மக்கள் செண்டிமெண்ட்டை நல்லா யூஸ் பண்ணிக்குறாங்க! விநாயகர் சதுர்த்திக்கு இப்போதே கார் ஷோரூம்கள் தயார்!
விநாயகர் சதுர்த்தி (Ganesh Chaturthi), இந்தியா முழுவதும் கொண்டாடும் பண்டிகைகளுள் (Festivals) ஒன்று. பொதுவாகவே, நம் மக்களுக்கு ஒரு வழக்கம் உள்ளது. அதாவது, பல லட்ச ரூபாய் செலவழித்து வாங்கும் வாகனங்களை நல்ல நாளான பண்டிகை நாட்களில் வாங்குவது ஆகும். இதற்கேற்ப ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களும் சலுகைகளையும், தள்ளுபடிகளையும் வாரி வழங்குவதால், விநாயகர் சதுர்த்தி, தீபாவளி (Diwali) உள்ளிட்ட பண்டிகை சமயங்களில் வாகனங்களின் விற்பனை புதிய உச்சத்தை தொடுகிறது. இதனை கொஞ்சம் உன்னிப்பாக கவனித்து பார்த்தால், குறிப்பாக விநாயகர் சதுர்த்தியின் போது வாகன விற்பனை ஆனது அதிகரிப்பதற்கு காரணங்கள் என்னென்ன என்பது நமக்கு புரிந்துவிடும்.
நல்ல ராசியான நாள்: ஏற்கனவே கூறியதுபோல், விநாயகர் சதுர்த்தி ஆனது இந்துக்களின் புனிதமான நாளாக கருதப்படுகிறது. பொதுவாகவே, நம்மில் பலர் எதாவது புதியதாக முயற்சி எடுப்பதாக இருந்தாலே முதலில் விநாயகரை கும்பிட்டு விட்டுதான் மேற்கொள்வோம். அதே பாணி தான், புதியதாக வாகனம் வாங்கும்போதும் தொடர்கிறது.

முடிந்தவரையில், விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன்பே வாகனத்தை புக் (Book) செய்துவிட்டு, சரியாக விநாயகர் சதுர்த்தியின் போது டெலிவிரி (Delivery) பெறவே பலர் முயற்சிக்கின்றனர். இது நடக்காமல் போகும் பட்சத்தில், விநாயகர் சதுர்த்தியின் போது புதிய வாகனத்தை புக் செய்வது மற்றும் டெஸ்ட் டிரைவ் (Test Drive) செய்து பார்ப்பது போன்றவற்றை மேற்கொள்கின்றனர்.
தேவை அதிகரிப்பு: விநாயகர் சதுர்த்தியின் போது வாகனங்களின் விற்பனை அதிகரிப்பதற்கு மற்றொரு காரணம், மக்களின் தேவைக்கு ஏற்ப ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தனது உற்பத்தியை உயர்த்துவதாகும். விநாயகர் சதுர்த்தி, தசரா, தீபாவளி உள்ளிட்ட இந்தியாவின் முக்கியமான பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், இதற்கு சில மாதங்களுக்கு முன்பே கூடுதல் முதலீடுகளை செய்து ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம்பிக்கையுடன் உற்பத்தியை அதிகப்படுத்தி விடுகின்றன.

டீலர்ஷிப் ஷோரூம்களின் செயல்பாடுகள்: ஆட்டோமொபைல் நிறுவனங்களை போன்று, அவற்றுடன் கூட்டணி சேர்ந்து செயல்படும் டீலர்ஷிப் ஷோரூம்களும் (Dealership Showrooms) விநாயகர் சதுர்த்திக்கு சில நாட்களுக்கு முன்பு இருந்தே தயாராகி விடுகின்றன. விநாயகர் சதுர்த்தி நீண்ட நாட்களுக்கு கொண்டாடும் பண்டிகை என்பதால், அந்த நாட்கள் முழுவதும் ஷோரூம்களை அலங்கரித்து, புதியதாக வாகனம் வாங்கலாமா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருக்கும் மக்களையும் கூட கவர முயற்சிக்கின்றன.
பழைய ஸ்டாக்குகளை விற்பனை செய்தல்: விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகை சமயங்களில் சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் அறிவிக்கப்படுவதை பார்த்து இருப்பீர்கள். இவ்வாறு சலுகைகள் அறிவிக்கப்படுவது பெரும்பாலும் பழைய ஸ்டாக் வாகனங்களுக்கு ஆகும். பழைய ஸ்டாக் வாகனங்கள் என்றதும் மிகவும் பழைய ஸ்டாக் என நினைத்துவிட வேண்டாம். கடந்த வருடத்தில் உற்பத்தி செய்யப்பட்ட வாகனங்களை கூட பழைய ஸ்டாக் என்றே குறிப்பிடுகின்றனர்.

லக்சரி வாகனங்களின் பங்களிப்பு: விநாயகர் சதுர்த்தியின்போது புதியதாக வாகனம் வாங்குபவர்கள் பெரும்பாலும் பணக்காரர்களாகவே இருப்பதை பார்க்க முடியும். ஏனெனில், மிடில்-கிளாஸ் மக்கள் பெரும்பாலும் கடனுதவியின் மூலமே புதியதாக கார் அல்லது பைக்கை வாங்குகின்றனர் என்பதால், திட்டமிட்டப்படி விநாயகர் சதுர்த்தியின் போது வாகனத்தை டெலிவிரி பெற்றுவிட முடியுமா என்கிற சந்தேகம் அவர்களுக்கு எழுகிறது. ஆனால், பணக்காரர்கள் முழு தொகையையும் செலுத்தி சில நாட்களிலேயே அவர்கள் நினைத்தப்படி வாகனத்தை வாங்கி விட முடியும் என்பதால் விநாயகர் சதுர்த்தி போன்ற நல்ல நாட்களில் லக்சரி கார் & பைக் விற்பனை வழக்கத்தை விட அதிகரிக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நல்ல நாள் ராசி, சலுகைகள் & தள்ளுபடி, ஷோரூம்களின் கவர்ச்சிக்கரமான அலங்கரிப்புகள் மற்றும் பணக்காரர்களின் செண்டிமெண்ட் உள்ளிட்டவை எல்லாம் தான் ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியின் போது ஆட்டோமொபைல் வாகனங்களின் விற்பனையை பெரிதும் உயர்த்துகின்றன. இது, விநாயகர் சதுர்த்திக்கு மட்டுமில்லை, அதன்பின் வரும் பண்டிகை நாட்களுக்கும் பொருந்துகிறது.


Click it and Unblock the Notifications









