காலங்கார்த்தாலே பெட்ரோல் நிலையத்தில் கடுப்பேற்றிய பழைய ரூபாய் நோட்டு!
இன்று காலை எமது சக பணியாளர் அலுவலகம் வரும்போது, வாகனத்திற்கு எரிபொருள் நிரப்புவதற்கு பெட்ரோல் நிலையம் சென்றிருக்கிறார். காலை நேரம் என்பதால், அங்கு கூட்டம் அதிகமிருந்திருக்கிறது. எரிபொருளை நிரப்பியவுடன், பில்லிற்கு உண்டான தொகையை கொடுத்திருக்கிறார்.
அதிலிருந்த ஒரு நூறு ரூபாய் நோட்டு செல்லத்தக்கது அல்ல என்று அங்கிருந்த பணியாளர் திருப்பி கொடுத்துவிட்டார். அவரிடம் வேறு ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு, அந்த நூறு ரூபாய் நோட்டு பற்றி ஆராயும்போது அது பழைய ரூபாய் நோட்டு என தெரியவந்துள்ளது. இதுபற்றி அவர் பேசிக்கொண்டிருந்த போது, பழைய நோட்டு பிரச்னையால் அனேகம் பேர் பாதிக்கப்படுவது குறித்த கருத்துக்கள் எழுந்தன.
புதிய கார்களின் ஆன்ரோடு விலை விபரம்!
அவசரத்தில் நூறு ரூபாயை மட்டும் வைத்துக் கொண்டு செல்லும் பலர் இந்த பழைய ரூபாய் நோட்டு பிரச்னையால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.இதேபோன்று, பழைய ரூபாய் நோட்டு போன்ற கள்ளநோட்டைு புழக்கத்தில் இருக்கிறது. அதுபோன்ற ஒரு கள்ளநோட்டுதான் எமது சக பணியாளரிடம் நேற்று கைக்கு வந்திருக்கிறது. எனவே, ரூபாய் சின்னம் இல்லாமல் இருக்கும் நோட்டை வாங்கும்போது கவனமாக இருக்கவும். பழயை ரூபாய் நோட்டுகள் மற்றும் கள்ளநோட்டு அபாயம் இருப்பதை உணர்ந்து கவனமாக இருங்கள்.


Click it and Unblock the Notifications