15 வயதில் பள்ளியிலிருந்து துரத்தப்பட்டவர் இன்று உலகின் நம்பர்-1 கிளாசிக் ஃபெராரி கார் டீலர்!

Written By:

கடின உழைப்பும், புத்திசாலித்தனமும் இருந்தால் படிப்பு ஒரு பொருட்டல்ல என்பதை நிரூபிப்பதற்கு பலர் உதாரணமாக விளங்குகின்றனர். அதில், ஒருவர்தான் ஜான் காலின்ஸ்.  15 வயதில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர் இன்று கிளாசிக் ஃபெராரி கார்களை விற்பனை செய்வதில் உலகின் நம்பர்-1 டீலருக்கு உரிமையாளராக மாறியிருக்கிறார்.

இன்று பல பில்லியன் பவுண்ட் மதிப்பில் ஃபெராரி கார்களை விற்பனை செய்யும் அளவுக்கு உயர்ந்திருக்கும் இந்த ஜாம்பவான் குறித்த சில சுவாரஸ்யத் தகவல்களையும், இதை படித்தபின் உங்களுக்கும் மனதில் தன்னம்பிக்கை ஏற்பட்டால், அதுவே இந்த செய்தியின் வெற்றியாகவும் அமையும்.

இங்கிலாந்துக்காரர்..

இங்கிலாந்துக்காரர்..

இங்கிலாந்து நாட்டின் கிளாஸ்கோ பகுதியை சேர்ந்தவர் ஜான் காலின்ஸ். அரிய கிளாசிக் ஃபெராரி கார்களை விற்பனை செய்வதில் இவர்தான் இன்று உலகின் நம்பர்- 1 ஃபெராரி டீலராக கருதப்படுகிறார்.

 துரத்தப்பட்ட ஜான்

துரத்தப்பட்ட ஜான்

தனது 15வது வயதில் பள்ளி ஆசிரியர்களால் உதவாக்கறை என்று விரட்டியடிக்கப்பட்டார் ஜான் காலின்ஸ். மேலும், குப்பை வண்டிக்குத்தான் லாயக்கு என்றும், ஒரு வீடு கூட உனக்கு இருக்காது என்று ஆசிரியர்கள் சபித்து பள்ளியிலிருந்து ஜானை வெளியேற்றினர்.

ஆபிஸ் பாய்

ஆபிஸ் பாய்

பள்ளியிலிருந்து வெளியேறிய ஜான், அங்குள்ள பத்திரிக்கை ஆபிஸ் ஒன்றில் டீ வாங்கி வரும் வேலைக்கு சேர்ந்தார். அவரது சுறுசுறுப்பை பார்த்து, அவரை நிருபராக பணி உயர்வு அளித்தது அந்த பத்திரிக்கை அலுவலக நிர்வாகம். படிப்படியாக பத்திரக்கை தொழிலை கற்றுக் கொண்ட அவர் பல முக்கிய நிகழ்வுகளின் செய்தி சேகரிக்கும் பணிகளுக்கு தெரிவு செய்து அனுப்பப்பட்டார்.

புகைப்பட நிபுணர்

புகைப்பட நிபுணர்

நிருபராக பணிபுரிந்து கொண்ட புகைப்படக்கலை குறித்து நுட்பங்களையும், அறிவையும் வளர்த்துக் கொண்டார். இதையடுத்து, ஸ்காட்லாந்தில் உள்ள பல பத்திரிக்கைகளில் பணியாற்றினார்.

உலகம் சுற்றும் வாலிபனான ஜான்...

உலகம் சுற்றும் வாலிபனான ஜான்...

பத்திரிக்கை துறை மூலமாக உலகின் பல நாடுகளுக்கு சென்று பணிபுரிந்தார். இதையடுத்து, 1997ம் ஆண்டு தனது 25வது வயதில், தான் சம்பாதித்து சேர்த்து வைத்த 11,000 பவுண்ட் தொகையிலிருந்து 7,000 பவுண்ட்டை எடுத்து ஃபெராரி 246 டைனா காரை வாங்கினார். இதுதான் அவரது முதல் ஃபெராரி கார்.

ஆர்வம்

ஆர்வம்

எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்த நிலையில், 1987ம் ஆண்டு பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவால், தனது முதலீடுகளை இழந்தார். இதனால், தனது ஃபெராரி காரையும் விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டார்.

தோல்வியிலிருந்து பாடம்

தோல்வியிலிருந்து பாடம்

பொதுவாக ஒரு பழமொழி சொல்வார்கள், உன் பணத்தை நீ எதில் இழந்தாயோ, அதன் மூலமாகவே அதனை எளிதாக திரும்ப பெற முடியும் என்று. அதைப்போலவே ஜான் காலின்ஸும் பாடம் கற்றார். ஆம், அவரிடமிருந்து அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்ட ஃபெராரி காரை டீலர் கொள்ளை லாபத்துக்கு கமிஷன் வைத்து விற்பனை செய்ததை அறிந்து புத்தி கற்றுக்கொண்டார்.

