விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

விமானங்களில் வைஃபை வசதியை அளிக்க மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

By Aaroor Rajan

விமானங்களில் வைஃபை வசதியை அளிக்க மத்திய தொலைத்தொடர்பு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதையடுத்து, இந்தியாவில் இயக்கப்படும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களில் வைஃபை இன்டர்நெட் வசதியை இனி பயணிகள் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

இதனால், பயணத்தின்போது இணையம் சார்ந்த பொழுதுபோக்கு வசதிகளை பெறுவதற்கும், சமூக வலைத்தளங்களில் தொடர்பில் இருக்கவும் வாய்ப்பு ஏற்பட இருக்கிறது. அலுவலகம் சார்ந்த பணிகளை இணைய வசதியின் மூலமாக செய்வதற்கான வாய்ப்பையும் விமானப் பயணிகள் பெற இருக்கின்றனர்.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

எனினும், விமானங்களில் வைஃபை வசதியை பெறுவதற்கான கட்டணம் மிக அதிகமாக இருக்கும். ஓட்டல்கள், ரயில் நிலையங்களில் அளிப்பது போன்று மலிவான அல்லது இலவச சேவையாக இருக்காது. இதற்கு காரணம், ஓட்டல் மற்றும் ரயில் நிலையங்களில் வழங்கப்படும் வைஃபை வசதிக்கும், விமானங்களில் வழங்கப்படும் வைஃபை வசதிக்கும் தொழில்நுட்ப அளவில் அதிக வித்தியாசம் உண்டு.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

வர்த்தக பயணிகள் விமானங்கள் சராசரியாக 35,000 அடி உயரத்தில் பறக்கின்றன. அப்போது வைஃபை வசதிக்கான சிக்னலை தரையில் உள்ள செல்போன் கோபுரங்களிலிருந்து பெற முடியாது. செல்போன் கோபுரங்களிலிருந்து பெறப்படும் சிக்னல் மிகவும் பலவீனமாக இருப்பதால் தொடர்ச்சியான இணைய வேகத்தை பெறுவது கடினம்.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

எனவே, விமானங்களில் வழங்கப்படும் வைஃபை வசதி ஜியோஸ்டேஷனரி செயற்கைகோள்கள் மூலமாக பெறப்படும். இந்த செயற்கைகோள்கள் பொதுவாக சேட்டிலைட் டிவி மற்றும் வானிலை மாற்றம் குறித்து ஆய்வு செய்வதற்கு பயன்படும். அதேபோன்று, வைஃபை தொடர்பை பெறுவதற்கான வாய்ப்பையும் இந்த செயற்கைகோள்கள் வழங்கும்.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

விமானங்களில் வழங்கப்படும் வைஃபை தொழில்நுட்பம் இரண்டு வகைகளில் பெறப்படும். முதலாவது ஏர் டு கிரவுண்ட் [ATG]என்ற தொழில்நுட்பத்தில் செயற்கைகோள்களிலிருந்து இன்டர்நெட் தொடர்புக்கான சிக்னல் தரையிலிருக்கும் ரீசிவர்களுக்கு அனுப்பப்படும். அந்த ரிசீவர்களிலிருந்து விமானத்தில் உள்ள ஆன்டென்னா மூலமாக பயணிகளுக்கு இணைய தொடர்பு வசதி அளிக்கப்படும்.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

இந்த ஏர் டு கிரவுண்ட் தொழில்நுட்பம் மூலமாக வழங்கப்படும் இணைய வசதியானது உள்நாட்டு விமானங்களுக்கு ஏதுவானதாக இருக்கும். நிலப்பரப்புகளின் மீது பறக்கும்போது மட்டும் இது ஏதுவானதாக இருக்கும். இது நீண்ட தூர விமானங்களுக்கு பயன்படாது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

இரண்டாவது விமான வைஃபை தொழில்நுட்பமானது, செயற்கைகோள்களிலிருந்து விமானத்தில் இருக்கும் ஆன்டென்னா மூலமாக நேரடியாக இணைய தொடர்பு வசதியை பெறுவதாக இருக்கிறது. இந்த வசதி மூலமாக விமானம் உலகின் எந்த மூலையில் பயணித்தாலும் இணைய வசதியை பெற முடியும். நிலம் மட்டுமின்றி, கடல் பரப்புக்கு மேல் பறக்கும்போதும் இணைய வசதி கிடைக்கும்.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

