் அழுக்கு படிந்து கருப்பாக இருந்தால், அதனை மாற்ற வேண்டிய நேரமாக இருக்க கூடும். ஒருவேளை உங்களுக்கு சரியாக பார்க்க தெரியவில்லை என்றால், நம்பிக்கையான மெக்கானிக்கை அணுகலாம். அவர் சரியாக பார்த்து சொல்லி விடுவார்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

மோசமான மைலேஜ்!

நாங்கள் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டதை போன்று, காரின் மைலேஜிற்கும், ஏர் ஃபில்டருக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது. அதாவது அசுத்தனமான ஏர் ஃபில்டர், காரின் இன்ஜினிற்குள் காற்று செல்வதை தடுத்து விடும். இன்ஜின் இயங்குவதற்கு போதுமான காற்று இல்லாவிட்டால், எரிபொருள் கூடுதலாக எரிக்கப்படும். இதன் காரணமாக உங்கள் காரின் மைலேஜ் குறையும்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

எனவே வழக்கத்தை காட்டிலும், அதிக எரிபொருளை நீங்கள் நிரப்ப வேண்டியிருக்கும். தற்போது எரிபொருள் விற்பனையாகி கொண்டிருக்கும் விலையை பார்க்கும்போது, இது உங்களுக்கு அதிக செலவு வைக்கலாம். எனவே காரின் மைலேஜ் திடீரென குறைந்தாலும், ஏர் ஃபில்டர்களில் பிரச்னை உள்ளதா? என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

மோசமான செயல்திறன்!

நீங்கள் காரை தொடர்ச்சியாக ஓட்டி கொண்டிருந்தால், அதன் செயல்திறன் எப்படி இருக்கும்? என்பது நன்றாக உங்களுக்கு தெரியும். ஒருவேளை திடீரென செயல்திறனில் மாற்றம் காணப்பட்டால், அதற்கு ஏர் ஃபில்டர் பிரச்னைகள் காரணமாக இருக்கலாம். அதாவது மலைகளில் ஏறும்போது உங்கள் கார் திணறுகிறது என்றாலோ அல்லது வேகமாக செல்ல தடுமாறுகிறது என்றாலோ, நீங்கள் கவனிக்க வேண்டும்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

செக் இன்ஜின் லைட்!

ஒரு சில சமயங்களில் உங்கள் காரின் டேஷ்போர்டில், செக் இன்ஜின் லைட் எரியலாம். இந்த லைட் எரிகிறது என்றால், அதற்கு பல்வேறு அர்த்தங்கள் இருக்கலாம். அதில் ஏர் ஃபில்டர் பிரச்னையும் ஒன்றாக இருக்கலாம். அதாவது உங்கள் காரின் ஏர் ஃபில்டர் அடைக்கப்பட்டு, இன்ஜினிற்குள் போதுமான அளவு காற்று செல்லாவிட்டால், இந்த லைட் ஆட்டோமேட்டிக்காக எரிய தொடங்கி விடும்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

எனவே செக் இன்ஜின் லைட் எரிகிறது என்றால், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதை அப்படியே விட்டு விடக்கூடாது. ஏர் ஃபில்டரை மாற்றுவதற்கு குறைவாகவே செலவு ஆகும். இன்ஜினில் பிரச்னை ஏற்பட்டு செலவு செய்வதுடன் ஒப்பிடும்போது, ஏர் ஃபில்டரை மாற்றுவதற்கான செலவு குறைவுதான். எனவே அலட்சியமாக இருக்காதீர்கள்.

இந்த அறிகுறிகளில் ஒன்னு தெரிந்தால் கூட ஏர் ஃபில்டரை உடனே மாத்தணும்... இல்லாவிட்டால் இன்ஜின் செலவு வெச்சுரும்!

வழக்கத்திற்கு மாறான இன்ஜின் சத்தம்!

கார்கள் பல்வேறு வகையான சத்தங்களை எழுப்ப கூடியவை. அவை ஒவ்வொன்றுக்கும் நீங்கள் கவலைப்பட்டு கொண்டிருக்க வேண்டியதில்லை. எனினும் கார் ஐட்லிங்கில் இருக்கும்போது, திடீரென வித்தியாசமான சத்தம் வந்தால், நீங்கள் கவனிக்க வேண்டும். ஒருவேளை அது ஏர் ஃபில்டரை மாற்ற வேண்டும் என்பதை வெளிக்காட்டும் சத்தமாக இருக்கலாம்.

Article Published On: Thursday, March 17, 2022, 23:41 [IST]
English summary
How do i know it s time to change my car s engine air filter
மேலும்... #ஆஃப் பீட் #off beat
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+