டீலர் ஆர்வம்

டீலர் ஆர்வம்

உடனடியாக, ஃபெராரி கார்களை வாங்கி விற்கும் டீலரை துவங்க முடிவு செய்தார். தனது நண்பர்களின் உதவியுடன், 3 லட்சம் பவுண்ட்டுகளை கடனாக பெற்று டெபாசிட் செலுத்தி 3 மில்லியன் மதிப்புடைய 10 ஃபெராரி கார்களை வாங்கி டீலரை துவங்கினார்.

முதல் டீல்

முதல் டீல்

ஃபெராரி கார்களை வாங்கி 6 மாதங்கள் கழித்து விற்பனை செய்தார் ஜான். இதன்மூலமாக, 5 லட்சம் பவுண்ட்டுகளை லாபமாக ஈட்டினார். அதிலிருந்து படிப்படியாக வளர்ந்த அவர் முதல் ஆண்டிலேயே 12 மில்லியன் பவுண்ட் மதிப்புக்கு வர்த்தகம் செய்தார்.

மீண்ட ஜான்

மீண்ட ஜான்

1990களில் டீலரிலிருந்து கவனத்தை போலோ விளையாட்டுக்கு திருப்பினார். கடந்த 2008ம் ஆண்டு போலோ விளையாடியபோது, விபத்தில் சிக்கி படுக்கையானார். சிகிச்சைக்கு பின்னர் மீண்டும் ஃபெராரி வர்த்தகத்தில் இறங்கிய அவர் செம்மையாக தனது தொழிலை கண்ணும் கருத்துமாக முன்னேற்றினார்.

வர்த்தகம்

வர்த்தகம்

மூன்று ஆண்டுகளில் 300 மில்லியன் பவுண்ட் மதிப்புடைய ஃபெராரி கார்களை அவர் விற்பனை செய்துள்ளார்.ம மேலும், 250 பதிவு எண் கொண்ட ஒரு ஃபெராரி காரை 5.18 லட்சம் பவுண்டுகளுக்கு வாங்கி ஸ்டாக் வைத்துள்ளார். என்றாவது ஒருநாள் இது 1 மில்லியன் டாலருக்கு விலை போகும் என்று அடித்துக் கூறுகிறார். இதுவரை 1,751 ஃபெராரி கார்களை அவர் விற்பனை செய்துள்ளார்.

 டீலர்ஷிப் பெயர்

டீலர்ஷிப் பெயர்

ஜான் காலின்ஸ் பற்றி இவ்வளவு நேரம் அறிந்துகொண்ட உங்களுக்கு அவர் நடத்தும் டீலர் பெயர் கண்டிப்பாக தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். TALACREST என்பதுதான் அவரது டீலர்ஷிப்பின் பெயர். சர்வதேச அளவில் வர்த்தகத்தை கொண்டு சென்றதற்காக, அவருக்கு இங்கிலாந்து ராணியிடம் இருந்து அங்கீகாரமும் கிடைத்திருக்கிறது.

சாதனை

சாதனை

ஜான் விற்பனை செய்யும் ஒவ்வொரு காரும் சராசரியாக 2 மில்லியன் பவுண்ட் மதிப்பு கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், என் ரத்தத்தில் ஃபெராரி ஓடுகிறது. ஃபெராரி காரின் ஒவ்வொரு விஷயத்தையும் காதலிக்கிறேன். ரசிக்கிறேன் என்று புலாகாங்கிதம் தெரிவிக்கிறார்.

சொத்து மதிப்பு

சொத்து மதிப்பு

இன்று ஜான் காலின்ஸிடம் ஃபெராரி கார் வாங்க வரும் பல கோடீஸ்வரர்களைவிட அதிக சொத்து மதிப்பு உடையவர் காலின்ஸ் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 1 மில்லியன் பவுண்ட்டுகளுக்கும் அதிகமான மதிப்புடைய கார்களை விற்பனை செய்துள்ளாராம் ஜான் காலின்ஸ்.

மூடப்பட்ட செவர்லே டீலருக்கு அடித்த ஜாக்பாட்

மூடப்பட்ட செவர்லே டீலருக்கு அடித்த ஜாக்பாட்

 

மேலும்... #ஆஃப் பீட் #offbeat
English summary
A British High School dropout has made it to the rich list by selling more than £1 BILLION worth of desirable cars.

Latest Photos

 

வாகனச் செய்திகளை உடனுக்குடன் பெற டிரைவ்ஸ்பார்க்
Tamil Drivespark

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Drivespark sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Drivespark website. However, you can change your cookie settings at any time. Learn more