2008ம் ஆண்டு உலகிலேயே முதல்முறையாக அமெரிக்காவில்தான் விமானங்களில் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டது. கோகோ என்ற நிறுவனம் விர்ஜின் அட்லாண்டிக் விமானங்களில் வைஃபை வசதி சேவையை அறிமுகம் செய்தது. சேட்டிலைட் இன்டர்நெட் மூலமாக 3 எம்பிபிஎஸ் வேகத்தில் இணைய வசதி அளிக்கப்பட்டது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

இது செயற்கைகோளிலிருந்து நேரடியாக விமானங்களுக்கு வைஃபை வசதியை வழங்கும் தொழில்நுட்பமாக அறிமுகம் செய்யப்பட்டது. இது Ku மின்காந்த அலைவரிசையில் 12 முதல் 18 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண் முறையில் இன்டர்நெட் சிக்னல்கள் பெறப்பட்டு இணைய வசதி வழங்கப்பட்டது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

தற்போது Ka அலைவரிசைக்கு பல நிறுவனங்கள் மாறிவிட்டன. இதன்மூலமாக, 26 முதல் 40 ஜிகாஹெர்ட்ஸ் அதிர்வெண்ணில் இன்டர்நெட் சிக்னல்கள் பெறப்படுகின்றன. இதன்மூலமாக, 9 எம்பிபிஎஸ் வேகம் வரை இணைய வசதியை பெற முடியும். இதனால், இணைய வசதியின் தரமும், வேகமும் சிறப்பாக மாறி இருக்கிறது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

விமானங்களில் வைஃபை வசதியை அளிப்பதற்கு, பிரத்யேக சர்வரை விமான நிறுவனங்கள் நிறுவ வேண்டும். தவிர்த்து, ரவுட்டர், ஆன்டென்ட்டா மற்றும் செயற்கைகோளிலிருந்து சிக்னல் பெறுவற்கான ஒப்பந்த நடைமுறைகளும் உள்ளன.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

உலகின் எந்த மூலையிலும் இன்டர்நெட் வசதியை பெற்றாலும், ஒரு செயற்கைகோளிலிருந்து மற்றொரு செயற்கைகோளிலிருந்து சிக்னலை பெறுவதற்கு மாறும்போது ஒரு சில நிமிடங்கள் இன்டர்நெட் தொடர்பு தடைபடும். இதற்கு ஹேண்ட்- ஆஃப் பீரியட் என்று குறிப்பிடுகின்றனர்.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

இத்தனை நடைமுறைகளும் முடிந்து வைஃபை வசதி விமானத்தில் கிடைத்தாலும் அதற்கான கட்டணம் பயணிகளை கவருமா என்பது பல நிறுவனங்களுக்கு சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. ஏனெனில், தற்போது அமெரிக்காவில் எதிஹாட் ஏர்லைன்ஸ் நிறுவனம் 30 எம்பி தரவுக்கு 4.95 டாலர் வைஃபை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் அன்லிமிடேட் டேட்டா திட்டத்தின் கீழ் மணிக்கு 14 டாலர் கட்டணமாக வசூலிக்கிறது. ஒரு மணிநேரத்தில் அதிகபட்சமாகவே ஒன்று அல்லது இரண்டு ஜிபி டேட்டா மட்டுமே பயன்படுத்தும் வாய்ப்பு இருக்கிறது. வேகமும் தரையிலிருப்பது போல அதிவேகமாக இருக்காது.

விமானங்களில் வைஃபை வசதிக்கு அனுமதி... எப்படி வேலை செய்கிறது என தெரியுமா?

இந்த நிலையில், இந்தியாவில் இன்டர்நெட் துறையில் பல புரட்சிகள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், விமானங்களில் வைஃபை வசதியும் பயணிகளுக்கு தோதுவான கட்டணத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். அப்படி வழங்கப்பட்டால், நிச்சயம் பெரும் வரவேற்பை பெறும் என்பதில் ஐயமில்லை.

Image Source: Gogo

Most Read Articles
மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
How Does In Flight Wi-Fi Works?
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X