வெயிலில் நிறுத்தினால் பேரிச்சம் பழத்துக்கு கூட தேறாது! கார்ல இவ்ளோ பிரச்னைகள் வருமா! முன்னாடியே தெரியாம போச்சே
காரில் எங்கேயாவது வெளியில் செல்வதாக இருந்தால், பாதுகாப்பாக பார்க்கிங் செய்ய போதிய இடவசதி இருக்கிறதா? இல்லையா? என்பதை நினைத்து பலர் கவலைப்படுவார்கள். நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், காரின் பெயிண்ட் விரைவாக மங்கி விடும் என்ற அச்சம்தான் இதற்கு காரணம். இந்தியா போன்ற வெயில் சுட்டெரிக்கும் நாடுகளில் இந்த பிரச்னை பலருக்கும் உள்ளது.
ஆனால் கார் நீண்ட நேரம் வெயிலில் நின்றால், பெயிண்ட் மட்டுமே மங்கும் என நீங்கள் நினைத்து கொண்டிருந்தால், அது தவறு. ஏனெனில் இன்ஜின், டயர் மற்றும் பேட்டரி என காரின் மிக முக்கியமான பாகங்கள் பலவும், அதிகப்படியான சூரிய வெளிச்சத்தால் பாதிக்கப்படலாம். நீங்கள் உங்கள் காரை சுட்டெரிக்கும் வெயிலில் நீண்ட நேரம் நிறுத்தி சென்றால், என்னென்ன பிரச்னைகள் எல்லாம் ஏற்படும்? என்பதை இந்த செய்தியில் விளக்கமாக கூறியுள்ளோம்.

இன்ஜின்
உங்கள் கார் அதிக வெப்ப நிலையில் நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், இன்ஜினின் முக்கியமான ஃப்ளூயிட்கள் மற்றும் லூப்ரிகண்ட்கள் வேகமாக தீர்ந்து போகலாம். இந்த பிரச்னை குளிர்காலத்தை விட கோடை காலத்தில் மிகவும் அதிகமாக ஏற்படும். இதன் காரணமாக இன்ஜினில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படலாம். இன்ஜின் செயலிழந்து போவதற்கான வாய்ப்புகள் கூட இருக்கின்றன. எனவே நீங்கள் அடிக்கடி காரை வெயிலில் நிறுத்துபவர் என்றால், சீரான இடைவெளிகளில் இன்ஜின் ஆயிலை மாற்றி விடுங்கள். அத்துடன் ரேடியேட்டரில் தண்ணீர் அளவையும் அவ்வப்போது பரிசோதித்து கொள்ளுங்கள்.
டயர்கள்
மிகவும் அதிகமான வெப்ப நிலையானது, டயர்களில் உள்ள ரப்பரை உலர செய்து, அவற்றை பலவீனமாக்கி விடும். மேலும் கார் நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், டயர்களின் பக்கவாட்டு பகுதி மற்றும் த்ரெட் பகுதிகளில் விரிசல்கள் ஏற்படலாம். டயர் வெடிப்பு போன்ற சம்பவங்களுக்கு இது வழிவகுக்கும். அத்துடன் அதிகப்படியான வெப்பம் காரணமாக, டயர் பிரஷர் அதிகரிக்கலாம். இது சத்தம் மற்றும் அதிர்வுகள் ஏற்பட காரணமாக அமையும். எனவே கார் ஓட்டும்போது, மோசமான அனுபவம் ஏற்படலாம்.

பேட்டரி
தண்ணீர் மற்றும் ஆசிட் இருப்பதால், அதிகப்படியான வெப்ப நிலையில் உங்கள் காரின் பேட்டரியும் கடுமையாக பாதிக்கப்படலாம். கார் நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், தண்ணீர் ஆவியாவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன. இது பேட்டரியை வேகமாக பலவீனமாக்கி விடும். பேட்டரி பலவீனம் அடையும்பட்சத்தில், வெப்ப நிலை குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்படும்போது, உங்களால் காரை ஸ்டார்ட் செய்ய முடியாது. நீங்கள் கடுமையாக சிரமப்பட வேண்டியிருக்கும்.
இன்டீரியர்
உங்கள் கார் நீண்ட நேரம் வெயிலில் நின்று கொண்டிருந்தால், உட்புறம் வேகமாக சூடாகி விடும். வெளிப்புறத்தில் இருக்கும் வெப்ப நிலையை விட, காரின் உள்ளே வெப்ப நிலை கூடுதலாக இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது. வெளிப்புறத்தில் 38 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலை இருக்கிறது என்றால், காரின் உள்ளே 62 டிகிரி செல்சியஸ் வரை வெப்ப நிலை உயர வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீங்கள் கார் கதவுகளை அடைத்து விட்டு, ஒரு மணி நேரம் வெயிலில் விட்டு சென்றாலே, காரின் இன்டீரியர் இந்த அளவிற்கு கடுமையான வெப்ப நிலையை எட்டி விடும் என அந்த ஆய்வுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகப்படியான வெப்ப நிலை, டேஷ்போர்டில் விரிசலை ஏற்படுத்தலாம். அத்துடன் சீட் கவர்களும் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. இதுபோன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், உங்கள் காரின் ரீ-சேல் வேல்யூ வெகுவாக குறைந்து விடும்.
எப்படி தவிர்ப்பது?
முடிந்த வரை காரை நிழலில் நிறுத்துவதுதான், இது போன்ற பிரச்னைகளை தவிர்ப்பதற்கான எளிமையான வழி. உங்கள் அலுவலகத்தில் முறையான பார்க்கிங் வசதி இல்லை என்றால், காரில் செல்வதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் தினமும் 8 மணி நேரத்திற்கு மேலாக கார் வெயிலில் நின்று கொண்டிருந்தால், இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்க முடியாது. காருக்கு பதிலாக மாற்று போக்குவரத்து வழிகளை நீங்கள் பரிசீலனை செய்யலாம்.


Click it and Unblock the Notifications