இந்த சந்தேகம் எல்லாருக்கும் இருக்கு, விமானிகளுக்கு மட்டும் எப்படி பறக்குறப்ப கிழக்கு மேற்கு கரெக்டா தெரியுது?
நாம் சாலையில் செல்லும்போது மேப்பை பயன்படுத்துவது போல் விமானிகள் ஆகாயத்தில் பறக்கும் போது தாங்கள் செல்லும் வழியை கண்டுபிடிக்க என்ன விதமான வழிகாட்டியை பயன்படுத்துவார்கள் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. இதற்கான விளக்கத்தை அளிக்க தான் இந்த செய்தியை உங்களுக்காக வழங்குகிறோம்.
நாம் சாலையில் தெரியாத ஊர்களுக்கு செல்லும்போது நாம் செல்ல வேண்டிய வழியை பார்ப்பதற்காக நாம் செல்போனில் உள்ள மேப் வசதியை பயன்படுத்துகிறோம். இன்றைய தொழில்நுட்ப காலகட்டத்தில் ஊர் தெரியாத இடத்தில் கூட யாரிடமும் உதவியையும் கேட்காமல் நாமே மேப் மூலம் இடத்தை கண்டுபிடித்து அந்த இடத்திற்கு சென்று விட முடியும்.

இன்று தொழில்நுட்பம் பூமியில் அந்த அளவிற்கு மிக துல்லியமாக தகவல்களை அளிக்கும் வகையில் வளர்ந்து விட்டது. ஆனால் இது எல்லாம் பூமியில் தான் ஆகாயத்தில் பறக்கும் விமானிகள் தாங்கள் எந்த திசையில் பறக்க வேண்டும் தாங்கள் செல்ல வேண்டிய ஊருக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை எப்படி அறிவார்கள்? இதைப் பற்றி தான் விரிவாக காணப்போகிறோம்.
பொதுவாக விமானம் ஓட்டும் விமானங்களை பைலட் என்றுதான் அனைவரும் அழைப்பார்கள். ஆனால் கார் ஓட்டும் ஓட்டுநர்களை டிரைவர் என்று அழைப்பார்கள். இந்த இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் கார் ஓட்டுபவர் வேறு எந்த ஒரு நபரின் துணை இல்லாமல் தனியாக காரை ஓட்டி விட முடியும். ஆனால் பைலட் என்பவர் மற்றவர்களின் துணையுடன் தான் அந்த விமானத்தை ஓட்ட முடியும்.

இதனால் விமானிகள் விமானம் ஒரு இடத்தில் இருந்து அடுத்த இடத்திற்கு கிளம்பும் முன்பே சில நிமிடங்களுக்கு முன்பு தாங்கள் செல்ல வேண்டிய பாதையை தேர்வு செய்வார்கள். அவர்கள் இருப்பதிலேயே குறைவான எரிபொருள் செலவாகும் பாதையை தான் தேர்வு செய்வார்கள். இந்தப் பாதையில் பயணிக்க ஏர் டிராபிக் கண்ட்ரோலிடம் அனுமதி கேட்பார்கள்.
ஏர் டிராபிக் கண்ட்ரோல் அதிகாரிகள் இந்த அனுமதி கோரிக்கைய பெற்ற பின்பு அதை ரிவ்யூ செய்வார்கள். அந்த பாதை வழியாக குறிப்பிட்ட விமானம் பறக்கும் போது வேறு விமானம் கிராஸ் ஆகிறதா? அல்லது அப்பகுதியில் பருவநிலை மாற்றம் காரணமாக ஏதாவது பிரச்சனை இருக்கிறதா? என்பது போன்ற ஆய்வுகளை செய்வார்கள்.

எல்லா ஆய்வுகளும் சரியாக இருந்தால் அந்த விமானிக்கு குறிப்பிட்ட பாதையில் செல்ல அனுமதி வழங்கப்படும். இல்லையென்றால் அந்த விமானிக்கு மாற்றுப்பாதை வழங்கப்பட்டு அதில் அனுமதி வழங்கப்படும். பருவநிலை மிக மோசமாக இருந்தால் பறக்க அனுமதியும் மறுக்கப்படும். ஏடிசியின் அனுமதியிருந்தால் மட்டுமே விமானம் பறக்க முடியும்.
ஏர் டிராபிக் கண்ட்ரோல் தான் விமானத்தின் ஓடுபாதை முதல் விமானம் பறந்து மற்ற ஊருக்கு செல்லும் வரை அத்தனையையும் ஹேண்டில் செய்வார்கள். விமானம் பறக்கும்போது விமானிகள் எந்த திசையில் எவ்வளவு வேகத்தில் எவ்வளவு உயரத்தில் பறக்க வேண்டும் என்ற உத்தரவும் ஏர் டிராபிக் கண்ட்ரோலில் இருந்து தான் வரும்.
விமானிகள் அந்த உத்தரவை பெற்றுக்கொண்டு அதன்படி பின்பற்ற வேண்டியது மட்டும் தான் வேலை. விமானிகள் பறக்கும் போது ஏதாவது சூழ்நிலை மாற்றங்கள் ஏற்பட்டால் அது குறித்து ஏர் டிராபிக் கண்ட்ரோல் ரூமுக்கு தகவல் தெரிவித்து அவர்களை உத்தரவை பெற்ற பின்பு அடுத்த மாற்றங்களை செய்யலாம். அவர் தானியங்கியாக பெரிய மாற்றங்களை செய்ய அனுமதி கிடையாது.
விமானம் செல்லும் திசையை கண்டுபிடிக்க விமானங்களில் ஏடிஎஃப் என்ற கருவி இருக்கும். அது ஆட்டோ பிளைட் டைரக்சன் என அழைக்கப்படுகிறது. இந்த கருவி தான் விமானம் எந்த திசையில் பறந்து கொண்டிருக்கிறது என்பதை விமானிகளுக்கு காட்டும். அதை வைத்து தான் விமானிகள் தங்கள் திசைகளை மாற்றிக் கொள்வார்கள்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இன்று பூமியில் ஒரு இடத்திலிருந்து ஒரு இடம் செல்லும் வசதிக்காக மேப் வந்துவிட்டாலும் விமானத்தில் இப்படியான மேப் மிகப்பெரிய அளவில் இல்லை. ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் தான் விமானமே இயங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. அதை தானியங்கியாக இயக்க வைக்க போதுமான வசதிகள் இல்லை. இந்த தொழில்நுட்பம் இன்னும் மேம்படுத்தப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications
