இப்படி ஒரு விஷயம் இருக்குறதே பாதி பேருக்கு தெரியாது! அரசு ஊழியர்கள் ஐஆர்சிடிசியில் கம்மி ரேட்ல டிக்கெட்டா?

அரசு ஊழியர்களுக்கு ஐஆர்சிடிசி இணையதளத்தில் விமான டிக்கெட்களை புக் செய்யும் போது கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் புக் செய்யும் டிக்கெட் விலையிலிருந்து குறைவான டிக்கெட் விலையில் இவர்கள் முன்பதிவு செய்ய முடியும். பலருக்கு இந்த தகவல் தெரிவதில்லை எப்படி சலுகை கட்டணத்துடன் அரசு ஊழியர்கள் விமான டிக்கெட் விலை புக்கிங் செய்ய முடியும் என்று தான் இந்த பதிவில் விரிவாக காணப்போகிறோம்.

நாம் எல்லோருக்கும் ஐஆர்சிடிசி இணையதளம் ரயில் டிக்கெட்களை புக் செய்ய இருக்கும் ஒரே இணையதளம் என்று தெரியும். ஆனால் இந்த தளத்தில் ரயில் டிக்கெட் மட்டுமல்ல மேலும் பல்வேறு சேவைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இதில் முக்கியமான சேவை தான் விமான டிக்கெட் செய்யும் சேவை இந்த சேவையையும் ஐஆர்சிடிசி மற்ற நிறுவனங்களுடன் கூட்டு வைத்து ஐஆர்சிடிசி வாடிக்கையாளர்களுக்காக வழங்கி வருகிறது.

irctc government employees special fare

இதற்காக பிரத்தியேக போற்றலாக air.irctc.co.in என்ற போர்ட்டலை இயக்கி வருகிறது. இதில் தான் விமான டிக்கெட்களை முன்பதிவு செய்ய வசதிகளை வழங்கி வருகிறது. இதில் மத்திய அரசு ஊழியர்கள் விமான டிக்கெட்களை புக் செய்தால் அவர்களுக்கு சிறப்பு கட்டண சலுகை வழங்கப்பட்டு வருகிறது.

மத்திய அரசு அவர் ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் விடுமுறை பயண சலுகைகளை வழங்கி வருகிறது. இந்த விடுமுறை பயண சலுகை கீழ் புக் செய்யப்படும் டிக்கெட்டுகள் தவிர மற்ற டிக்கெட்டுகளுக்கு மத்திய அரசு தன் ஊழியர்களுக்காகவே பிரத்தியேகமாக சலுகை கட்டணத்தை வழங்கும் வகையில் ஐஆர்சிடிசி மூலம் இந்த சலுகை டிக்கெட் விலை விற்பனை செய்து வருகிறது.

irctc government employees special fare

மத்திய அரசு ஊழியர்கள் விடுமுறை கால பயண சலுகையை பெற ஐஆர்சிடிசி இணையதளம், பால்மர் லாரி அண்ட் கம்பெனி லிமிடெட், அசோக் டிராவல்ஸ் மற்றும் டூர்ஸ் ஆகிய நிறுவனங்களின் மூலம் விமான டிக்கெட்களை புக் செய்தால் அந்த டிக்கெட்டுக்கான சலுகைகளை அவர்கள் விடுமுறை பயண சலுகை திட்டத்தின் கீழ் முன்பதிவு செய்து அதற்கான சலுகைகளை அரசிடம் இருந்து நேரடியாக பெற்றுக்கொள்ள முடியும் இது எல்லாம் நமக்கு தெரிந்த விஷயம் தான்.

இந்த அரசின் விடுமுறை பயண சலுகை திட்டத்தின் கீழ் ஒருவர் விமான டிக்கெட் விலை முன்பதிவு செய்ய குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதன்படி பணியாளர்கள் அவர்களுக்கு பொருந்தும் பயண வகுப்பில் மட்டுமே டிக்கெட்களை முன் பதிவு செய்ய முடியும். அப்படி பதிவு செய்தால் மட்டுமே அதற்கான சலுகையோடு விமான டிக்கெட் விலை நிர்ணயம் செய்யப்படும்.

இப்படியாக சலுகையின் கீழ் ஒருவர் விமான டிக்கெட்களை புக் செய்யும் போது அது இடைநில்லா விமான சேவையாக இருக்க வேண்டும் என்ற விதிமுறையும் இருக்கிறது. அதனால் இடைநில்லா விமானம் மட்டுமே ஒரே வாய்ப்பாக வைத்து பயண தேதிக்கு 21 நாட்களுக்கு முன்னர் விமான டிக்கெட்டுகளை புக் செய்ய வேண்டும் என மத்திய அரசு அதன் ஊழியர்களை அறிவுறுத்துகிறது.

இந்த டிக்கெட்டுகளை புக் செய்ய air.irctc.co.in என்ற இணையதளத்திற்கு சென்ற பின்பு அங்கு அரசு ஊழியர்கள் மற்றும் எல்டிசி ஆகிய பிரிவு கீழ் உள்ள ஆப்ஷனை தேர்வு செய்து பயண விபரங்களை உள்ளிட்டு குறிப்பிட்டு ஊழியருக்கு அனுமதிக்கப்பட்ட வகுப்பில் குறைந்த கட்டணத்தில் இடைநில்லா விமானத்தை தேர்வு செய்து புக் செய்ய வேண்டும். அப்படி செய்தால் குறைவான கட்டணத்தில் டிக்கெட்களை பெற முடியும்.

இப்படியாக விடுமுறை பயண சலுகையின் கீழ் ஒருவர் விமான டிக்கெட்களை புக் செய்திருந்தால் அவர் பயணம் செய்யும்போது அங்கீகரிக்கப்பட்ட அரசாங்க அடையாள சான்றிதழ்களை கையில் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எல்டிசி முறையிலான டிக்கெட் ஒதுக்கீட்டின் கீழ் குறைவான எண்ணிக்கையிலான டிக்கெட் இருப்பதால் இதற்கு முன்பதிவு செய்ய வேண்டியது அவசியம் எனவும், பதிவு செய்த பட்டால் மட்டுமே டிக்கெட் உறுதி செய்யப்படும் எனவும் நாம் நினைவில் கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மத்திய அரசின் ஊழியர்கள் பலவிக்க இப்படியாக குறைவான விலையில் டிக்கெட்டுகளை புக் செய்ய ஐஆர்சிடிசி வாய்ப்பை வழங்கும் செய்தி யாருக்கும் தெரியும் தெரியாமல் இருக்கிறது . அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவே இப்படியான பதிவை நாங்கள் பதிவு செய்துள்ளோம். இதை உங்களுக்கு தெரிந்த மத்திய அரசு ஊழியர்களுக்கும் மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 12, 2023, 11:45 [IST]
English summary
How government employees can reserve irctc air tickets in specil fare
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+