யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

விமானங்கள் அதிகப்பட்சமாக எவ்வளவு உயரத்திற்கு பறக்கும் என்பதையும், அதற்குமேல் பறந்தால் என்ன நிகழும் என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

ஓடுபாதையில் இருந்து டேக்-ஆஃப் ஆன பிறகு விமானங்கள் தங்களது நிர்ணயிக்கப்பட்ட அதிகப்பட்ச உயரத்தை எட்ட 15-இல் இருந்து 20 நிமிடங்கள் வரையில் எடுத்து கொள்கின்றன. அதுவரையில், பயணிகளை போலவே விமான பணிப்பெண்களும் இருக்கைகளில் சீட் பெல்ட்களை இறுக்க அணிந்தவாறு அமர்ந்திருப்பர்.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

அதன் பின்னரே விமான பணிப்பெண்கள் உள்பட பயணிகளும் இருக்கையில் இருந்து எழ அனுமதிக்கப்படுவர். அதன்பின் பெரும்பாலும் விமான லேண்டிங்கின் போதுதான் சீட் பெல்ட்டின் தேவை இருக்கும். இல்லையென்றால், இடையிடையே ஏற்படும் சிறுசிறு குலுக்கல்களின் போது சீட் பெல்ட் அணியுமாறு விமானி அறிவுறுத்துவார். இவை எல்லாம் அவ்வப்போது விமானத்தில் பயணிப்பவர்களுக்கு நன்கு தெரிந்திருக்கும்.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் அத்தகையவர்களுக்கும் தெரியாத விஷயம், தரையில் இருந்து விமானம் எவ்வளவு உயரத்தில் உள்ளது என்பது. ஜன்னல்கள் சிறிய வட்ட வடிவில் கொடுக்கப்பட்டிருந்தாலும், அதன் வழியாக விமானத்தின் உயரத்தை கண்டறிவது என்பது இயலாத காரியமே. பொதுவாக, பெரிய அளவிலான கமர்ஷியல் விமானங்கள் அவற்றின் எடையை பொறுத்து உயர்ந்தப்பட்ச உயரத்தை எட்டுகின்றன.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

இத்தகைய கமர்ஷியல் விமானங்கள் தரையில் இருந்து, 32 ஆயிரம் அடியில் இருந்து 40 ஆயிரம் அடி வரையிலான உயரத்திற்கு பறக்கக்கூடியவை. அதாவது 10 கிமீ-இல் இருந்து 12கிமீ வரையிலான உயரத்திற்கு கமர்ஷியல் விமானங்களின் பறக்கும் திறன் இருக்கும். அதுவே அளவில் சிறிய ஜெட் விமானங்கள் 25 ஆயிரம் அடியில் இருந்து 30 ஆயிரம் அடி வரையிலான உயரத்தில் மட்டுமே பறக்க வைக்கப்படுகின்றன.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

ஏனெனில் பெரும்பாலும் ஜெட் விமானங்கள் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன், குறுகிய தூர பயணங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. ஆகையால் இத்தகைய விமானங்களை உடனடியாக டேக்-ஆஃப் செய்யவும், லேண்டிங் செய்யவும் ஏதுவாக 25,000-30,000 அடி உயரத்திற்கு பறக்க வைத்தாலே போதுமானது.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

விமானங்களை இந்த உயர்ந்தப்பட்ச உயரத்திற்கு மேல் பறக்க வைத்தால் என்ன ஆகும்? புவியின் மேற்பரப்பில் இருந்து ஓசோன் படலமானது 40 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேல் உள்ளது. அதாவது விமானங்களை 40 ஆயிரம் அடி உயரத்திற்கும் மேல் பறக்க வைக்க முடியும். ஆனால் அவ்வாறு விமானிகள் செய்ய மாட்டார்கள். இதற்கு சூரிய ஒளியின் அதிகப்படியான வெப்பம் காரணமாக இருக்கலாம் என நினைக்கலாம்.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

ஆனால் இதனை காட்டிலும் முக்கியமான காரணங்களாக, உட்புற கேபின் அழுத்தம் மற்றும் ஆக்ஸிஜன் அளவு குறைவது என்பவை கூறப்படுகின்றன. கமர்ஷியல் விமானங்களில் ஆக்ஸிஜன் மாஸ்க் இருக்கும் என்றாலும், அவை அவசர கால தரையிறக்கத்தின்போது மட்டுமே பயன்படுத்தப்படும். அதாவது, அவற்றில் நீண்ட நேரத்திற்கு ஆக்ஸிஜன் வாயு கிடைக்காது.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

அதேபோல் நிர்ணயிக்கப்பட்ட உயரத்தை தாண்டி பறக்கும்போது, புவி ஈர்ப்பு விசை குறைவதினால் உட்புற கேபினில் அழுத்தமானது குறையும். இதன் காரணமாக பயணிகள் உள்பட விமானிகளும் தங்களது கண்ட்ரோலை இழக்க நேரிடும். அத்துடன் அவ்வளவு பெரிய உருவம் கொண்ட விமானத்திற்கும் பூமியில் இருந்து கிடைக்கும் ஈர்ப்பு விசை குறையும் என்பதால், விமானம் தலைக்கீழாக புரள்வதற்கும் அதிக வாய்ப்புள்ளது.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

இதனாலேயே விமானத்தின் எடை, வேகம், வெளிப்புறத்தில் காற்றின் வெப்பநிலை, காற்றின் வேகம் & திசை உள்ளிட்டவற்றை கண்டறிய ஏகப்பட்ட கண்காணிப்பு கணினிகள் பயன்படுத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி, விமானி தவறுதலாக நிர்ணயிக்கப்பட்ட உயரத்திற்கு மேல் விமானத்தை கொண்டு சென்றுக்கொண்டே இருந்தால், ஒரு கட்டத்திற்கு மேல் என்ஜின் இயக்க ஆற்றலை வழங்குவதை நிறுத்திவிடும் அல்லது பக்கவாட்டு இறக்கைகள் தங்களது செயல்பாடுகளை நிறுத்துவது போன்று தற்கால விமானங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

யம்மாடியோவ்... இன்னும் போன ஓசோன் படலம் வந்துடுமே!! விமானம் பறக்கும் அதிகப்பட்ச உயரம் எவ்வளவு தெரியுமா?

ஏர்லைன் நிறுவனங்கள் விமானங்களின் உயரத்தை குறிப்பிட்ட அளவில் நிர்ணயிப்பதற்கான காரணங்கள் என்னவென்று பார்த்தோமேயானால், எரிபொருளை மிச்சப்படுத்த, ஒரே மாதிரியான வேகத்தை கடைப்பிடிக்க, புயல்களில் இருந்து விலகி இருக்க என சொல்லலாம். அதேநேரம் பெரிய அளவிலான கமர்ஷியல் வாகனங்கள் மிகவும் தாழ்வாக பறந்தாலும் சிறிய-அளவிலான விமானங்களின் போக்குவரத்து பாதிப்பிற்கு உள்ளாகுவது, பறவைகளின் வாழ்வாதாரம் கெடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் உண்டாகும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 26, 2022, 17:50 [IST]
English summary
How high do airplanes fly and what happens if flies too high
மேலும்... #ஆஃப் பீட்
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+